தொழில் மேம்பாட்டு கலந்துரையாடல்

தொழில் தொடங்குபவர்கள் மேம்படுவதற்கு அவர்களுக்கிடையே திறன்களைப் பகிர்ந்துகொள்வது முக்கியம். புதிதாகத் தொடங்கப்பட்ட தொழில்களை மையப்படுத்தி, இந்திய தொழில்முனைவர்களிடையே தொழில்முனைப்பையும் நட்புறவையும் வளர்ப்பதற்கான நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடத்தப்பட்டது. 

இயூ டீ இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் நற்பணி அமைப்பின் இளையர் பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சுமார் 70 பேர் பங்கேற்றனர்.   

தொழில்நுட்பம், சமூக தொழில் நிறுவனங்கள், இணைய வர்த்தகம், உணவுத் துறை, நவீன நாகரிகம், கலை ஆகிய தலைப்புகளை ஒட்டி கருத்துகள் பகிரப்பட்டன.

‘டேய்.காம்.எஸ்ஜி’, ‘சஸ்டேனபல் லிவிங் லாப்’, ‘பொட்டுக்கார மாமி’, ‘கென்வின் அக்கௌண்டிங் அண்ட் ஐடி சர்வீசஸ்’, ‘ரிப்ரா ஏவியேஷன் பார்ட்னர்ஸ்’  ஆகியவற்றைச் சேர்ந்த தொழில்முனைவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர். 

‘சஸ்டேனபல் லிவிங் லாப்’ நிறுவனரும் இயக்குநருமான 34 வயது திரு வீரப்பன் சுவாமிநாதன் சமூகம், சுற்றுச்சூழல் குறித்துப் பேசினார். சமூகத்திற்குப் பயனளிக்கும் இலக்குகள், அதை அடைவதற்கான தொழில், கையாளவேண்டிய வழிமுறைகள் ஆகியன பற்றிப் பேசிய அவர், “மற்ற தொழில்கள் கையாளும் உத்திகளைப் பற்றி அறிந்து கொண்டேன்.  மின்னிலக்க உத்திகள் என்னை ஈர்த்தன,” என்றார்.     

வளரும் தொழில்முனைவர்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள தளத்தை உருவாக்கும் நோக்கத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது என்றார் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பூ.கணேஷ்,27. தொழில் தொடங்கும் இளையர்களுக்கு தொடக்கத்தில் அதிக ஆதரவு தேவை. தொடர்புகளை வளர்த்துக்கொள்ள இத்தகைய நிகழ்வுகள் உதவுகின்றன,” என்றார் அவர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேம்பல் லேனில் வரிசையாக வைக்கப்பட்டிருந்த 200 வகையான கறிகளின் வாசனை அந்தப் பகுதிக்கு வந்தவர்களின் வாயில் நாவூற வைத்தது. (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்)

16 Sep 2019

கேம்பல் லேனில் மணம் வீசிய 200 குழம்பு வகைகள்

ஊடகங்கள் இளையர்களை நெறிப்படுத்துவதாக தீர்ப்பு வழங்கிய நடுவர் திரு செ. ப. பன்னீர்செல்வம் அவர்களுடன் புக்கிட் மேரா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு.

15 Sep 2019

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பட்டிமன்றம்