தமிழ் முரசுக்கு மெருகூட்டிய காணொளி

சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்தின் குரலான தமிழ் முரசு நாளிதழ் கடந்த 84 ஆண்டுகளாக இந்தச் சமுதாயத்தில் வெற்றிநடை போட்டுவருகிறது.

வார இதழாகத் தொடங்கி, பின்னர் வாரம் மூன்று முறை என்றும் பிறகு நாளிதழாகவும் உருவெடுத்து வந்துள்ளது இந்த நாளிதழ்.

உலகின் முன்னோடி தமிழ் நாளிதழ்களில் ஒன்றாக நிலைத்திருக்கும் தமிழ் முரசு, இவ்வாண்டு இணையத் தளத்திலும் முழுமூச்சாகச் செயல்பட்டு வருகிறது.

உடனுக்குடன் புதுப்புது செய்திகளை வாசகர்கள் தெரிந்து கொள்ளும் வசதி, படங்கள் மட்டு மின்றி காணொளிகள் மூலம் செய்தி வழங்குவது, முந்தைய செய்திகளைத் தேடி வாசிப்பது, படித்து ருசித்த செய்திகளை மற்றவர்களோடு பகிர்வது என புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது தமிழ் முரசின் புதிய இணையத் தளம்.

புதுப் பொலிவுடன், வாசகர்கள் எளிதாகப் படிக்க வகைசெய்யும் வண்ணம் தற்போதைய தளம் அமைந்துள்ளது.

சமூக ஊடகத்திலும் இந்த பழம்பெரும் ஊடகம் இணைந்து செயல் படுகிறது.

வாசகர்களின் திறன்பேசிக்குத் தினந்தோறும் செய்தி இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

இத்தகைய நிலையில் மேலும் பலரைத் தமிழ் முரசின் வாசகர்களாக இணைப்பதற்கு முயற்சி எடுத்துள்ளனர் சிலர்.

தமிழ் முரசின் தாய் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ், அதன் விளம்பரப் பிரிவின் முனைப்பில் விளம்பரக் காணொளி ஒன்றைத் தயாரித்துள்ளது.

அந்தக் காணொளிக்கு உயிரூட்டியுள்ளனர் நமது உள்ளூர் கலைஞர்கள்.

சிங்கப்பூர் இந்திய சமூகத்தினரால் மட்டுமல்லாமல் சிங்கப்பூரிலேயே அனைவராலும் நன்கு அறிமுகமான ‘வசந்தம் ஸ்டார்’ புகழ் ஷபீர் தபாரே ஆலம் இந்தக் காணொளியின் இசையை இயற்றியுள்ளார்.

“இந்தக் காணொளியில் வரும் இசையைத் தயாரித்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழுக்காக எப்போதுமே இசை மூலம் ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பதில் எனக்கு விருப்பம்,” என்றார் இசையமைப்பாளர் ஷபீர்.

“இந்தக் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக ஊடகங்களில் கிடைக்கும் வரவேற்பே அதற்கு சாட்சி.”

“தமிழை நம் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்போது ஈர்ப்புத் தன்மையுடன் கொண்டுபோய் சேர்ப்பது நமது கடமை.”

“இதுபோன்ற படைப்புகளைத் தயாரிக்கும்போது அந்தப் பொறுப்புணர்ச்சியுடன் செய்வது நமது கடமை. இதற்குப் பலர் கைகோர்த்துள்ளது மிகச் சிறப்பு.”

“யாரும் எந்தவித லாபத்திற்காகவும் இதை செய்யவில்லை. வர்த்தக நோக்கத்தில் இதில் யாரும் ஈடுபடவில்லை.

“தமிழுக்காகப் பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் சேவையாற்றி வரும் தமிழ் முரசுக்கு இந்தக் காணொளியில் நான் பங்காற்றியது நான் சொல்லும் நன்றி,” என்றார் ஷபீர்.

காணொளியை இயக்கியுள்ளார் பல உள்ளூர் தொலைக்காட்சி வெற்றி நாடகங்களையும் திரைப்படத்தையும் இயக்கியுள்ள அப்பாஸ் அக்பர்.

“தமிழ் முரசுக்கென தனித்துவமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காணொளியை இயக்கியதில் எனக்குப் பேரானந்தம். இதன் தொடர்பில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்,” என்றார் திரு அப்பாஸ் அக்பர்.

“முரசு என்பது சாதாரண இசைக் கருவி மட்டுமல்ல. அந்தக் காலத்தில் முரசைக் கொட்டித்தான் மக்களுக்குச் செய்தியைக் கூறுவார்கள். அதுபோல பல சுவாரசிய தகவல்களை இதன்மூலம் கற்றேன்,” என்றார் அவர்.

“காலம் காலமாக சிங்கப்பூரில் இயங்கிவரும் தமிழ் முரசு இக் காலத்தின் தேவைக்கேற்ப இணையத்தில் பவனி வருகிறது. அந்தச் செய்தியை மக்களுக்கு எடுத்துச் செல்ல இந்தக் காணொளியும் இளமையாகத் தோற்றமளிக்கவேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இதை இயக்கினோம்,” என்றும் அவர் தெரிவித்தார்.

பாரம்பரிய நடனத்தை நளினத்துடன் ஆடிய இளம் நடனமணி ஷ்ருதி நாயர் காணொளிக்கு மெருகூட்டியுள்ளார்.

“தமிழ் அழகிய மொழி. அனைவரும், குறிப்பாக இளையர்கள் தமிழ் மொழியைக் கற்று, அதைப் பேசி, எழுதி, வாசிக்க நேரத்தை ஒதுக்கவேண்டும். இந்தக் காணொளியைத் தயாரிக்க நான் சிறிய அளவில் நடனமாடி பங்காற்றியுள்ளேன். தமிழ் முரசு சிங்கப்பூரில் தமிழ் மொழியை வளர்க்கவும் பேணவும் எடுக்கும் முயற்சியை அறிந்து நானும் அம்மொழியை மேலும் படிக்கக் கடப்பாடு கொண்டுள்ளேன்,” என்றார் ஷ்ருதி.

தமிழ் முரசு, சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் முழுமையாக இணைந்து தற்போது ஆங்கில, மலாய், தமிழ் ஊடகப் பிரிவின் அங்கமாகச் செயல்படுகிறது.

சுமார் ஓராண்டுகாலம் ஆய்வு மேற்கொண்டு வாசகர்களின் தேவையறிந்து இணையத்தளத்தில் மாற்றங்கள் செய்து தொடர்ந்து மாற்றங்களை மேம்படுத்தி வருகிறது. இளையர்களுக்கு மத்தியில் தமிழ் முரசைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் இம்முயற்சியைச் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் எடுத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!