கின்னஸ் சாதனையில் ‘ஏவா’ மாணவர்கள்

வானில் பறப்பதுபோல் தன் னம்பிக்கையுடன் வான்வெளி சாகசம் செய்து உலக சாதனை புரிந்தன ‘ஏவா’ எனப்படும் ஆசிய பெண்களின் நல்வாழ்வுச் சங்கமும் ‘ஐஃபிளை’ சிங்கப்பூர் நிறுவன மும்.

சிறப்புத் தேவையுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் ‘ஏவா’ 2021ஆம் ஆண்டில் தொடங்கவிருக்கும் அதன் இரண்டாவது பள்ளிக்கு ‘ஐஃபிளை’ சிங்கப்பூர் நிறுவனத் துடன் இணைந்து நிதி திரட்டு நிகழ்ச்சி ஒன்றை நேற்று முன்தினம் செந்தோசாவில் உள்ள ‘ஐஃபிளை சிங்கப்பூர்’ நிறுவனத்தில் நடத் தியது.

அங்கு ‘ஏவா’வைச் சேர்ந்த மாணவர்கள், தொண்டூழியர்கள், ஆசிரியர்கள் ஐஃபிளை’ தூதர்கள் என 80 பேர் கொண்ட குழு ஒன்று நான்கு மணி நேரத்திற்குள் 300 வான்வெளி சாகசங்களை தொடர்ச்சியாகச் செய்து முடித்து ஆக அதிக வான்வெளி சாகசம் புரிந்ததற்கான ‘கின்னஸ்’ உலக சாதனையைப் படைத்தனர். இந்த சாகச நிகழ்ச்சியில் பறந்தவர் களுக்குப் பயிற்றுவிப்பாளர்கள் உதவி புரிந்தனர்.

வான்வெளி சாகசம் புரிந்த வர்களில் ஒருவரான ‘ஏவா’ பள்ளியைச் சேர்ந்த 12 வயது மாணவர் ஷரண்தேவ் ஜூட் இந்த சாகசத்தை உற்சாகத்துடன் செய்ததாகவும் அதை வெற்றி கரமாக முடித்ததில் பெருமை அடைந்ததாகவும் குறிப்பிட்டார்.

அவரின் தாயார் திருமதி சகாயமரியா, 41, “இப்படிப்பட்ட முயற்சியின் மூலம் சிறப்புத் தேவையுள்ளவர்களாலும் சில விஷயங்களை செய்ய முடியும் என்பது நிரூபிக்கப்படுகிறது. என்னுடைய மகன் இவ்வளவு ஆர்வத்தோடு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என்றார்.

56.5 அடிகள் உயரம் 16.5 அடிகள் விட்டம் கொண்ட ‘ஐஃபிளை சிங்கப்பூர்’ நிறுவனத் தின் ‘காற்றுக் குழாய்’ உலகின் பெரிய காற்றுக் குழாய்களில் ஒன்றாகும்.

இந்நிகழ்ச்சியில் அங்குள்ள காற்றுக் குழாயில் இடம்பெற்ற வான்வெளி சாகசம் ஒவ்வொன் றுக்கும் ‘ஐஃபிளை’ சிங்கப்பூர் $50 நிதியை வழங்கியது.

அதோடு பொதுமக்கள் ஒவ் வொரு முறையும் குறைந்தபட்சம் 20 காசிலிருந்து அதிகபட்சம் $50 வரைக்கும் வழங்கிய நிதிக்கு ஒரு வான்வெளி சாகசம் முடிக்கப் பட்டது.

இந்த நிதித் திரட்டு விழாவில் ‘ஏவா’ $40,000 வரை நிதி திரட்ட முயன்றது.

ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இந்நிகழ்ச்சியின் இறுதியில் ‘ஏவா’ மொத்தம் $50,900 நிதி திரட்டியது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதி ஏழு வயதி லிருந்து 18 வயது வரை உள்ள 300 தொடர்புத் திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகத் தொடங்கப் படவிருக்கும் ‘ஏவா’வின் இரண்டாவது பள்ளிக்கு வழங்கப் படும். இந்தப் பள்ளியின் மொத்த கட்டுமான செலவு $1.2 மில்லியன்.

கல்வி மட்டுமல்லாது பள்ளிப் பருவத்திற்குப் பிறகு தற்சார்புடனும் தன்னிச்சையாகவும் செயல்படும் விதத்தில் மாணவர்களின் வாழ்க் கைக்குத் தேவைப்படும் திறன் களையும், சமூகப் பண்புகளையும் கற்றுத் தருவதற்கு இப்பள்ளி முக்கியத்துவம் அளிக்கும்.

‘ஐஃபிளை சிங்கப்பூர்’ நிறு வனத்தின் எட்டாம் நிறைவு ஆண் டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதன்முறையாக ‘ஏவா’வுடன் இணைந்து ‘கின்னஸ்’ உலக சாதனை புரிந்துள்ளது. இந்த நிதித் திரட்டு முயற்சியில் பெரு மிதம் கொள்வதாக ‘ஐஃபிளை சிங்கப்பூர்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு லாரன்ஸ் கோ தெரிவித்தார்.

‘ஏவா’வின் சிறப்புத் தேவையுள்ள மாணவர்களுக்கு வான்வெளி சாகசத்தைச் செய்ய ‘ஐஃபிளை’ நான்கு பயிற்சிகளை அளித்தது.

அவற்றின் மூலம் தமது பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற அரிய வாய்ப்புகளை அளித்து அவர்களும் பல வகையில் திறன் படைத்தவர்கள் என்று புலப்படுத் தியதற்கு நன்றி தெரிவித்தார் ‘ஏவா’வின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ.ஆர். கார்த்திகேயன்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் வருகைத் தந்ததுடன் 300 ஆவது வான்வெளி சாகசத்தையும் அவர் செய்து முடித்தார்.

சிறப்புத் தேவையுள்ளவர்களை உள்ளடக்கிய சமூகத்தை உரு வாக்க, அவர்களுக்குக் கல்வி வழங்குதல் ஒரு முறை என்று கூறிய அவர், அவர்கள் மற்றவர் களுடன் சகஜமாகப் பழகச் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்ட அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு மைதானம்போல தகுந்த கட்டமைப்புகள் உதவும் என்று சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!