‘எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ’ தொண்டூழியர் குழு

தினமும் உட்கொள்ளக்கூடிய உணவுவகைகள் டன் கணக்கில் தேவைப்படாமல் வீசப்படுகின்றன. அதே சமயம், அதிக ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ள முடியாத நிலையில் வசதி குறைந்த குடும்பங்கள் சில சிங்கப்பூரில் உள்ளன. எப்படி உணவை விரயமாக்காமல், வசதி குறைந்த குடும்பங்களுக்கும் போய் சேரும் படி உதவலாம் என்ற சிந்தனையில் தான் ‘எஸ்ஜி ஃபூட் ரெஸ்கியூ’ குழு சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தோற்றம் கண்டது.

குழு உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் டேனியல் தே. இவரைப் பொறுத்தவரை, சிங்கப்பூருக்கு இறக்குமதியாகும் உணவுப்பொருட்களின் மூன்றில் ஒரு பங்கு சந்தைக்கும் பேரங் காடிக்கும் விற்பனைக்கு வைக்கப் படுவதில்லையாம். 

 

கவர்ச்சியற்ற தோற்றம், அதிகம் பழுத்தல், ஆங்காங்கே சற்று முற்றிய நிலை, ஒரு பகுதி மட்டும் அழுகி இருத்தல் போன்ற காரணங் களின் அடிப்படையில் மொத்த கொள்முதல் வியாபாரிகள் இந்த உணவுப் பொருட்களை நிராகரித்துவிடுகின்றனர். ஆனால் இவற்றை வீசத்  தேவை இல்லை.  இவற்றை வசதி குறைந் தோருக்குப் போய்ச் சேர்த்திட, ஆள்பலத்தையும் வாகனங்களை யும் குழுவினர் திரட்டி ஏற்பாடு செய்தனர். கடந்த ஆண்டு இறுதி வரை கிடைத்த தகவலின்படி, அங் மோ கியோ, தோ பாயோ வாடகை வீட்டு குடியிருப்பாளர்கள், ‘ஸ்ரீ நாராயண மிஷன்’, ‘பியாண்ட் சோ‌ஷியல் சர்விர்சஸ்’ போன்ற பல்வேறு பங்காளித்துவ அமைப்பு கள் இத்திட்டத்தின் வழி பலன் அடைந்துள்ளனர். 

பாசிர் பாஞ்சாங் கொள்முதல் நிலையத்தைத் தவிர்த்து, லிட்டில் இந்தியா போன்ற பகுதிகளிலும் காய்கறிகளைக் குழுவினர் சேகரிக்கின்றனர். சில வேளைகளில், சேகரிக்கப்படும் காய்கறி களில் ஒரு குறிப்பிட்ட அளவைத் தங்கள் சொந்த உபயோகத்திற்காக வீட்டுக்கும் எடுத்துச் செல்கின் றனர்.