கவிமாலையின் ‘கவிதையும் கானமும்’

தமிழ் மொழி சிங்கப்பூரில் வாழும் மொழியாக என்றும் திகழ நாம் அனைவரும் ஒன்றுபட்ட சமூகமாக பாடுபடவேண்டும் என்றும் தமிழ் மொழி விழாவின் சாதனைகள் ஆண்டுதோறும் தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்‌‌ஷாத்.

கவிமாலை அமைப்பின் ஏற் பாட்டில் நடந்த 'கவிதையும் கானமும்' நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அவர் பேசினார்.

"கவிதை மூலமாக சிங்கப்பூரில் தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் காப்பதற்கும் கவிமாலை அமைப்பு கடந்த 19 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறது. குறிப்பாக அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கவிதைப் பயிற்சி பட்டறைகள் நடத்தி, கவிதையின் எழுத்துகளையும் எழுத்துக் கலை யையும் சொல்லிக் கொடுத்து, அதில் போட்டிகள் நடத்தி, வெற்றி பெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கி ஊக்குவிப் பதையும் பாராட்டுகிறேன்.

"இது எதிர்கால சந்ததியின ருக்குப் பயனுள்ள ஒரு சேவை யாகும்," என்றார் திரு இர்‌‌ஷாத்.

தமிழ்மொழி விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இந்நிகழ்வு ஏப்ரல் 28ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்தேறியது.

ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர். ராஜாராமின் தமிழ் மொழி விழா நிறைவு உரையும் இடம்பெற்றது.

தமிழ் மொழி விழாவின் வளர்ச் சியைச் சுட்டிய அவர், 2007ஆம் ஆண்டில் இவ்விழா தொடங்கிய போது 13 அமைப்புகளின் ஏற் பாட்டில் 8 நிகழ்ச்சிகள் இடம் பெற்றன என்றார்.

13வது முறையாக இவ்வாண்டு நடைபெறும் விழா 43 அமைப்பு களையும் 46 நிகழ்வுகளையும் உள்ளடக்கி உள்ளது என்று குறிப் பிட்டார்.

"வளர்ச்சி என்று நான் குறிப் பிடுவது நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அல்ல, அது எங்க ளுடைய இலக்கும் கிடையாது," என்றார் திரு ராஜாராம்.

அருகிவரும் பொம்மலாட்டக் கலையைக் காட்சிப்படுத்திய சியாமா அமைப்பு, தமிழகத்தில் இருந்து வந்த 'எஸ்பி கிரியே ஷன்ஸ்' குழு அரங்கேற்றிய 'பாரதி யார்' மேடை நாடகம், இந்தியப் பாரம்பரிய உணவின் அருமை பெருமைகளை வெளிப் படுத்தும் வகையில் லி‌‌ஷா பெண்கள் பிரிவு நடத்திய 'கல் யாண சமையல் சாதம்', சிங்கப்பூர் இளைஞர்களின் பங்கேற்பில் அரங்கேறிய நிகழ்ச்சிகள் போன்ற வற்றைப் பற்றி தமது உரையில் விளக்கினார் திரு ராஜாராம்.

விருதுகள்

கணையாழி விருது கவிஞர் பாத்தென்றல் முருகடியானுக்கும் 'ஞயம்படச் சொல்' என்ற நூலுக் காக சிறந்த கவிதை நூல் தங்கப்பதக்கம் கவிஞர் இன்பா விற்கும் சிறந்த இளங்கவிஞர் தங்கமுத்திரை விருது கவிஞர் ஜோசஃப் சேவியருக்கும் வழங்கப் பட்டன.

அத்துடன் சிங்பொரிமொ கவிதைப் போட்டி வெற்றியாளர்கள், இசைப்பாடல் எழுதியவர்களுக்கும் பாடியவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. கவிஞர்கள் ஜோ, சியாம் சுந்தர், பாத்தேறல் இளமாறன், மா.அன்பழகன், கருணாகரசு, கோ.இளங்கோவன் ஆகியோர் எழுதிய கவிதைகளும் அங்கீகரிக்கப்பட்டன.

"கவிதையும் கானமும்" இசைத் தொகுப்பின் சங்கீத ஆசி ரியர் டாக்டர் பாக்கியா மூர்த்தியின் வழிகாட்டுதலில் 20க்கும் மேற்பட்ட மாணவர்களின் 6 இசை படைப் புகள் நேரடியாக அரங்கேற்றப் பட்டன.

அதுபோக 'பிக் பாஸ்' நிகழ்ச்சி புகழும் திரைப்பட பாடலாசிரியரு மான திரு சிநேகன் 'திரைத்தமிழ்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

"41 நாடுகள், ஏறத்தாழ 8,400 மேடைகள், 21 தமிழ்ச் சங்கங் களைப் பார்த்துவிட்டு வந்திருக் கிறேன். ஆனால் 43 அமைப்புகள் சேரும் இந்த மேடை என்னை மிகப்பெரிய ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது," என்றார் திரு சிநேகன்.

பல திரைப்பாடல்களை பாடிக் காட்டிய திரு சிநேகன், இசையோடு கலந்த கவிதைகள் இக்காலத்தில் பெரும் வரவேற்பைக் காண்கின்றன என்று குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!