பாது­காப்பு அர­ணா­கும் முதி­யோர் இல்­லம்

ஸ்ரீ நாரா­யண மிஷன் முதி­யோர் இல்­ல­வாசி திரு ராமச்­சந்­தி­ரன் கண்­ணப்­பன், 90 தம் வாழ்­நா­ளில் பல­வற்­றைக் கண்­டி­ருந்­த­போ­தும் தற்­போது நில­வும் கொரோனா கிரு­மித்­தொற்று மாறு­பட்ட கவ­லையை அளித்­துள்ளதா­கத் தெரி­வித்­தார். இருந்­த­போ­தும் இந்த நோய்ப்­ப­ர­வ­லைச் சமா­ளிக்­கும்­போது மருத்­துவ ரீதி­யிலான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரும் அதே வேளை­யில் மனம் தள­ர­வி­டா­மல் பாதுகாத்­துக்­கொள்­வது முக்­கி­யம் என்­றார் அந்த முதி­ய­வர்.

“இப்­போ­தெல்­லாம் செய்­தித்­தா­ளைப் படிக்­கும்­போது நான் அதி­கம் கவ­லைப்­ப­டு­வேன். வாழ்ந்து முடித்த எனக்­காக அல்ல. தங்­கள் வாழ்­நா­ளில் எவ்­வ­ளவோ சாதிக்க வேண்­டிய என் பேரப்­பிள்­ளை­க­ளைப் போன்ற இளை­யர்­க­ளுக்­காக,” என்­றார் திரு ராமச்­சந்­தி­ரன்.

இல்­ல­வா­சி­க­ளின் செயற்­கு­ழுத் தலை­வ­ரா­க­வும் இருக்­கும் திரு ராமச்­சந்­தி­ரன், தம்­மைப் போன்ற பிற முதி­யோ­ரை­யும் பரா­ம­ரிப்­ப­தில் கண்­ணும் கருத்­து­மாக இருக்­கி­றார். கொரோனா கிரு­மிப்­ப­ர­வல் குறித்த அச்­சத்துக்கு இடையே சக இல்­ல­வா­சி­கள் சரி­யாக சாப்­பிட்டு தங்­க­ளைப் பார்த்­துக்­கொள்­கி­றார்­களா என கவ­னித்து வருகிறார்.

“இங்­குள்ள ஒவ்­வொரு முதி­யோ­ரும் வெவ்­வேறு மன­நி­லை­யில் இருப்­பர். சிலர் மன­மு­வந்து ஈடு­படு­கி­றார்­கள். வேறு சில­ருக்கோ பிடி­வா­தம் சற்று அதி­க­மாக இருக்­கும். பல­ருக்கு ஞாப­க­ம­றதி என்­ப­தால் அத­னை­யும் நாம் கருத்­தில்­கொள்ள வேண்­டும். இவர்­கள் அனை­வ­ரை­யும் இல்­லப் பணி­யா­ளர்­களும் நாமும் அர­வ­ணைத்து அவர்­க­ளுக்கு தைரி­ய­மூட்டி வரு­கி­றோம்,” என்று அவர் சொன்­னார்.

இவ­ரைப் போன்ற முதி­யோர் இல்­ல­வா­சி­க­ளுக்­கும் இல்­லப் பணி­யா­ளர் மற்­றும் நிர்­வா­கி­க­ளுக்­கும் பக்­க­ப­ல­மாக நிற்­கும் தெமா­செக் அற­நி­று­வ­னம், கைக­ளுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் கிரு­மி­நா­சினி திர­வங்­களை வழங்­கு­கிறது.

அந்த அற­நி­று­வ­னம் தனது முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக நேற்று முன்­தி­னம் மார்ச் 13ல் ஸ்ரீ நாரா­யண மிஷன் பரா­ம­ரிப்பு இல்­லத்­திற்­கும் ஜாமியா இல்­லத்­திற்­கும் இந்தக் கிரு­மி­நா­சி­னி­களை வழங்­கி­யது. 300 பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளுக்கு இதுபோன்ற உத­விப் பொருட்­கள் வழங்­கப்­படும் என்றார் தெமா­செக் அற­நி­று­வ­னத்­தின் தலை­வர் ரிச்­சர்ட் மேக்­னஸ்.

“முதி­ய­வர்­கள் சமு­தா­யத்­தி­ன­ரால் பொது­வாக மறக்­கப்­பட்­ட­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். உரிய பரா­ம­ரிப்பு இல்­லா­விட்­டால் அவர்­கள் பல்­வேறு அபா­யங்­களை எதிர்­நோக்­கக்­கூ­டும். எனவே அவர்­க­ளைக் கண்­கா­ணித்து உரிய உத­வி­க­ளைக் கொடுப்­பது முக்­கி­யம்,” என்­றார் திரு மேக்­னஸ்.

நோய்ப்­ப­ர­வ­லால் அனை­வ­ருக்­கும் பீதி ஏற்­ப­டு­வது இயற்கை என்­றா­லும் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளைப் பின்­பற்­று­வ­தில்­தான் இல்­லப்­ப­ணி­யா­ளர்­கள் கவ­னம் செலுத்­து­வ­தாக ஆறு ஆண்­டு­க­ளா­கப் பணி­யாற்­றும் பரா­ம­ரிப்­பா­ள­ரான ச. மகா­லட்­சுமி, 42 கூறினார்.

“நமது சுகா­தார பரா­ம­ரிப்­பின் தரம் உயர்­வாக இருப்­ப­தால் ஏற்­கெ­னவே செய்­யப்­பட்டு வரும் சுகா­தார நட­வ­டிக்­கை­களே இதற்­கான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளாக உள்­ளன,” என்றார் மகாலட்சுமி.

இத்­த­கைய நேரங்­களில் பொது இடங்­க­ளை­விட இந்த முதி­யோர் இல்­லத்­தில் பாது­காப்பு அதி­கம் என உணர்­வ­தாக மற்­றொரு இல்­ல­வா­சி­யான திரு லட்­சு­ம­ணன் பிர­கா­சம், 84, தெரி­வித்­தார்.

“நோய்ப்­ப­ர­வல் குறித்து எனக்கு சற்று பய­மாகவே இருந்­தது. இல்­லப் பணி­யா­ளர்­கள் இத­னை திற­மை­யா­கக் கையாள்­வதைக் கண்டு நான் வியப்­ப­டை­கி­றேன்,” என்றார் இளம்­ப­ரு­வத்­தில் தபால் அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றிய திரு லட்­சு­மணன்.

மகா­லட்­சுமி போன்ற பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளின் சேவை பெற்­றோர்­ தங்­க­ளது பிள்­ளை­க­ளுக்­குக் கொடுக்­கும் பரா­ம­ரிப்­புக்கு ஒப்­பா­னது என்றார் திரு லட்­சு­ம­ணன்.

கொரோனா கிரு­மித்­தொற்று தொடங்­கி­யது முதல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள், மாற்று வேலை ஏற்­பாடு என பல்­வேறு திட்­டங்­கள் நடப்­பில் இருப்­ப­தா­கக் கூறி­னார் ஸ்ரீ நாரா­யண மிஷன் பரா­ம­ரிப்பு இல்­லத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி எஸ். தேவேந்­தி­ரன்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!