மக்களை ஒன்றிணைக்கும் ‘வாங்க அண்ணா’

வெளிநாட்டு ஊழியரான திரு தொ. சீமோனால் தமது 31 வயது பிறந்தநாளை மறக்க முடியாது. நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி, பிறந்தநாள் கொண்டாடிய அந்த நாள் அவர் வாழ்வின் இனிமையான நாட்களில் ஒன்று.
“என் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. அதைச் செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருப்பினும் எனக்காக பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்த ‘வாங்க அண்ணா’ குழுவினர் நிச்சயம் என் நினைவில் நிற்பார்கள்,” என்றார் திரு சீமோன்.


சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் ஒன்றிணைக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட ‘வாங்க அண்ணா’ அமைப்பு, கிரிக்கெட் விளையாட்டு மூலம் இந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த விழைந்தது.
“வெளிநாட்டு ஊழியர்கள் என்றால் சிலர் ஏளனமாக பார்ப்பார்கள். அப்படியில்லாமல் எல்லாரையும் மனிதர்களாய், குடும்பமாக அரவணைக்கிறது இக்குழு. அனைவரையும் அன்போடும் மரியாதையுடனும் நடத்துகின்றனர்,” என்றார் இக்குழுவின் தொடக்க உறுப்பினர்களில் ஒருவரான திரு தொ. சீமோன்.


ஏப்ரல் 26ஆம் தேதி வரும் அவரின் பிறந்தநாளை ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கிரிக்கெட் நிகழ்ச்சியில் கொண்டாடியது வாங்க அண்ணா குழு. நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்த வெளிநாட்டு ஊழியர் திரு சீமோன், தமது பணி நிறைவடைந்து ஜூன் 26ஆம் தேதி சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார்.


சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு ஊழியர்களுடன் முறையாகத் தொடர்புகொள்வதில்லை என்பதை உணர்ந்த 27 வயது செல்வி ஹேமா கலாமோகனும் 26 வயது செல்வி ‌ஷோபனா ஸ்ரீதரனும் சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டு ஊழியர்களையும் விளையாட்டு மூலம் ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினர்.


சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இவர்கள் நட்பு, ‘வாங்க அண்ணா’ தொடங்கப்பட்டதிலிருந்து மேலும் வலுப்பட்டுள்ளது.


கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பரில், ஜூரோங் வட்டாரத்தில் அமைந்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் தொண்டூழிய பணியில் இவ்விருவரும் ஈடுபட்டனர்.


பணிகள் முடிந்ததும் உணவு நேரம் வந்தது. தொண்டூழியர்கள் ஒரு புறமும் ஊழியர்கள் மற்றொரு புறமும் பிரிந்து உணவு உண்டனர். ஷோபனாவும் ஹேமாவும் ஊழியர்களோடு பழக எண்ணி, அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டனர். ஒரு சிங்கப்பூரருடன் சிரித்துப் பேசியது இதுதான் முதல் முறை என்று அப்போது பல ஊழியர்கள் அவர்களிடம் கூறினர்.

இச்சம்பவமே வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில் இருவரையும் இறங்க வைத்தது. ஆரம்பத்தில் வாங்க அண்ணா குழுவின் தொண்டூழியர்கள் வெளி நாட்டு ஊழியர்களை லிட்டில் இந்தியா வட்டாரத்தில் சந்தித்து, தீபாவளி பலகாரங்கள் உண்டு, பேசிப் பழகினர். ‘எ குட் ஸ்பேஸ்’ என்ற அறநிறுவனம் கடந்த ஆண்டு $1,000 நிதி ஆதரவு வழங்கியதை அடுத்து பல நடவடிக்கைகளை இக்குழு மேற்கோண்டது.


முதல் நிகழ்ச்சியாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களை அழைத்துச் சென்றனர் குழுவினர். ஜூலை 29ஆம் தேதி முதல் கிரிக்கெட் விளையாட்டை ஏற்பாடு செய்தனர். அன்றிலிருந்து மாதந்தோறும் குறிப்பிட்ட ஒரு ஞாயிறன்று கிரிக்கெட் விளையாடி வருகிறது வாங்க அண்ணா குழு. மிகவும் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக்கொண்ட 30 வயது திரு பழனி சுரேஷுக்கு இந்த கிரிக்கெட் விளையாட்டு பிரச்சினைகளையும் மன உளைச்சலையும் மறந்து மகிழ்ச்சியுடன் இருக்க உதவுகிறது.


"என்னை வளர்க்க என் பெற்றோர் பெரும்பாடுபட்டனர். அதனால்தான் சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்தேன். என் குடும்பப் பொறுப்புகளை நான் இப்போது சுமக்கிறேன். இதுபோன்ற நடவடிக்கைகள் எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. விளையாடுவதன் மூலம் கவலைகளை மறக்கிறேன்,” என்றார் 11 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்க்கும் திரு பழனி சுரேஷ்.


கடந்த இரண்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரியும் 25 வயது திரு ப.ராஜசேகருக்கு வாங்க அண்ணா குழு பல நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளது. "மன உளைச்சல், சோகம் போன்றவற்றைக் குறைக்கிறது. ஆரோக்கியமாக இருக்கவும் விளையாட்டு உதவுகிறது,” என்றார் இக்குழுவில் 6 மாதங்களுக்கு முன் இணைந்த திரு ராஜசேகர்.


ஒவ்வொரு கிரிக்கெட் விளையாட்டிலும் தற்போது கிட்டத்தட்ட 12 தொண்டூழியர்களும் 10 வெளிநாட்டு ஊழியர்களும் பங்குபெறுகிறார்கள்.


“வெளிநாட்டு ஊழியர்களில் பலர் ஜூரோங் வட்டாரத்தில் தங்குவதால் மத்திய வட்டாரத்தில் நடைபெறும் கிரிக்கெட் விளையாட்டில் அவர்களால் பங்கேற்க முடிவதில்லை. அதனால், கிரிக்கெட் விளையாட வேறு திடல்களையும் ஆராய்கிறோம்,” என்றார் செல்வி ஹேமா.


“வெளிநாட்டு ஊழியர்கள் விருப்பத்துடன் ஈடுபடும் நடவடிக்கையை அவர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதால் கிரிக்கெட் விளையாட்டைத் தேர்வு செய்தோம்,” என்றார் செல்வி ‌ஷோபனா.


விளையாட்டு முடிந்த பின்னர் ஊழியர்களும் தொண்டூழியர்களும் திடலில் உட்கார்ந்து நொறுக்குத் தீனி உண்டு கலந்துரையாடுவது வழக்கம். சிறு வயது நினைவுகள் முதல் இந்திய அரசியல் வரை பல விஷயங்களைப் பேசி மகிழ்வார்கள்.


“நம் சந்திப்புகளில் எனக்கு மிகவும் பிடித்த வி‌‌ஷயம் இது. தொண்டூழியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே நெருக்கத்தை உண்டாக்க இக்கலந்துரையாடல்கள் வழிவகுக்கிறது. நண்பர்களாக நமது பிணைப்பை வலுப்படுத்துகிறது,” என்றார் செல்வி ‌ஷோபனா.


பொதுமக்கள் ஊழியர்களுடன் பழகும் வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் தளம் ஒன்றை உருவாக்கத் திட்டம் உள்ளதாகவும் இந்திய விழாக்களைப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு எதிர்காலத்தில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படலாம் என்றும் குறிப்பிட்டார் ஷோபனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!