சுபாஷ் ஆனந்தனின் மரபை கட்டிக்காக்கும் விருது

காலஞ்சென்ற சிங்கப்பூரின் பிரபலக் குற்றவியல் வழக்கறிஞர் சுபாஷ் ஆனந்தன், குற்றவாளி

களுக்கு மறுவாய்ப்பு கொடுப்பதில் நம்பிக்கை உடையவர் என்றும் குற்றம் புரிந்தவர்கள் திருந்தி வாழ்வதில் மிகுந்த நம்பிக்கையும் கருணையும் கொண்டவர் என்றும் சட்ட, சுகாதார மூத்த துணை அமைச்சர் எட்வின் டோங் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ‘சுபாஷ் ஆனந்தன் மஞ்சள் நாடா ஸ்டார்’ கல்வி உதவி நிதி விருதுகளுக்கான நிதி திரட்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரு டோங் மேற்கண்ட கருத்தை முன்வைத்தார்.

“குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கும் சமூகத்தில் அவர்கள் மீண்டும் ஒன்றிணைவதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பதை சமுதாயம் ஏற்றுக்கொள்கிறது. முன்னாள் குற்றவாளிகள் மறுபடியும் குற்றம் புரியாமல் இருப்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதும் சமூகத்துடன் அவர்கள் ஒருங்கிணைய உதவுவதும் முக்கியம்,” என்று திரு டோங் வலியுறுத்தினார்.

குற்றவாளிகள் தங்களுக்குத் தாங்களே உதவுவது, அவர்களது குடும்பங்கள் அவர்களுக்கு உதவி அளிப்பது, சமுதாயம் அவர்களுக்கு உதவி என மூன்று வித அம்சங்களில் அரசாங்க முயற்சிகள் உள்ளடங்குகின்றன. கடந்த ஆண்டு சிங்கப்பூர் மறுவாழ்வு அமைப்புகள் கழகம் 2,336 முன்னாள் குற்றவாளிகளுக்கு வேலைவாய்ப்பு பெற வழிவகுத்துள்ளது என்று திரு டோங் மேலும் கூறினார்.

2014ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ‘சுபாஷ் ஆனந்தன் மஞ்சள் நாடா ஸ்டார்’ கல்வி உதவி நிதி விருது இதுவரை ஏறத்தாழ $326,000 நிதி திரட்டியுள்ளது.

2015ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை மொத்தம் $152,200 ரொக்கத்தை இந்த நிதி வழங்கியது. முன்னாள் குற்றவாளிகள் 15 பேரின் மேற்படிப்பிற்கு இந்த நிதி ஆதரவளித்துள்ளது. இவ்வாண்டுக்கான நிதி திரட்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நீடிக்கும்.

இந்நிதி மூலம் பயனடைந்த முன்னாள் குற்றவாளி ஒருவர், போதைப் பொருள் சார்ந்த குற்றங்களுக்காக பலமுறை சிறைக்குச் சென்றவர். இப்போது, இசைத் துறையில் மேற்படிப்பை மேற்கொள்ள இந்த கல்வி உதவி நிதியைப் பயன்படுத்திய அவர், தற்போது இசையமைப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்கள் சங்கக் கலைஞராக பணியாற்றி வருகிறார்.

இந்த முன்னாள் குற்றவாளியின் கதையை திரு டோங் தமது உரையில் சுட்டினார்.

திரு சுபாஷ் ஆனந்தனின் மனைவி திருவாட்டி விமலா ஆனந்தன், மகன் திரு சுஜேஷ் ஆனந்தன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

“நான் சுபாஷுடன் பணியாற்றியுள்ளேன். தமது சட்டப் பணியில் அவர் எவ்வளவு ஆர்வமுள்ளவர் என்பதை நான் கண்கூடாகப் பார்த்துள்ளேன். குறிப்பாக சிறு வயதினர், இளங்குற்றவாளிகளின் வாழ்க்கையை மாற்றுவதில் அவர் மிகுந்த ஆர்வமும் அர்ப்பணிப்பும் கொண்டவர்.

“தமது குற்றவியல் வழக்கறிஞர் சேவையை அவர்கள் மீண்டும் நாடக்கூடாது என்று சொல்வார். ஆனால், குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர்களைச் சந்தித்துப் பேச சுபாஷ் விரும்புவார். அவரது அந்த ஆர்வம் எனக்கும் ஓரளவு தொற்றியுள்ளது,” என்று திருவாட்டி விமலா நினைவுகூர்ந்தார்.

திரு சுஜேஷ் ஆனந்தன், இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வழக்கறிஞராவதற்ககுத் தகுதி பெற்றார். ஒரு நல்ல மனிதராக வாழ்வதற்கு தமது தந்தை தமக்கு பெரிதும் ஊக்கமளித்ததாக திரு சுஜேஷ் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“நீ என்ன வேண்டுமானாலும் செய், ஆனால் நல்லவராக இரு. மற்றவர்களுடன் நல்ல முறையில் பழகு. தங்களைச் சொந்தமாக கவனித்துக்கொள்ள முடியாதவர்களைப் பார்த்துக்கொள். எங்கு உதவி செய்ய முடியுமோ அங்கு உதவி செய் என்று எனது தந்தை என்னிடம் சொல்வார். என் தந்தை எந்த விதத்திலாவது மற்றவர்களுக்கு உதவியிருப்பார். அந்த இலக்கை சென்றடைய குற்றவியல் சட்டத்துறை அவருக்கு ஒரு தளமாக அமைந்தது,” என்றார் திரு சுஜேஷ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!