நல்லிணக்கம் வளர்க்கும் இளையர் இயக்கம்

ஓராண்டின் பதினொரு மாதங்கள் மதரஸாவில் சமயக் கல்வி கற்கும் மாணவர்களாகவும் கற்பிக்கும் ஆசிரியர்களாகவும் இருக்கும் கிட்டத்தட்ட 2,000 பேர் புனித ரமலான் மாதத்தில் மட்டும் முழு நேர சமூக சேவையாளர்களாக உருவெடுக்கிறார்கள். இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத் தினரான இவர்கள் மற்ற மாதங் களிலும் சமூக சேவை திட்டங் களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

ஒரே பேரமைப்பின்கீழ் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தினர் மூன்று வட்டார அமைப்புகளாகப் பிரிந்து செயல்படுகின்றனர். இளை யர்களே திட்டமிட்டு முன்னெடுத் துச் செல்லும் முயற்சிகளுக்கு ஏறத்தாழ 6,000 குடும்பங்களின் ஆதரவு உள்ளது.

ஈசூன், பீஷான், யூனோஸ் ஆகிய வட்டாரங்களில் உள்ள பள்ளிவாசல்களில் இந்திய முஸ் லிம்களுக்கு, குறிப்பாக தமிழ் முஸ்லிம்களுக்கு இந்தச் சங்கம் சமயக் கல்வியை போதித்து வரு கிறது. ஆங்கிலத்திலும் தமிழிலும் சமயக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

சமயக் கல்விப் பணியை மேற்கொள்ளும் நோக்கத்தில் அங் மோ கியோ வட்டாரத்தில் 1998ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று பரந்து, விரிந்து இளையர் இயக்கமாக பரிணமித்து உள்ளது.

சமூக சேவையில் நாட்டம்

தொடக்கத்தில் மாணவர்களாகப் பயின்றவர்கள், இன்று ஆசிரியர் களாக சேவையாற்றி வருகின்றனர். அவர்களுள் 23 வயதான குமாரி ஷஹானாவும் ஒருவர். பாலர் பள்ளியில் பயின்றபோது சமய வகுப்புகளில் பயில வந்த அவர், இன்று சமய வகுப்புகளை நடத்தும் ஆசிரியராக இருக்கிறார்.

உதவி தேவைப்படும் குடும்பங் களுக்கும் சிறப்புத் தேவையுடை யோருக்கும் உதவி செய்ய வேண் டும் என்று சிறு வயது முதலே இவர் நாட்டம் கொண்டிருந்தார். தற்போது இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தின் இன நல்லி ணக்கத் திட்டங்களை வகுக்கும் குழுவின் செயலாளராகச் சேவை ஆற்றும் அவர், உயர்நிலைப் பள்ளியில் பயின்றபோது சமூக சேவை செய்யவேண்டும் என்ற ஏக்கத்தில் வாய்ப்புகளைத் தேடி அலைந்ததாகக் குறிப்பிட்டார்.

அடிப்படை சமயக் கல்வியைப் பயின்று ஆசிரியராக உயர்ந்துள்ள அவர், தம்முடைய மாணவர்களின் துணையோடு பல தாதிமை இல் லங்களுக்கும் சிறார் இல்லங்களுக் கும் சென்று தம்மால் இயன்ற உதவிகளை நல்கி வருகிறார்.

சில ஆண்டுகளுக்குமுன் இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு முதல் நாள் வட்டாரவாசிகளை நிகழ்ச் சிக்கு அழைக்க வீடுவீடாகச் சென்ற ஷஹானாவிற்கு சமூக சேவை செய்யவேண்டும் என்ற ஏக்கம் மிகுதியானது. உடற்குறை உள்ளோர், நினைவாற்றல் இழப்பால் பாதிக்கப்பட்டு பல்லாண்டுகளாக வீட்டிலேயே முடங்கி இருப்பவர் என ஒரு சிலரை அவர் நினைவில் வைத்திருந்தார். அவர்களை நிகழ்ச் சியின்போது தேடினார். ஆனால் அவர்கள் வரவில்லை.

ஆயினும், அவர்களின் வீடு அருகிலேயே இருந்ததால் உணவை தாமே எடுத்துச்சென்று வழங்கி னார் குமாரி ஷஹானா. ‘தாவா பிஸ்கட்’ மட்டும் வைத்து நோன்பு துறக்க இருந்த அவர்கள், நல்ல உணவு கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்களின் மகிழ்ச் சியில் குமாரி ஷஹானாவும் இன்புற்றார்.

அதன்பின், அவர் தம்முடைய தலைமை ஆசிரியரான உஸ்தாத் ஷேக் அலியிடம் சென்று உதவி தேவைப்படுவோருக்கான சேவைத் திட்டத்தைத் தாம் தொடங்கப்போவ தாகக் கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த திரு ஷேக் அலி, ஆலோ சனைகளையும் நல்லாசிகளையும் வழங்கி அவரை உற்சாகப்படுத் தினார்.

குமாரி ஷஹானா போன்று சேவை உள்ளம் படைத்த மாண வர்கள் பலர், பற்பல சமூக சேவை முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அன்பளிப்பு, பற்றுச்சீட்டு

இவ்வாண்டு ரமலான் மாதத்தில் வசதி குறைந்த 200 குடும்பங் களுக்குத் தலா $50 பொறுமான முள்ள அன்பளிப்புக் கூடைகளும் பற்றுச்சீட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

வாரந்தோறும் புதன்கிழமை களில் பிரியாணி சமைத்து குறைந்த வருமான குடும்பங் களுக்கு வழங்கி வருகின்றனர்.

குறிப்பிட்ட சில வட்டாரங்களில் அவர்கள் தத்தெடுத்துள்ள கிட்டத் தட்ட 350 குடும்பங்களுக்கு மாதந் தோறும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு சிலர், அக்கம்பக்கத்தில் வசிக்கும் மற்ற இனத்தாருடன் நல்லிணக் கத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலகாரங்கள் செய்தும் வழங்கி வருகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் ரமலான் மாதத்தில் இந்த அமைப்பு ஏற்பாடு செய்யும் ‘இஃப்தார்’ நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளில் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்து செய்பவர்கள் இளையர்கள். சமூக சேவைத் திட்டங்களுக்குத் தேவை யான நிதியையும் அவர்களே திரட்டுவதோடு, தாங்களும் நிதிப் பங்களிப்பு செய்கின்றனர்.

அனைத்து திட்டங்களும் இஸ் லாமியர்களுக்கு மட்டும் என்றில் லாமல் சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கும் விதமாக மற்ற இன, சமயங்களை யும் சேர்ந்தவர்களுக்காகவும் செய் கின்றனர்.

ரமலான் மாதத்தில் நான்கு வார இறுதிகளிலும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படு கிறது. சனிக்கிழமைகளில் காய்கறி உட்பட மற்ற மளிகைப் பொருட் களை வாங்கி, சமையலுக்குத் தேவையான பாத்திரங்களை வாட கைக்கு எடுத்து வரும் ஆண்கள், பின் அவற்றை எல்லாம் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குக் கொண்டு வந்துவிடுகின்றனர்.

காய்கறி நறுக்கும் வேலைகளை இன்னொரு குழுவினர் செய்ய, கூடாரங்களை அலங்கரிக்கும் பணியை வேறு குழுவினர் முன் னெடுப்பர்.

ஞாயிற்றுக்கிழமை காலை ‘சஹர்’ நோன்பு நோற்றபின் ஆறு மணிக்கெல்லாம் வந்து விடும் இளையர்கள் ஏறக்குறைய 6,000 முதல் 12,000 பேருக்கு சமைக்கத் தொடங்குவார்கள். முதலில் நோன்புக் கஞ்சி, பின்னர் நோன்பு துறப்புக்கான சாப்பாடு தயாராகும்.

தயாராகும் உணவுகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப் படும் பெட்டிகளில் போட்டு நிரப்ப, மற்றொரு குழு களத்தில் இறங்கு கிறது.

இவ்வாண்டு முதல் மூன்று வாரங்களில் ஈசூன், மார்சிலிங், கம்போங் உபி பகுதிகளில் நோன்பு துறப்பு நிகழ்ச்சியை நடத்திய இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கம், இன்று பீஷானில் நடத்து கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தலா 3,000 முதல் 6,000 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.

தொண்டூழியத்தில் பிற இனத்தவர்

பள்ளிகளில் பயின்று சமயக் கல்வி பயில்வதற்காக மதரஸா விற்கு வருவோர் ஆர்வத்துடன் சமையல், தளவாடம், நிதித் திரட்டு என வேலைகளைப் பிரித்து, இயங்கி வருவது எளிதான செயல் அல்ல.

இளையர்கள் நல்ல பண்புகளை வளர்த்துக்கொள்ளும் இடமாகவும் நல்ல முறையில் நேரத்தைச் செலவு செய்ய உதவும் தளமாகவும் வாழ்க் கையை அர்த்தமுள்ளதாக்கவும் இந்த அமைப்பு விளங்குகிறது என்றார் ஆறாண்டுகளாக இந்த அமைப்பில் சேர்ந்து சேவையாற்றி வரும் குமாரி ஃபர்ஸானா, 28.

“இஸ்லாம் என்றால் என்ன? யாரிடம் கற்பது? பலவிதமான அர்த்தங்கள் உள்ள பட்சத்தில் எது சரி? என்ற கேள்விகளெல்லாம் எனக்குள் பலமுறை தோன்றியது. எனக்கு வழிகாட்ட நல்ல ஆசிரியர் இல்லையே என்று ஏங்கிய தரு ணத்தில், நானும் என் நண்பர்கள் அறுவரும் இந்த மதரஸாவில் சேர்ந்தோம். சமயக் கல்வி கற்க வந்த நான், இன்று சமயக் கல்வி ஆசிரியராகச் சேவையாற்று கிறேன்,” என்றார் அவர்.

“இளையர்களுக்கு முன்னு ரிமை கொடுத்து, எங்களின் பரிந் துரைகளை செயல்படுத்த உத் வேகம் கொடுக்கும் அளவிற்கு எங்கள் தலைமை ஆசிரியரும் இதர செயற்குழுவினரும் உள்ள னர். சமூக சேவை முயற்சிகளை நட்பு வட்டத்தை விரிவுபடுத்தும் முக்கிய தளமாகவும் ஆக்கிக் கொண்டோம்,” என்றார் பல்லாண்டு களாகச் சேவையாற்றி வரும் திருவாட்டி ரிஸ்வானா பேகம், 25.

“இந்து சமயத்தைச் சேர்ந்த என் பல்கலைக்கழகத் தோழி வனிதா இதுவரை இரண்டு ‘இஃப்தார்’ நிகழ்ச்சிக்குத் தொண் டூழியராக வந்து உதவியுள்ளார். அன்பளிப்புக் கூடைகளைத் தயார் படுத்துவதற்கும் கைகொடுத்துள் ளார். நாங்கள் சந்தித்துப் பேச உணவங்காடிக்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. சேர்ந்து சேவையாற்றுவதும் எங்கள் நட்பின் தனிச்சிறப்பு,” என்றார் திருவாட்டி ரிஸ்வானா.

இதேபோல, குமாரி ஷஹானா வின் சீனத் தோழியான லூயிஸா வும் பல ஆண்டுகளாகத் தொண் டூழியம் புரிந்துவருகிறார்.

“சமய நல்லிணக்கம் என்பது எங்களின் செயல்களில் உள்ளது. எல்லா சமயத்தினருக்கும் தொண் டாற்ற வேண்டும் என்பதோடு சமூக சேவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும்போதே நாங்கள் எந்த பேதமுமின்றி ஒன்றிணைகி றோம்,” என்றார் குமாரி ஷஹானா.

சமயக் கல்வியைக் கற்கும் இடமாக மட்டுமல்லாமல், ‘சிறந்த மனிதர்களாக ஒவ்வொருவரும் இருக்கவேண்டும், பிறருக்கு உதவி செய்யும் உன்னத நோக்கத் தைக் கொண்டிருக்கவேண்டும், சமூகத்தில் அனைவரையும் அரவ ணைத்துச் செல்லவேண்டும்’ என்பன போன்ற வாழ்வியல் நெறிகளைக் கற்றுத் தரும் இட மாகவும் இந்த மதரஸா வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன.

உலகெங்கிலும் ‘இஸ்லாமோ ஃபோபியா’ எனும் இஸ்லாமியர் களின்பால் அச்சம் உருவாகியுள்ள நிலையில், “இஸ்லாமியர்கள் நல்ல உள்ளம் படைத்தவர்கள், சேவை மனப்பான்மையுடன் அனைவரையும் அரவணைப்பவர்கள் என்பதை வெளிக்காட்ட விரும்புகிறோம்,” என்றார் ஈசூன் மதரஸாவில் பயி லும் ஆரிப் அன்சர் அஹமது, 24.

“சிங்கப்பூரில் நல்லிணக்கத்து டன் வாழ்ந்து வருகிறோம். அதற் கேற்றாற்போல் சமயக் கல்வியின் மூலம் அறிந்துகொள்ளும் நல்ல விஷயங்களை நற்செயல்கள் மூலம் வெளிக்காட்ட விரும்பு கிறோம்,” என்றும் அவர் கூறினார்.

நம்பிக்கை தரும் இளையர்கள்

“நபிகளின் போதனையிலேயே நல் லிணக்கம், அக்கம்பக்கம் வசிப் போருடன் ஒற்றுமையாக இருப்பது, உதவி நல்குவது போன்ற நல்ல பாடங்கள் உள்ளன. அவற்றை மாணவர்களுக்கு எடுத்துச்சொல் வது மட்டுமல்லாமல் அதைச் செய லிலும் காட்ட தக்க தளத்தை ஏற் படுத்திக் கொடுப்பதால் அவர்கள் முன்னின்று சேவைபுரிகின்றனர்,” என்றார் உஸ்தாத் திரு ஷேக் அலி.

1998ஆம் ஆண்டு சிறிய அளவில் சமயக் கல்வியைக் கற் றுக்கொடுக்கத் தொடங்கிய அவர், 2004ஆம் ஆண்டு இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கத்தை ஏற் படுத்தினார். முதலில் 200 மாண வர்களுடன் தொடங்கிய அமைப்பு, இன்று 65 பேர் கொண்ட செயற் குழுவின்கீழ் ஏறத்தாழ 2,000 மாணவர்களைக் கொண்டுள்ளது.

“ஆர்வமிக்க இளையர்கள் துடிப்புடன் நற்செயல்களில் ஈடுபட தக்க வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். அவர்களை உற்சாகப்படுத்தக்கூடிய வகையில் ஈர்க்கவேண்டும்,” என்றார் அவர்.

“வீட்டில் எந்த வேலையும் செய்யாதவர்கள்கூட இங்கு வந்து ‘இஃப்தார்’ நிகழ்ச்சிக்காக சமையல் செய்கின்றனர். அவர்களின் பெற்றோரே வியப்புறும் அளவிற்கு நண்பர்களின் தாக்கத்தால் அவர் களின் செயல்பாடுகள் மாறுகின் றன,” என்று அவர் பெருமிதம் கொண்டார்.

“சமயக் கல்வியில் சமய நல்லி ணக்கம் பற்றி பெரிதும் கற்பிக்கப் படுகிறது. சிங்கப்பூர் முஸ்லிம் சமூகம் உலகிற்கே முன்மாதிரியாக திகழவேண்டும்,” என்ற அவர், இளையர்கள் அடுத்த தலைமுறை யினருக்கு இந்தப் பாடங்களை எடுத்துச்செல்வர் என்றும் நம் பிக்கை தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!