கோர்ட்ஸின் நூதன முயற்சி

பண்டிகை காலங்களில் தனியார் நிறுவனங்களும் அமைப்புகளும் சமுதாயத்திலுள்ள வசதி குறைந்தவர்களுக்கு ரொக்கம் அல்லது பொருட்களை நன்கொடையாக வழங்குவது வழக்கம்.
அறைகலன் சில்லறை வர்த்தகத்தில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வரும் ‘கோர்ட்ஸ்’ நிறுவனம் அதற்கு ஒரு படி மேல் சென்றது.
கடந்த மாதம் 17ஆம் தேதி, தமது 26 நிறுவன ஊழியர்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளிக்குச் சென்று, மாணவர்களுடன் சேர்ந்து தீபாவளியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதில் ஒன்றாக ‘கோர்ட்ஸ்’ ஊழியர்கள் சிலர் தீபாவளியைக் கொண்டாடும் அனுபவங்களை மாணவர்கள் முன்னிலையில் பகிர்ந்துகொண்டனர்.
வண்ணங்களைத் தீட்டியவாறு காகிதத் தட்டுகளைக் கொண்டு ரங்கோலி சித்திரங்களை வரையவும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
‘கோர்ட்ஸ்’ தமது நிறுவனச் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ், கேர் சமூக சேவைகள் சங்கம் (CCSS) நடத்தும் நான்கு மாணவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அது மொத்தம் $17,000 மதிப்புள்ள மின்னியல் சாதனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஐ-பெட், மடி கணினி, ‘புலூடூட்’ ஒலிபெருக்கி போன்ற கற்றல் தொடர்பான சாதனங்களும் வெப்பமானி (thermometer), முடி உலர்த்தி (hair dryer) போன்ற வீட்டுச் சாதனங்களும் இவற்றில் அடங்கும்.
இந்த மாணவர் பராமரிப்பு நிலையங்களில் வசதி குறைந்த பின்னணியிலிருந்து வரும் மாணவர்களுக்கு தங்களது பண்பு நலன் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள் பள்ளி நேரம் முடிந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்த நான்கு நிலையங்களில் ஒன்று நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் இயங்குகிறது.
‘‘மாணவர்கள் உற்சாகத்துடன் நடவடிக்கைகளில் கல ந்துகொண்டனர், கொண்டாட்ட உணர்வைப் பல்லலினத்தவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு இத்தொண்டூழிய முயற்சி வழி கிடைத்தது,’’ என்று கூறினார் கடந்த 26 ஆண்டுகளாக ‘கோர்ட்ஸ்’ நிறுவனத்தில் தளவாட நிர்வாகியாகப் பணியாற்றும் திருமதி கோ.தனலட்சுமி, 53.
இதுவரையில் முதியோர் தொடர்புடைய தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இவர் பிள்ளைகளுடன் இணைந்து செயல்பட்டது ஒரு மாறுபட்ட அனுபவம் என்று விளக்கினார்.
‘‘குடும்ப பொருளாதார சூழ்நிலையினால் கோர்ட்ஸ்’ நன்கொடையாக வழங்கிய சாதனங்கள் இம்மாணவர்களின் வீட்டில் இல்லாமல் இருக்கலாம்.
கற்றலுக்கு உகந்த குடும்பச் சூழலை வகுப்பறையில் உருவாக்கி, தங்கள் வீட்டுப் பாடங்களை இம்மாணவர்கள் எளிதாக செய்து முடிக்க இந்த நன்கொடைகள் உதவுகின்றது,’’ என்று தெரிவித்தார் கேர் சமூக சேவைகள் சங்கத்தின் செயல் இயக்குநர் திரு டவின் லீ.
நடவடிக்கைகளில் துடிப்பாக பங்குபெற்ற 80 மாணவர்களில் ஒருவரான 12 வயது மாணவர் முகமது அமிருடீன், தீபாவளியைப் பற்றி தெரியாத விஷயங்களைத் தொண்டூழியர்களிடமிருந்து கேட்டு அறிந்து கொண்டதாகச் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!