100,000க்கும் அதிகமாக பார்க்கப்பட்ட காணொளி

தமிழ் முரசு அண்மையில் வெளியிட்ட விளம்பரக் காணொளி 122,549க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது

உலகின் முன்னோடி தமிழ் நாளிதழ்களில் ஒன்றாக நிலைத் திருக்கும் தமிழ் முரசு, இவ்வாண்டு இணையத் தளத்திலும் முழு மூச்சாகச் செயல்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகள், வாசகர்களின் கைகளுக்கு உடனே கொண்டு சேர்க்கும் வசதி, படங்கள் மட்டுமல்லாமல் காணொளிகள் மூலம் செய்தி வழங்குவது, முந்தைய செய்திகளை தேடி வாசிப்பது, படித்து ரசித்த செய்திகளை மற்றவர் களோடு பகிர்வது என பல புதிய அம்சங்களை உள்ளடக்கியுள்ளது தமிழ் முரசின் புதிய இணையத் தளம்.

இதனை பிரபலப்படுத்தும் வகையில் தமிழ் முரசின் தாய் நிறு வனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல் டிங்ஸ், அதன் விளம்பரப் பிரிவின் முயற்சியில் விளம்பரக் காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டது. கடந்த மாத இறுதியில் வெளி யிடப்பட்ட இந்தக் காணொளி 116,000க்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் இந்திய சமூகத்தினர் மட்டுமல்லாமல் சிங்கப்பூரில் அனை வருக்கும் நன்கு அறிமுகமான ‘வசந்தம் ஸ்டார்’ புகழ் ஷபீர் தபாரே ஆலம் இந்தக் காணொளியின் இசையை அமைத்துள்ளார். 

“இந்தக் காணொளிக்கு இசை அமைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழுக்காக எப்போதுமே இசை மூலம் ஏதேனும் ஒரு விதத்தில் பங்களிப்பது எனக்கு விருப்பம்,” என்றார் இசையமைப்பாளர் ஷபீர்.

“இந்தக் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது. சமூக ஊடகங்களில் கிடைக்கும் வர வேற்பே அதற்கு சாட்சி,” என்றும் அவர் சொன்னார். 

பாரம்பரிய நடனத்தை நளினத்துடன் ஆடி காணொளிக்கு இளம் நடனமணி ஷ்ருதி நாயர் மெருகூட்டியுள்ளார். 

“தமிழ் அழகிய மொழி. அனை வரும், குறிப்பாக இளையர்கள் தமிழ் மொழியைக் கற்று, அதைப் பேசி, எழுதி, வாசிக்க நேரத்தை ஒதுக்க வேண்டும். 

“இந்தக் காணொளியைத் தயாரிக்க நான் சிறிய அளவில் நடனமாடி பங்காற்றியுள்ளேன். சிங்கப்பூரில் தமிழ் முரசு தமிழ் மொழியை வளர்க்கவும் பேணவும் எடுக்கும் முயற்சியை அறிந்து நானும் அம்மொழியை மேலும் படிக்கக் கடப்பாடுக் கொண்டு உள்ளேன்,” என்றார் ஷ்ருதி.

இசையையும் நடனத்தையும் ஒருங்கிணைத்து நவீனமாக துடிப்புடன் காட்சியாக வழங்கிய மற்றோர் உள்ளூர் பிரபலமும் திரு ‌‌ஷபீரின் சகோதரருமான இயக்குநர் அப்பாஸ் அக்பர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon