எதிர்கால தேவைகளுக்குத் தயாராகும் பென்கூலன் பள்ளிவாசல்

பென்கூலன் பள்ளிவாசலின் பழைய கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் வர்த்தகக் கட்டடத்துடன் நவீன முறையில் பள்ளிவாசல் கட்டப் பட்டு கடந்த 15 ஆண்டுகளாகச் சேவையாற்றி வருகிறது.

வழிபாட்டு இடமாக மட்டுமல்லா மல் சமயக் கல்வி கற்பிக்கும் பாடசாலையாகவும் இப்பள்ளிவாசல் சேவை வழங்குகிறது.

பள்ளிவாசலை ஒட்டிய பன் னோக்கு மண்டபம் பள்ளிவாசல் நிகழ்ச்சிகள், சமூக நிகழ்ச்சிகள், இல்ல விழாக்கள் போன்றவற்றுக் குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்று 450 பேர் தொழுகை மேற்கொள்ளக்கூடிய இப்பள்ளிவா சல் அதிகரித்துவரும் தேவைகளுக் காக மேம்பாடு காணவுள்ளது.

இம்முறை நடக்கவுள்ள மேம் பாட்டுப் பணிகள் முடிவடைந்ததும் கூடுதலாக 1,000 பேர், அதாவது மொத்தம் 1,450 பேர் தொழுகை மேற்கொள்ள முடியும் என்று தெரி வித்தார் பென்கூலன் பள்ளிவாசல் நிர்வாகக் குழுத் தலைவர் ஹாஜி எஸ் எம் அப்துல் ஜலீல்.

“வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்காகவும் ரமலான் மாதத் தொழுகைக்காகவும் வரும் பிரார்த்தனையாளர்களின் எண் ணிக்கை கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.

“ரமலான் மாதம் நோன்புத் துறப்பு நிகழ்வில் 2004ஆம் ஆண்டு தினமும் 50 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். இவ்வாண்டு 950 பேருக்கு உணவு தயாரிக்கப் பட்டு உபசரிக்கப்படுகிறது,” என்று திரு ஜலீல் கூறினார்.

மதரஸா வகுப்புகளில் பயிலும் 120 மாணவர்களுக்குத் தக்க வகுப்பறைகளும் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டார். அதனால் ஆறு புதிய வகுப்பறைகள் கட்டப் படவுள்ளன.

முதியோர் எளிதாகச் சென்று வர தடுப்புகள் இல்லாத பாதைகள் அமைக்கப்படவுள்ளன என்றும் கீழ்த்தளம் முதல் நான்காம் தளம் வரையில் மட்டும் சென்றுவர தனிப்பட்ட மின்தூக்கிகள் பொருத் தப்படவுள்ளன என்றும் திரு ஜலீல் விளக்கினார்.

பெண்களுக்குத் தனிப்பட்ட வசதிகளுடன் அவர்கள் எளிதாகச் சென்றுவர பாதைகள் அமைக் கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஒவ்வொரு தளத்திலும் மேலும் அதிக எண்ணிக்கையில் கழிவறை களும் ‘ஒது’ செய்யுமிடங்களும் சேர்க்கப்படவிருக்கின்றன.

சிங்கப்பூரில் தமிழ் முஸ்லிம்கள் சமயக் கல்வியைச் சிரமமின்றி கற்க பென்கூலன் பள்ளிவாசல் மிகவும் சிரத்தை எடுத்து வசதி செய்து தருகிறது.

“பென்கூலன் பள்ளிவாசல் மதரஸாவில் பயின்று சென்ற ஆண்டு இருவர் ‘ஹாஃபிழ்’ பட்டம் பெற்றுள்ளனர். இவ்வாண்டு ஒருவர் குர்-ஆனை மனப்பாடம் செய்து அந்தப் பட்டத்தைப் பெற்று உள்ளார். சிங்கப்பூரின் வேகமான வாழ்க்கைச் சூழலில் சமயக் கல்வி கற்க முடியாது என்று எவரும் நினைக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு எங்கள் நிர் வாகம் முயற்சி எடுத்து வருகிறது,” என்று பெருமிதத்துடன் விளக்கி னார் பென்கூலன் பள்ளி வாசல் நிர்வாகக் குழுவின் துணைத் தலைவர் ஹாஜி எம் ஒய் முஹம்மது ரஃபீக்.

“நிர்வாகத்தின் ஒத்துழைப்பும் கல்வி கற்பிக்கும் உஸ்தாத்களின் அரவணைப்பும் பெற்றோர்களின் பேராதரவும் மாணவர்களின் கடப் பாடும் இந்த மதரஸா சிறப்பாக நடைபெற காரணங்கள்,” என்று விளக்கமளித்தார் ஹாஜி ரஃபீக்.

தினமும் மாலை அஸர் தொழுகையிலிருந்து இரவு 10 மணி வரையில் எந்த நேரத்திலும் மாணவர்கள் வந்து கல்வி கற்கும் வாய்ப்பை இப்பள்ளிவாசல் ஏற் படுத்தியுள்ளது.

இமாம் கலீல் அஹமது அவர் களின் வழிகாட்டுதலில் ஹாஃபிழ் குர்ஆன் மனனம் செய்யும் வகுப் புகள் நடைபெறுகின்றன.

“மாணவர்கள் பகுதி நேரமாகத் தான் இந்தப் பாடத்தைச் சிரத்தை எடுத்து படிக்கின்றனர். அவர்க ளுக்கு ஏற்றவகையில் எப்போது வேண்டுமென்றாலும் என்னை அணுகும் நிலையைச் செயல்படுத்தி னேன்,” என்றார் இமாம் கலீல்.

“இந்த மாணவர்கள் சமயக் கல்வியில் மட்டுமல்லாமல் பள்ளி களில் ஏட்டுக்கல்வியிலும் சிறந்து விளங்குகின்றனர்,” என்று மகிழ்ச்சியுடன் கூறினார் அவர்.

மலரும் நினைவுகள்; அழியா வரலாற்றுச் சுவடுகள்

இந்திய முஸ்லிம் முன்னோடிகளால் 194 ஆண்டுகளுக்கு முன் நிறுவப் பட்ட பென்கூலன் பள்ளிவாசல் அடுத்த அத்தியாயத்திற்குத் தயா ராக உள்ளது. இன்று வரையில் தமிழ் முஸ்லிம்களால் பெரிதும் விரும்பப்படும் சமயத் தலங்களில் ஒன்றாக பென்கூலன் பள்ளிவாசல் விளங்குகிறது.
தமிழ்மொழி தினமும் ஒலிக் கும் இஸ்லாமிய சமயத் தலங்களில் ஒன்றாக இன்றுவரை இந்தப் பள்ளிவாசல் விளங்கிவருகிறது.
முந்தைய காலங்களில் தமிழ கத்திலிருந்து வருவோர் தங்களின் நண்பர்களையும் உறவினர்களை யும் சந்திக்கும் மத்திய இடங்களில் ஒன்றாக இந்தப் பள்ளிவாசல் விளங்கியுள்ளது.
பள்ளிவாசல்கள் சமூகத்தைப் பிணைக்கும் இடங்களாகவும் ஒன் றுகூடும் இடங்களாகவும் விளங்கி வந்துள்ளன. அதற்கு இந்தப் பள்ளிவாசல் முன்னுதாரணமாக இருந்துள்ளது. பழைய பள்ளிவாசல் கட்டடம் மட்டும் இல்லை என்ற ஏக்கம் பலருக்கு இருந்தாலும் பசுமை நினைவுகளை மனதில் சுமக்கும் சமூகமாக தமிழ் முஸ்லிம்கள் விளங்குகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!