லிஷா பெண்கள் பிரிவின்  ‘கல்யாண சமையல் சாதம்’ 

இந்திய பாரம்பரிய உணவின் சிறப்புகளை மற்ற இனத்தவர் களுக்கு விளக்குவது முக்கியம் என்றும் இந்தியர்களில்கூட, குறிப்பாக இளையர்களுக்கு இந்திய பாரம்பரிய உணவு முறைகளைப் பற்றி விளக்குவது, அடுத்தடுத்த தலைமுறையின ருக்குச் செய்யும் நற்சேவை என்றும் தெரிவித்தார் லிஷா பெண்கள் பிரிவின் தலைவரான திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி.

லிஷா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’ என்ற நிகழ்ச்சி சையது ஆல்வி சாலையில் அமைந்துள்ள ஆனந்த பவன் உணவகத்தில் நடந்தது.

இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 120 பேர் கலந்துகொண்டனர். வாழையிலையில் பல்சுவை தென் இந்திய உணவுகளை பங்கேற்பாளர் கள் ருசித்தனர்.

இந்திய உணவு வகைகளைச் சாப்பிடும், பரிமாறும் முறைகளையும் அதன் மருத்துவ நன்மைகளையும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

“இந்திய உணவு வகைகளை உண்ண எனக்கு அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பெரும்பாலும் திருமணம் அல்லது முக்கிய இந்திய நிகழ்வுகளுக்குச் செல்லும்போதுதான் அவற்றை உண்பேன். இதுவரை இந்திய உணவுகள் எப்படி தயாரிக்கப் படுகின்றன, ஏன் குறிப்பிட்ட முறைகளில் உண்ணப்படுகின்றன என்பது போன்ற தகவல்கள் தெரியாமல் இருந்தன. இவை போன்ற பல தகவல்களை இந்த நிகழ்ச்சியில் தெரிந்துகொண் டேன்,” என்றார் மலாய் பெண்ணான நூர் ஃபிர்டியானா, 33. அன்று வழங்கப்பட்ட ரசமும் உருளைக்கிழங்கு சாதமும் தமக்கு மிகவும் பிடித்துப்போனதாகச் சொன்னார் அவர்.

“தமிழ் மொழி விழாவில் ஒவ்வோர் ஆண்டும் லிஷா பெண்கள் பிரிவு புதுமையான நிகழ்ச்சியை வழங்க முனைகிறது. குறைந்தது 50 விழுக்காடாவது மற்ற இனத்தவர்களை உள்ளடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தோம்,” என்றார் திருமதி ஜாய்ஸ்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யொங் கலந்துகொண்டார். டாக்டர் சீதா லட்சுமி சிறப்புப் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!