மனிதநேயத்திற்கு எதிரான தாக்குதல்கள்: மக்கள் உருக்கம்

இலங்கையில் சில வாரங்களுக்கு முன், ஈஸ்டர் ஞாயிறு நாளன்று தேவாலயங்களிலும் ஹோட்டல் களிலும் நடத்தப்பட்ட பயங்கர வாதத் தாக்குதல்களில் மாண்ட வர்களுக்கு சிங்கப்பூரில் கடந்த வாரம் சனிக்கிழமை பல்வேறு சமயங்களையும் சேர்ந்த நூற்றுக் கணக்கானோர் ஒன்றுதிரண்டு அஞ்சலி செலுத்தினர்.

பௌத்த, இஸ்லாமிய, இந்து, கிறிஸ்துவ சமயங்களைச் சார்ந்த அந்த மக்கள், உலக அமைதியைச் சீர்குலைத்து, அப்பாவி உயிர் களைக் காவுகொள்ளும் பயங்கர வாதத் தாக்குதல்களை வன்மை யாகக் கண்டிப்பதாக ஒருசேர குரல் கொடுத்தனர்.

சமய நம்பிக்கைகள் வெவ்வே றாக இருந்தாலும் வேற்றுமையில் பலம் காணும் நிலைப்பாட்டை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஐநூற்றுக்கும் மேற் பட்டோர் உறுதியளித்தனர்.

இலங்கைத் தூதரகம், சிலோன் விளையாட்டு மன்றம், சிங்கப்பூர் இலங்கை வர்த்தகச் சங்கம், இலங்கை லயன்ஸ் கிரிக்கெட் மன்றம், ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், சிலோன் தமிழர் சங்கம், சிங்கப்பூர் சிங்களச் சங்கம், சிங் கப்பூர் சிங்கள பௌத்த சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

ஒரு நிமிட மௌன அஞ்சலிக் குப் பிறகு நான்கு சமயத் தலைவர் கள் தங்களின் சமய முறைப்படி பிரார்த்தனை செய்தனர்.

வந்திருந்த அனைவரும் ஒவ் வொரு சமயத்தின் பிரார்த்தனை யிலும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். சிறப்பு விருந்தினராக சிங்கப்பூருக்கான இடைக்கால இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் கலந்துகொண்டார்.

இலங்கையில் நிகழ்ந்த பயங்கர வாதத் தாக்குதல்கள் மனிதநேயத் திற்கு எதிரானவை என்றும் மாண்டவர்களில் பல்வேறு சமயத் தினரும் அடங்குவர் என்றும் குறிப்பிட்ட அவர், சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முனைவோரை விட்டுவிடக்கூடாது என்றும் இந்தத் துயரமான சூழலில் நாம் ஒற்றுமையாக இருந்து மீண்டெழ வேண்டும் என்றும் வலியுறுத்தி னார்.

பெற்றோர்கள் சிறுவயதிலேயே பிள்ளைகளிடம் சமய நல்லிணக் கத்தை விதைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

விழாவின் இறுதியில் வந்திருந் தோர், மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் சார்பில் துணை முஃப்தி டாக்டர் நஸிருதீன் முகமது நசீர் உரையாற்றினார்.

பயங்கரவாத சிந்தனைகளையும் கொள்கைகளையும் கொண்டவர் களை இஸ்லாமிய சமூகம் என்றும் ஏற்காது என்று அவர் கூறினார்.

"இலங்கையில் நடந்த தாக்கு தல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. அவர்களின் கொடூரச் செயலால் இஸ்லாம் மீது பயமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது," என்றார்.

நம் சமுதாயத்தில் இந்த வன் முறைக் கொள்கைகளுக்கு இடம் தரலாகாது என்று அவர் வேண்டு கோள் விடுத்தார்.

"சமூகத்தில் மக்கள் நல்லிணக் கத்தோடு வாழ்வதை கெடுக்க நினைத்தால், நாம் என்றுமில்லாத வகையில் வலுவான நட்புறவோடு, மனிதாபிமானத்தோடு சேர்ந்திருப் போம்," என்று அவர் கூறினார்.

"சமய வேறுபாடு பாராது பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சி அளிக் கிறது," என்றார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற திரு செந்தில்குமார்.

"நிகழ்ச்சி குறித்த விவரங்களை சமூக ஊடகம் மூலம் தெரிந்து கொண்டேன். இத்தனை பேர் வரு வார்கள் என எதிர்பார்க்கவில்லை. மனநிறைவுடன் அஞ்சலி செலுத்தி னேன்," என்றார் மற்றுமொரு வரு கையாளரான எஸ் மனோகரன்.

செய்தி:

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!