விரயம் தடுத்து சமூகத்திற்குத் தொண்டு 

சந்தையில் விற்பனையாகாத அல் லது சற்று வாடிய நிலையில் இருந்தாலும் உட்கொள்ளக்கூடிய காய்கறிகளும் பழங்களும் வீசப் படுகின்றன. அந்த உணவுவகை களைத் தேவைப்படுவோருக்கு கொடுத்தால், அவை வீணாக குப் பைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம் என்ற நோக்கத்தில், 'எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ' என்ற குழு தொடங் கப்பட்டது.

அழகான தோற்றம் இல்லாவிட் டாலும் இன்னமும் உட்கொள்ளக் கூடிய நல்ல நிலையில் இருக்கும் காய்கறிகளையும் பழங்களையும் பாசிர் பாஞ்சாங் மொத்த கொள் முதல் நிலையத்திலிருந்து இக்குழு சேகரிக்கும். இவற்றின் எடை ஒன் றிலிருந்து இரண்டு டன் இருக்கும். 'எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ' குழு அவற்றை உணவகங்களுக்கும் அறநிறுவனங்களுக்கும் இலவச மாக வழங்கி வரும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதே சிந்தனையோட்டத்தில் வீட்டிற்கு வாங்கிய காய்கறிகளை யும் பழங்களையும் பயன்படுத்தாத நிலை ஏற்படும்போது, அவற்றை ஒரு நல்ல சமூகத் திட்டத்திற்கு உபயோகிக்கலாமே என்று 40 வயது திருமதி தனலட்சுமி மோகன் நினைத்தார்.

திட்டத்தின் தொண்டூழியரும் ஸெங்ஹுவா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் உறுப் பினருமான இவர், தம் வட்டாரத் தில் உள்ள வசதி குறைந்த குடி யிருப்பாளர்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை விரும் பினார். தம் 21 வயது மகள் செ.வாணிஸ்ரீ செல்லத்தின் உதவி யோடு தமது செயற்குழுவிடம் இத்திட்டத்தைப் பரிந்துரை செய் தார் தனலட்சுமி.

அவரது திட்டத்தை வரவேற்ற ஸெங்ஹுவா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, இந்த உணவு விநியோகத் திட்டத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத் தில் அமல்படுத்தியது.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி சனிக்கிழமை அன்று இக்குழு செஞ்சா அடுக்குமாடிக் கட்டடங் களான புளோக் 632A, 632B, 634A, 634B ஆகியவற்றில் வசிக் கும் வசதி குறைந்த குடியிருப் பாளர்களுக்குக் காய்கறிகளுடன் இதர வீட்டு மளிகைப் பொருட் களையும் சேர்த்து இலவசமாக வழங்கி வரத் தொடங்கியது.

சனிக்கிழமை காலையில் செயற்குழுவைச் சேர்ந்த தொண் டூழியர்கள் பாசிர் பாஞ்சாங் மொத்த கொள்முதல் நிலையத் திற்குச் சென்றுவிடுகிறார்கள்.

'எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ' தொண்டூழியர்கள் அங்கு ஏற் கெனவே காய்கறிகளைச் சேகரித்து வைத்திருப்பர்.

பின்னர் செஞ்சா குடியிருப்பாளர் களுக்காக நற்பணிச் செயற்குழு வினர் எடுத்துச் செல்ல தேவை யானவை தனியே ஒதுக்கி வைக் கப்படும்.

'எங்கள் தொண்டூழியர்கள் பாசிர் பாஞ்சாங் கொள்முதல் நிலையத்தின் கடை உரிமையாளர் களிடமிருந்து தேவையில்லாத காய்கறிகளைத் திரட்டி, அவற்றை வண்டிகளில் விநியோகம் செய் யவும் உதவுகின்றனர்," என்று தெரிவித்தார் 'எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ' குழுவின் இணை நிறு வனர் திரு லயனல் தே.

அவர் கொடுத்த தகவல்படி, ஒவ்வொரு முறையும் 200 கிலோ கிராம் காய்கறிகள், ஸெங்ஹுவா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற் குழுவுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

சேகரிக்கப்பட்ட காய்கறிகளை நற்பணித் தொண்டூழியர்கள் தங் களின் வாகனங்களில் செஞ்சா வட்டாரத்திற்கு எடுத்துச் செல்வர்.

அதனைத் தொடர்ந்து அடுக்கு மாடி கீழ்த்தளத்தில், காய்கறி களை அடுக்கும் பணியில் கிட் டத்தட்ட 15 நற்பணித் தொண் டூழியர்கள் கூட்டாக ஈடுபடுவர்.

குடியிருப்பாளர்கள் இவர்களின் வருகையை எதிர்பார்த்து முன் கூட்டியே வரிசை பிடித்து நிற்கத் தொடங்கிவிடுவர். இளமைத் துள்ளலுடன் தொண்டூழியர் படை விறுவிறுவென்று பொட்டலங்களை நிரப்பி அவற்றை வழங்குவதற்குத் தயாராக்கிவிடுவர். சில நேரங் களில் ஆதரவாளர்கள் வழங்கும் அரிசி போன்ற மளிகைப் பொருட் களும் பொட்டலத்தில் சேர்க்கப் படுகின்றன.

தளவாட ஏற்பாடுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் 42 வயது தொண்டூழியர் திரு காந்தி சுப்பிரமணியன் ஆறுமுகம், தம் மைத் தவிர்த்து தமது சொந்த நிறுவன ஊழியர்களும் அந்த மளிகைப் பொருட்களை எடுத்து வரப் பங்களிக்கின்றனர் என்றார்.

விநியோகம் குறித்து ஒரு நாள் முன்னரே தொண்டூழியர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங் களை அடுக்குமாடி குடியிருப்பாளர் களுக்கு விநியோகம் செய்துவிடு வர். இன வேறுபாடு இன்றி வசதி குறைந்த குடும்பங்களுக்கு இந்த உணவுப்பொருட்கள் போய் சேர் கின்றன என்றும் ஸெங்ஹுவா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திரு ராஜேந்திரம் ராஜு, 48, கூறினார்.

தள்ளுவண்டியில் வந்து காய் கறிகளைப் பெற்றுக்கொண்ட செஞ்சா குடியிருப்பாளர் திருவாட்டி மேரி பேபி ஏசம்மாள், 70, கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தின் வழி பயனடைந்து வருகிறார்.

நடமாடச் சிரமப்படும் இவர், வீட்டிலிருந்து வெகுதூரத்திலுள்ள பாங்கிட் பகுதியில்தான் பெரிய சந்தை உள்ளதாகவும் அவ்வளவு தூரம் சென்று காய்கறிகளை வாங்குவது தமக்குச் சிரமமான ஒன்று என்றும் கூறினார்.

நீண்ட தூரம் செல்லாமல் தாம் குடியிருக்கும் அடுக்குமாடியின் கீழ்த்தளத்தில் இலவசமாக காய் கறிகள், பழங்கள் கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறார் இந்த முதிய வர். குடியிருப்பாளர்களின் நன்றி அவர்களின் புன்னகை வழி வெளிப்படுவதைக் காண ஒவ் வொரு மாதமும் இம்முயற்சியில் ஈடுபடுவதாகச் சொன்னார் நற் பணித் தொண்டூழியரான இளை யர் செ.வாணிஸ்ரீசெல்வம்.

இத்திட்டத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் செயல்படுத்த ஸெங்ஹுவா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவினர் கடப் பாடு கொண்டுள்ளனர்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி னால் மேலும் பலர் பலனடைவார்கள் என்று திரு ராஜேந்திரம் ராஜு கூறினார். அதிகமான தொண் டூழியர்களும் ஆதரவாளர்களும் இணைந்தால் ஏனைய இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் மூல மாக பல பகுதிகளிலும் இத்திட் டத்தைச் செயல்படுத்தலாம் என் றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!