காற்பந்துப் போட்டியை விறுவிறுப்பாக்கிய செயலியின் பயன்பாடு

ஒன்பதாவது முறையாக நடந்தேறும் ‘டாக்டர் பாலாஜி சதாசிவன் ஃபுட்சால் ஃபைவ்ஸ்’ எனப்படும் வருடாந்திர காற்பந்துப் போட்டி இவ்வாண்டு புது செயலியின் பயன்பாட்டைக் கண்டது.
“‘ஃபுட்சி’ (Footsy) என்ற செயலியை இந்தப் போட்டியில் பயன்படுத்தினோம். இதனால் நேரடி புள்ளி விவரங்களைத் திரைகளில் காட்ட முடிந்தது,” என்று தெரிவித் தார் ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் குமாரி ரேவதி நாக ராஜன், 28.
“தேவையான ஆவணங்களைத் தயாரிக்கவும் முடிந்தது. போட்டியின் தரமும் அதிகரித்துள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
காலஞ்சென்ற டாக்டர் பாலாஜி சதாசிவனின் நினைவில் நடத்தப்படும் இந்த போட்டி, மக்கள் கழக நற்பணிப் பேரவையின் இளையர் அணியால் ஓவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மறைந்த டாக்டர் பாலாஜியின் மனைவி டாக்டர் மா சுவான் ஹூ கலந்துகொண்டார்.
கோவன் விளையாட்டு மையத்தில் நவம்பர் 30 ஆம் தேதி நடந்த காற்பந்துப் போட்டியில் கிட்டத்தட்ட 350 விளையாட்டாளர்கள் பங்கேற்றனர்.
மொத்தம் நான்கு பிரிவுகளில் 44 குழுக்கள் போட்டியிட்டன. கடந்த ஆண்டு 32 குழுக்கள் களம் இறங்கின.
காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை இப்போட்டி நடந்த நிகழ்வில் இந்தியர்களும் மற்ற பல இனத்தவர்கள் உட்பட ஆண்களும் பெண்களும் களமிறங்கினர்.
இவ்வாண்டு முதல் முறையாக பெண்கள் பிரிவின் வெற்றியாளருக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கப்பட்டது.
“அண்மைய ஆண்டுகளில் பெண்களின் ஈடுபாடு அதிகரித்துகொண்டே வருகிறது,” என்று குறிப்பிட்ட குமாரி ரேவதி, “குறிப்பாக இந்த ஆண்டு பெண் விளையாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகம்,” என்றார்.
“வழக்கமாக ஏறத்தாழ 10 குழுக்கள் பதிவு செய்யும். ஆனால் இவ்வாண்டு 15 பெண் குழுக்களைக் கண்டோம்,” என்றார் ரேவதி.
பெண்கள் பிரிவில் ‘டிம் திமுன்’ (Team Timun) என்ற குழுவும் 35 வயதிற்கும் மேற்பட்ட ஆண்களுக்கான ‘மாஸ்டர்ஸ்’ (Masters) பிரிவில் ‘நார்தன் ரேஞ்சர்ஸ்’ (Northern Rangers) என்ற குழுவும் முதல் இடம்பிடித்தன.
இரு குழுக்களுக்கும் தலா $500 ரொக்கம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
21 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ‘லா ப்ளாட்டா ஜூனியர்ஸ்’ என்ற அணியும் 35 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ‘எ நொக்காவுட்’ என்ற அணியும் முதல் இடம்பெற்றன. ஒவ்வொரு குழுவுக்கும் தலா $1,000 பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
21 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் பல ஆண்டுகளாக பங்கேற்று வந்தாலும் முதல் முறையாக இவ்வாண்டுதான் ‘லா ப்ளாட்டா’ குழு போட்டியில் வென்றுள்ளது.
சென்ற ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தோம். கடுமையான போட்டிக்கு இடையே வெல்வதற்கு மிகுந்த ஆனந்தம் அடைகிறோம்,” என்று கூறினார் ‘லா ப்ளாட்டா ஜூனியர்ஸ்’ அணியைச் சேர்ந்த விளையாட்டாளர் திரு புவன் ராஜ், 18.
“தொழில்நுட்பத்தின் உதவியுடன் இவ்வாண்டின் ஆட்டங்களுக்காக எங்கள் குழுவைத் தயார் செய்வது எங்களுக்கு வசதியாக இருந்தது. நேர நிர்வகிப்பு, தொண்டூழியர்களின் கடின உழைப்பு, தரமான உணவு போன்ற அம்சங்கள் ஒன்றிணைந்து மற்ற பல போட்டி நிகழ்வுகளைவிட இது சிறப்பாக ஏற்பாடு செய்யப்படுகிறது,” என்று தெரிவித் தார் ‘செனோரீட்டா’ (Senorita) பெண்கள் அணி விளையாட்டாளர் குமாரி உமா தேவி, 26.
“மருத்துவ உதவியாளர்கள் துடிப்புடனும் வேகமாகவும் செயல்பட்டார்கள். எதிர்கால போட்டிகளில் மருத்துவ உதவி வழங்குபவர்கள் இன்னும் சிறப்பான மருத்துவ உதவியை வழங்கலாம்,” என்றார் உமா தேவி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!