பெரும் பாதிப்பு: வர்த்தகர்கள் கவலை 

வெள்ளி நகைகள், பாரசீகத் தரை விரிப்புகள், காஷ்மீர் பட்டாடை களுக்கென்றே மெனிமூன்ஸ் கடை ஏராளமான வாடிக்கையா ளர்களைக் கொண்டிருந்தது. ஹாலந்து வில்லேஜ் பகுதியில் 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த இந்தக் கடை அவ்வட்டாரவாசிகள் மத்தியில் பிரபலமாக விளங்கியது.

ஹாலந்து வில்லேஜ் சந்தையை ஒட்டி அமைந்திருந்த இந்தக் கடை இவ்வாண்டு மே 30ஆம் தேதியுடன் அங்கிருந்து விடைபெற்று, புக்கிட் தீமா பிளாசாவிற்கு இடம் மாறியது.

“மாத வாடகையாக $1,800 கொடுத்து வந்தேன். மின்சாரம், தண்ணீருடன் சேர்த்து கடையை நடத்த மாதத்திற்கு $2,000க்கும் மேல் செலவானது. ஆனால், கடந்த சில மாதங்களாக எங்க ளுக்கு சராசரி மாத வருமானமாக $1,000 மட்டுமே கிடைத்து வந்தது. கடை வாடகைக்கே அது போத வில்லை,” என்றார் மெனிமூன்ஸ் கடையின் உரிமையாளர் திரு ர‌ஷீத் ஷல்லா, 47.

ஹாலந்து வில்லேஜில் இருந்த இரு பிரதான கார்நிறுத்தப் பூங் காக்கள் மூடப்பட்டதே வாடிக்கை யாளர்கள் குறையக் காரணம் என திரு ர‌ஷீத்தும் அங்குள்ள மற்ற இந்திய சில்லறை வர்த்தகர்களும் கூறினர்.

பலபயன் கட்டுமான மேம் பாட்டுத் திட்டத்திற்காக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியில் இருந்து அங்கு 405 கார் நிறுத்த இடங்கள் மூடப்பட்டன.

கடந்த ஆண்டு மே மாதம், ஹாலந்து வில்லேஜ் விரிவாக்கத் திட்டத்திற்கான ஏலக்குத்தகையை ஃபார் ஈஸ்ட் நிறுவனம் தலைமை யிலான நிறுவனக் கூட்டமைப்பு கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அங்கு அலுவலக, குடியிருப்பு, சில்லறை வர்த்தகம், அதிக பொது வெளிகள் எனப் பலபயன் கட்டு மானத் திட்டப் பணிகள் அங்கு இடம்பெற்று வருகின்றன.

இதனால், ஹாலந்து டிரைவில் 350 கார்களை நிறுத்தும் வகையில் தற்காலிக கார் நிறுத்தப் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதோடு, நடைபாதை ஒன்றும் லோரோங் லிபுட்டை நோக்கிச் செல்லும் சாலை ஒன்றும் தற்கா லிகமாக அமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும், முன்னைப்போல் வாடிக்கையாளர்கள் வருவதில்லை.

“கடந்த சில ஆண்டுகள் சில்லறை வர்த்தகத்திற்குச் சிறப் பானதாக அமையவில்லை. கார் நிறுத்தப் பூங்கா இடமாறியது இன்னொரு பலத்த அடி. அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஹாலந்து வில்லேஜில் சீரமைப்பு, மேம்பாட்டுப் பணிகள் இடம்பெறும். இதனால் எங்களைப் போன்ற சில்லறை வர்த்தகர்கள் பாதிக்கப் படுவர். ஆகையால், அங்கிருந்து வெளியேறுவதைத் தவிர எங்க ளுக்கு வேறு வழியில்லை,” என்றார் திரு ர‌ஷீத்.

ஹாலந்து வில்லேஜ் சந்தையில் குளிரூட்டி வசதிகளும் மழைப் பொழிவில் இருந்து காக்கும் கூடாரங்களும் போதிய அளவில் இல்லாததும் தமது வர்த்தகத்தைப் பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.

“குறிப்பாக, முதிய ஊழியர் களுக்குச் சிரமமாக இருந்தது. இவ்விடமே அதிக சூடாக இருக் கும். அதே நேரத்தில், மழை பெய் தால் அவ்விடம் முழுவதும், கடைக்கு உள்ளேயும்கூட ஈரமாகி விடும், வாடிக்கையாளர்களுக்கு உகந்த சூழல் அங்கு இல்லை,” என்று அவர் கூறினார்.

ஹாலந்து வில்லேஜில் செயல் படும் பெரும்பாலான இந்திய சில்லறை வர்த்தகர்களும் இதே காரணங்களைச் சுட்டினர்.

இந்திய மளிகைப் பொருட்களை விற்கும் ‘கிச்சன் அஃபேர்ஸ்’ என்ற கடையை ஐந்தாண்டுகளுக்கு முன் அங்கு திறந்தார் திருமதி பூனம் அகர்வால், 49.

சென்ற ஆண்டு வரை வர்த்த கம் நன்றாக இருந்ததாகக் கூறிய திருமதி பூனம், இப்போது 20% குறைந்துவிட்டதாகச் சொல்லி வருத்தப்பட்டார்.

“கார்நிறுத்தப் பூங்கா அமை விடம் மட்டும் இதற்குக் காரண மல்ல. கணிக்க முடியாத கால நிலையும் இணையவழி வர்த்தகச் சேவைகளும் எனது கடை வியாபா ரத்தைப் பாதித்துவிட்டன,” என்றார் அவர்.

“அரசாங்கம் பெரிய அளவில் கைகொடுக்க வேண்டும். அதிக எடையுள்ள பொருட்களை வாங் கும்போது பேரங்காடிகளில் இருப் பதைப்போல், தங்களது வாகனங் களுக்குப் பொருட்களை எடுத்துச் செல்ல தள்ளுவண்டிகளை வழங் கினால் நல்லது என்று வாடிக்கை யாளர் ஒருவர் சொன்னார். அந்தத் தாக்கத்தை நானும் உணர்கிறேன்,” என அவர் கூறினார்.

மெனிமூன்ஸ் கடை மூடப்பட் டதைச் சுட்டிக்காட்டிய அவர், வாடகையைக் குறைத்து சில்லறை வர்த்தகர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“மெனிமூன்ஸ் கடை மூடப் பட்டது மிகுந்த வருத்தம் தரு கிறது. பல ஆண்டுகளாக, எங்க ளுக்கு முன்பிருந்தே அவர்கள் இங்கு செயல்பட்டு வந்தனர். புதிய சில்லறை வர்த்தகங்கள் வந்தாலும்கூட அதிக பராமரிப்புச் செலவு, குறைந்துவரும் விற்பனை ஆகியவற்றால் ஒரு சில மாதங் களுக்குமேல் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என அஞ்சு கிறேன்,” என்றார் அவர்.

அங்குள்ள ‘கினாரா’ உண வகமும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

“கார் நிறுத்தப் பூங்கா இடம் மாறியதால் எனது வர்த்தகம் 40% முதல் 45% வரை குறைந்து விட்டது,” என்றார் அதன் உரிமை யாளர் ராஜ் கிஷோர் பத்ரோ, 54.

“ஆனால், மாலை நேரங்களில் எழும் அதிக சத்தமே எனக்கு அதிக கவலை தருகிறது. மதுக் கடைகளும் மதுக்கூடங்களும் பெருகி வருகின்றன. அவர்கள் அதிக சத்தத்துடன் இசையை ஒலிக்க விடுவது எனது உணவகச் சூழலுக்கு இடையூறாக இருக் கிறது. வாடிக்கையாளர்களுள் சிலர் அந்த மதுக்கூடங்களை அணுகி, இசையின் ஒலி அளவைக் குறைக்கும்படி கேட்டுக்கொண்ட னர். மதுக்கூடங்கள் மட்டுமல்ல, எல்லாருக்கும் பிழைப்பு நடக்க வேண்டும்,” என்று அவர் சொன் னார்.

ஹாலந்து வில்லேஜில் 1992ஆம் ஆண்டில் இருந்து கினாரா உண வகம் செயல்பட்டு வருகிறது. இதற்குமுன் இப்படி ஒரு சிரமமான காலகட்டத்தைத் தமது உணவகம் எதிர்கொண்டதில்லை என்கிறார் திரு கிஷோர்.

“மதுக்கூடங்களின் வாடிக்கை யாளர்கள் வழக்கமாக டாக்சிகளில் அல்லது பொதுப் போக்குவரத்தில் வருவதால் அவற்றுக்குத் தொழில் நன்றாக நடக்கிறது. உணவு, பான வர்த்தகங்களே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. எங்களது சிரமத்தைப் புரிந்துகொண்டு, கட்டட உரிமையாளர்கள் வாடகை யைக் குறைக்க முன்வரவேண்டும். அத்துடன், சத்தத்தைக் கட்டுப் படுத்த அரசாங்கமும் எங்களுக்கு உதவ வேண்டும்,” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து, கினாரா, பிரிட்டிஷ் இண்டியன் கறி ஹட் ஆகிய இரு உணவகங்களும் தங் களது வியாபாரத்தைப் பெருக்க ஃபூட்பாண்டா, கிராப்ஃபூட், டெலிவரூ போன்ற உணவு விநி யோகச் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றன.

“நாங்கள் ஃபூட்பாண்டா, கிராப் ஃபூட் சேவைகளைப் பயன்படுத்தி வருகிறோம். தங்களின் வசதிக் காக பெரும்பாலான வாடிக்கையா ளர்கள் அத்தகைய உணவு விநி யோகச் செயலிகளை நாடுகின் றனர்,” என்றார் பிரிட்டிஷ் இண்டி யன் கறி ஹட் உணவகத்தின் உரிமையாளர் திரு கோபிநாத் குமார், 29.

ஹாலந்து ரோடு கடைத் தொகுதியில் உள்ள கார் நிறுத்தப் பூங்காவில் கிட்டத்தட்ட 30 கார்களை நிறுத்த முடியும். இருந் தாலும், தமது வர்த்தகம் பெருக வில்லை என்கிறார் அங்கு ‘கஜ் டிரேடர்ஸ்’ எனும் நாணய மாற்று வர்த்தகத்தை நடத்தி வரும் திரு அப்துல் மாலிக், 44.

“சிறிய கார் நிறுத்தப் பூங்கா என்பதால் கார்களை நிறுத்த இடமில்லாமல் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். வழக்கமாக வாடிக்கையாளர்கள் தங்களின் கார்களை பிரதான கார் நிறுத்தப் பூங்காவில் நிறுத்திவிட்டு, நடந்து வருவர். பெரும்பாலான வாடிக்கை யாளர்கள் சொந்தமாக கார் வைத்துள்ளனர். இந்நிலையில், கார் நிறுத்தப் பூங்கா இடமாற்றம் செய்யப்பட்டதால் பாதி வர்த்த கத்தை இழந்துவிட்டோம்,” என்று கூறி, அவர் கவலைப்பட்டார்.

கடந்த 25 ஆண்டுகளாக ஹாலந்து வில்லேஜில் செயல்பட்டு வரும் ‘ராய்ஸ் மாஸ்டர் டெய்லரிங்’ கடையிலும் வியாபாரம் பாதிக் கப்பட்டுள்ளது.

‘20% முதல் 30% வியாபாரம் குறைந்துவிட்டதால் இங்கிருந்து வெளியேறுவது பற்றி சிந்தித்து வருகிறோம். எப்படியாவது இன்னும் ஓராண்டுக்குக் கடையை நடத்த முயல்வேன்,” என்றார் அதன் உரிமையாளர் ராய் சப்னானி, 53.

“இந்த இடத்தில் இனிமேலும் பணம் ஈட்ட முடியாது. எல்லாருமே பாதிப்பை உணர்ந்துள்ளோம். வாடிக்கையாளர்கள் வந்து செல்லச் சிரமமாக இருப்பதால் ‘கோல்டு ஸ்டோரேஜ்’ போன்ற பெருவணிகங் களே வர்த்தகத்தைத் தக்கவைக்கப் போராடி வருகின்றன. வெயிலில் நடந்து வந்து செல்ல மக்கள் விரும்புவதில்லை,” என்றார் அவர்.

ஹாலந்து வில்லேஜில் கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த மெனிமூன்ஸ் கடை, வியாபாரம் குறைந்ததால் புக்கிட் தீமா பிளாசாவுக்கு இடம் மாறிவிட்டது.

---

புதிய முறை சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு

ஹாலந்து வில்லேஜில் கடந்த 26 ஆண்டுகளாக மதுப்பிரியர்கள் விரும்பும் இடமாகத் திகழ்ந்து வருகிறது ‘வாலா வாலா கஃபே பார்’.

உள்ளூர் இசைக்குழுக்களும் கலைஞர்களும் தங்களது திறமை களை வெளிப்படுத்த ஒரு நல்ல தளத்தையும் அது ஏற்படுத்திக் கொடுக்கிறது. உள்ளூர் நகைச் சுவை பிரபலமான குமார் அங்கு நிகழ்ச்சி படைத்தவர்களுள் ஒருவர்.

இரு தளங்களைக் கொண்ட அங்கு நான்கு நேரடி ஒளிபரப்புத் தொலைக்காட்சித் திரைகளும் மேல் தளத்தில் ஓர் இசைக்கூடமும் உள்ளன. ஆயினும், அண்மைய மாதங்களாக அங்கு வர்த்தகம் குறைந்துவிட்டது.

“மது அருந்த வருவோர் எண் ணிக்கை குறையாவிடினும், உண வருந்த வருவோர் குறைந்துவிட் டனர்,” என்றார் அந்த உணவகத் தின் மேலாளர் அமித் குமார், 27.

கார் நிறுத்தப் பூங்கா இடம் மாறியபின் வர்த்தகம் கிட்டத்தட்ட 15% குறைந்துவிட்டது என்று அவர் சொன்னார்.

பழைய நிலைக்கு வியாபாரம் திரும்புமா என்று கேட்டால், உறுதி இல்லை என்கிறார் திரு அமித். “வரும் அக்டோபரில் நிலைமை எப்படி மாறும் எனத் தெரியவில்லை. தற்காலிக நடைபாதை மூடப்பட லாம். அது நடந்தால், வர்த்தகம் இன்னும் பாதிக்கப்படும். இதே வேகத்தில் போனால், உணவகம் அடுத்த ஆண்டு குத்தகையைப் புதுப்பிக்குமா என்பதே கேள்விக் குறிதான்,” என்று அவர் வருத்தத் துடன் கூறினார்.

ஆயினும் அங்குள்ள எல்லா வர்த்தகங்களுக்கும் இதே நிலை தான் எனச் சொல்லிவிட முடியாது.

மின்னணு, கணினிச் சாத னங்கள் விற்கும் ‘பாரிசில்க்’கின் வர்த்தகம் வழக்கம் போலவே இருந்து வருகிறது.

“கார் நிறுத்தப் பூங்கா இடம் மாறியதால் வாடிக்கையாளர்கள் கூடுதலாக இரண்டு, மூன்று நிமி டங்கள் நடக்க வேண்டியுள்ளது,” என்கிறார் ‘பாரிசில்க்’ உரிமையா ளர் திரு மகேஷ் பிரிமலானி. 41.

“ஊடகங்களில் வெளியான தகவலை அடுத்து வாடிக்கையாளர் களும் முதலில் இங்கு வரத் தயங் கினர். ஆனால், புதிய கார் நிறுத்தப் பூங்காக்கள் அதிக தொலைவில் இல்லை என்பதை விரைவில் அவர்கள் உணர்ந்தனர். இதை அடுத்து, அவர்கள் மீண்டும் வரத் தொடங்கியதால் வர்த்தகம் வழக் கம்போல நடந்து வருகிறது,” என்று அவர் சொன்னார்.

ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஹாலந்து வில்லேஜில் செயல்பட்டு வருகிறது ‘தி பிட் உணவகம் மற்றும் மதுக்கூடம்’. கார் நிறுத்தப் பூங்கா இடம் மாறினாலும் வழக்கம்போல வர்த் தகம் நடந்து வருவதாகச் சொன் னார் அதன் பொது மேலாளர் திரு முரளி துரைராஜ், 46.

“எங்களது வாடிக்கையாளர் களில் பலரும் சொந்த வாகனங் களில் வருவதில்லை. பெரும்பாலா னவர்கள் மது அருந்த வருகின் றனரே தவிர, உணவருந்த வரு வதில்லை. வாடகை உயர்ந்து வருவதால் சில வர்த்தகர்கள் குத்தகையை மேலும் புதுப்பிக்க விரும்புவதில்லை. அடுத்த நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் போக்கு நீடிக்கும் என நம்பு கிறேன்,” என்று அவர் கூறினார்.

இதனிடையே, பாரிசில்க், தம்பி சஞ்சிகைக் கடை ஆகிய இரண் டும் ‘டிரைவ் த்ரூ’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளன. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்க ளுக்குத் தேவையானதை முன்னரே பட்டியலிட்டுக் கூறிவிடுவர். பின், நேரில் வந்து காரில் இருந்தபடியே பணத்தைச் செலுத்தி, பொருட் களைப் பெற்றுச் செல்வர். இதனால், அதிக நேரம் அவர்கள் தங்களின் கார்களை நிறுத்த அல்லது காத் திருக்க வேண்டியதில்லை.

“கார் நிறுத்தப் பூங்கா இடம் மாறியதால் வர்த்தகம் 40% வரை குறைந்துவிட்டது. அதை ஈடுகட்டு வதற்காக ‘டிரைவ் த்ரூ’ சேவையை அறிமுகப்படுத்தினோம். வாடிக்கை யாளர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது,” என்றார் தம்பி சஞ்சிகைக் கடையின் உரி மையாளர் திரு செந்தில் முருகன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!