புனித ரம­லான் மாதத்தை முன்னிட்டு பல சமய அமைப்­புகள் அரிசி நன்கொடை

இஸ்லாமி­யர்கள் மாதம் முழு­தும் நோன்பு நோற்­கும் புனித ரம­லான் மாதத்தை முன்னிட்டு வசதி குறைந்த­வர்­க­ளுக்கு உத­வும் நோக்­கில் 35,000 கிலோ அரிசியை சிங்கப்பூர் பௌத்த மடாலயம் (புத்­திஸ்ட் லாட்ஜ்) நன்கொடையாக வழங்கியுள்­ளது.

புக்­கிட் திமா பகுதி அருகே லூவிஸ் சாலை­யில் அமைந்­து­ள்ள ப'அல்வி பள்ளிவாச­லில் கடந்த திங்கட்கிழமை அந்த அரிசி நன் கொடை வழங்­கும் நிகழ்வு இடம் பெற்றது.

சிங்கப்பூர் பௌத்த மடால­யத் தின் தலை­வர் டான் லீ ஹுவாக், ப'அல்வி பள்ளிவாச­லின் இமாம் சையது ஹசான் அல்-அத்­தாஸிடம் நன்கொடையை வழங்கி­னார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் பௌத்த மடா லயம் ரம­லான் மாதத்தை முன் னிட்டு அரிசியை பெருமள­வில் நன்கொடையாக வழங்கி­வருகிறது.

சிங்கப்பூர் பௌத்த மடால­யத் தின் மறைந்த முன்னாள் தலைவ ரும் சமய நல்லிணக்­கத் தூது­வரும் கொடை வள்ளலு­மான திரு லீ போக்­ குவான் முதல் முறையாக ஆறு ஆண்டு­க­ளுக்கு முன்­னர் அரிசி நன்கொடை திட்­டத்தைத்­ தொடங்கிவைத்­தார். அந்த ஆண்டு 32,000 கிலோ அரிசியை ப'அல்வி பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்­திருந்­தார்.

அன்று முதல் ஏறத்தாழ 180 டன்னுக்கு மே­லான அரிசியை சிங்கப்பூர் பௌத்த மடாலயம் கொடையாக வழங்கியுள்­ளது.

அவ­ரது நன்கொடைத்­ திட்­டத் தைத்­ தொடர்ந்து மேற்கொள்ள வேண்­டும் என்ற எண்­ணத்­தில் சிங்கப்பூர் பௌத்த மடாலயம் ஆண்டுதோ­றும் இந்தச்­ சேவை­யில் இறங்கியுள்­ளது.

வசதி குறைந்த­வர்­க­ளும் மகிழ்ச்­சியு­டன் விழாக்கா­லத்தைக்­ கழிக்கவேண்­டும் என்ற மறைந்த திரு லீயின் கொள்கையை அந்த அமைப்பு நிறைவேற்றி­ வருகிறது.

வழங்கப்பட்ட 35,000 கிலோ அரிசி­யும் தீவெங்­கும் உள்ள பள்ளிவாசல்­க­ளுக்­குத்­ தேவைக்­ கேற்ப வழங்கப்­படும் என்று இந்த அரிசி நன்கொடை விநியோக திட்­டத்­தில் தொண்டூழியராகச்­ சேவையாற்­றும் ஐக்­கிய இந்திய முஸ்லிம் சங்­கத்­தின் தலைமை அதிகாரி திரு ஹாஜா மைதீன் குறிப்­பிட்­டார்.

பள்ளிவாசல்கள் ரம­லான் மாதத்­தில் தினந்தோ­றும் சமை­க்­கப் படும் நோன்புக்­ கஞ்சிக்காக நன் கொடையாக வழங்கப்­படும் அரிசி யில் ஒரு பகுதி பயன்­படுத்தப்­படும்.

பள்ளிவாசல்­க­ளில் இலவசமாக விநியோகி­க்­கப்­படும் நோன்புக்­ கஞ்சிக்­குத்­ தேவைப்­படும் அரிசி யின் ஒரு பங்கை இது பூர்த்தி செய்­யும் என்று நம்பப்­படுகிறது.

­நன்கொடை அரிசி­யில் மற் றொரு பகுதி பள்ளிவாசல்­க­ளில் உதவி கேட்டு வரும் வசதி குறைந் தோருக்கு வழங்கப்­படும். ரம­லான் மாதத்­தில் தின­மும் 1000க்­கும் மேலான வசதி குறைந்த­வர்­களை இந்த அரிசி சென்றடை­யும் என்று நம்பப்­படுகிறது.

இவ்­வாண்டு ரம­லான் மாதம் மே மாதம் ஆறாம் தேதி தொடங் குகிறது.

அதனை­யொட்டி மேலும் பல அமைப்­புகள் தங்கள் உதவிக்­ கரத்தை நீட்டி­வரு­கின்றன.

அமிதாபா புத்தர் சங்க­மும் 20,000 கிலோ அரிசியை நன் கொடையாக வழங்கவிருப்பதாக உறுதியளித்­துள்­ளது.

­நன்கொடை வழங்­கும் நிகழ்ச்சி ­வரும் சனிக்­கிழமை ப'அல்வி பள்ளிவாச­லில் நடைபெறவுள்­ளது.

­நன்கொடை அளிக்கவி­ரும்­பும் இதர அமைப்­பு­க­ளும் நன்கொடை பெற விரும்பு­வோம் வசதி குறைந்த பொதுமக்­க­ளும் இத்­திட்­டத்­தின் தொண்டூழி­யர் திரு ஹாஜா மைதீனை 97862574 எனும் எண்­ணில் தொடர்புகொள்ளலாம் என்­றும் தெரிவி­க்­கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!