இன நல்லிணக்கம் குறித்து துடிப்பான கருத்துப் பரிமாற்றம்

இனம் குறித்து அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் தனிப்பட்ட கருத்து இருக்கும் என்றும் சிங்கப்பூரில் இன நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்த கலந்துரையாடலில் அவர்களின் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டுவரவேண்டும் என்றும் போக்குவரத்து; தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கூறியுள்ளார்.

‘ஒன்பீப்பள்.எஸ்ஜி’ அமைப்பின் தலைவரான அவர், ‘இன பேத மின்றி- ஒரு கலந்துரையாடல்’ என்ற நிகழ்ச்சியை நேற்றுக் காலை வழிநடத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் நான்கு சிங்கப்பூரர்கள் இனம் குறித்த தங்க

ளின் கண்ணோட்டத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டனர்.

வழக்கறிஞரான இம்ரான் ரஹிம், சிங்கப்பூர் தேசிய பல் கலைக்கழகத்தில் பயிலும் ஸ்வேதா ராஜாராம், சீன சமூகத்தில் பல் லாண்டுகளாகச் சேவை செய்யும் சார்லி லீ, முன்னாள் செய்தியாளரும் பொதுக்கொள்கை ஆய்வாளருமான லெனார்ட் லிம் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

சுமார் 100 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இனம் குறித்த தங்களின் தனிப்பட்ட அனுப வங்களை வந்திருந்தோர் மற்றவர்களிடம் பகிர்ந்தனர்.

வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் இனவாதம் நம் சமு தாயத்தில் இன்னும் நிலவிவருகிறது என்பது பலரது கருத்து. ஆனால் முன்பிருந்த காலங்களில் இருந்த அளவைவிட அது மிகக் குறைவாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

வெவ்வேறு இனத்தவரும் அவரவர் சமூகத்தினருடன் மட்டுமே உறவாடுவதாகவும் இனங்களுக்கிடையே ஆழமான உறவாடுதல் இல்லை என்ற கருத்து பல்வேறு பேச்சாளர்களின் பார்வையில் வெளிவந்தது.

“மாண்டரின் மொழியை மட்டுமே இரண்டாம் மொழியாக வழங்கும் சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் உள்ள பள்ளிகள் செயல்படுவதை நிறுத்தமுடியாது. ஆனால் அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்ற இனத் தவருடன் உறவாட வாய்ப்புகள் இருப்பதில்லை.

“இணைப்பாட நடவடிக்கை மூலமாகவோ மாணவர் பரிமாற்றத் திட்டம் மூலமாகவோ மற்ற மாணவர்களோடு இணைந்து செயல்பட அந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்,” என்றார் பேச்சாளர்களில் ஒருவரான லெனார்ட் லிம்.

இனம் குறித்து தொடர்ந்து கலந்துரையாடல்கள் இடம்பெறவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார் ஸ்வேதா.

தமது குடும்பத்தைச் சுட்டிக்காட்டி அழகிய கதையோட்டத்துடன் பேசிய ஸ்வேதா, தமது தாத்தாவின் அனுபவத்தை மையக் கருவாகக் கொண்டு தமது இளம்பருவம் முதல் அவர் சந்தித்த இனவாத சூழல்களைப் பகிர்ந்தார்.

“நம் நாட்டின் பற்றுறுதியில் இடம்பெறும் ‘இனம், மொழி, சமய பேதமின்றி’ என்ற தொடரை தினமும் காலையில் வாசித்துவிட்டு மற்ற நேரங்களில் அதைப் பொருட்படுத்தாமல் செல்வது கூடாது,” என்று ஸ்வேதா கூறினார்.

இந்தக் கலந்துரையாடலை சேனல் நியூஸ் ஏஷியாவுடன் இணைந்து ஒன்பீப்பள்.எஸ்ஜி வழங்கியது. ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ அமைப்பின் ஆதரவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும் என்றும் இரண்டாவது நிகழ்ச்சி அடுத்த வாரம் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

“சிங்கப்பூரில் இனம் குறித்து மக்கள் வெளிப்படையாக அறிவார்ந்த முறையில் பேசவேண்டும். இனவாதத்தை நம் சமூகத்தில் குறைக்க ஒவ்வொருவரும் மற்ற இனங்களைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வைக் கொண்டிருந்தால் நல்லது. அதற்கு இதுபோன்ற கலந்துரையாடல்கள் நிச்சயம் உதவும்,” என்று கூறினார் ரோசஸ் ஆஃப் பீஸ் அமைப்பின் தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான முஹம்மது இர்ஷாத்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!