பள்ளிப்பருவ பல்லழகி; சொல்லி மகிழும் பூங்கொடி

1970களில் தொடக்­கப்­பள்ளி ஒன்­றாம் வகுப்பு மாண­வி­யான பூங்­கொடி பொன்­னு­சாமி அப்­போது தொடக்­கப்­பள்ளி மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­பட்ட பல் அழ­குப் போட்­டி­யில் முதல் பரிசு வென்­றார். அந்த அற்­பு­த­மான நிக­ழ்வை நினை­வூட்­டிய புகைப்­ப­டம் ஒன்று சில நாட்­க­ளுக்கு முன் ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்­தித்­தா­ளில் வெளி­வந்­தது. பல காலம் கடந்த பின்­னர் வெளி­யி­டப்­பட்ட இப்­பு­கைப்­ப­டம் தம்மை வியப்­பில் ஆழ்த்­தி­ய­தாக தற்­போது 52 வய­தா­கும் பூங்­கொடி தமிழ் முர­சி­டம் தெரி­வித்­தார்.

அந்­தப் படம் எடுக்­கப்­பட்­ட­போது அவ­ருக்கு வயது ஆறு. தஞ்­சோங் பகார் வட்­டா­ரத்­தில் நான்கு சகோ­த­ரர்­க­ளு­டன் வளர்ந்த பூங்­கொடி, பெக் சியா தொடக்­கப்­பள்­ளியில் பயின்­ற­போது அதன் பல்­ம­ருத்­துவ தாதி­யர்­கள் தமது பற்­க­ளின் சீரான வரிசை கண்டு பாராட்­டி­யதை நினை­வு­கூர்ந்­தார்.

“ஒரு நாள் என் பெற்­றோர் அரங்­கம் ஒன்­றுக்கு என்னை அழைத்­த­னர். அங்கு அமர்ந்­தி­ருந்த பெருங்­கூட்­டத்­தின் முன்­னி­லை­யில் எனக்கு அந்­தப் பரிசு வழங்­கப்­பட்­டது. அப்­போது தொலைக்­காட்­சி­யில் செய்தி வாசித்த வெள்­ளைக்­கா­ரர் ஒரு­வர் எனக்கு அந்­தப் பரிசை வழங்­கி­ய­தாக எனக்கு நினைவு இருக்­கிறது,” என நினை­வுப்­ப­டுத்­திச் சொன்­னார் அவர்.

ஹைத­ரா­பாத் ரோட்­டில் இருந்த பல் சுகா­தார கல்­விப் பிரி­வில் நடந்த பல் சுகா­தா­ரப் போட்­டி­யின் இறு­திச்­சுற்­றுக்­குத் தகு­தி­பெற்ற 10 பேரில் திரு­வாட்டி பூங்­கொடி முதல்­

நி­லை­யில் வெற்­றி­ய­டைந்து 200 வெள்ளி பரி­சைத் தட்­டிச்­சென்­றார். கோல்­கேட் - (ஈஸ்­டர்ன்) பாம்­ஆ­லிவ் லிமிட்­டெட் ஆத­ர­வ­ளித்த இந்­நி­கழ்ச்­சி­யில் 724 தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

இரண்­டா­வது பரிசு டோர்­செட் பள்­ளி­யைச் சேர்ந்த லிம் சியாவ் ஹூனுக்­கும் மூன்­றாம் பரிசு கிம் செங் வெஸ்ட் பள்­ளி­யைச் சேர்ந்த டி. ராஜ­சே­க­ருக்­கும் கிடைத்­த­தாக 1974ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி ‘ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்­தித்­தா­ளில் வெளி­வந்த கட்­டு­ரை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

போட்­டி­யின் நீதி­ப­தி­க­ளாக நான்கு பல் ம­ருத்­துவ தாதி­யர்­க­ளான டியோ ஹுவா யின், வோங் கீ வான், பிலோ­மெனா, ஆர். ஸ்ரீனி­வா­சன் ஆகி­யோ­ரு­டன் படம் எடுத்­த­து­தான் அவ்­வ­ளவு நினை­வில் இல்லை என்று திரு­வாட்டி பூங்­கொடி தெரி­வித்­தார். ஆனால் அவர்­கள் அனை­வ­ரை­யும் காட்­டிய படம் 1974ல் வெளி­வந்த செய்­தி­யில் இருந்­த­தைக்­காட்­டி­லும் பெரிய அள­வில் கடந்த மாதம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸில் வெளி­யா­ன­தைக் கண்டு மேலும் வியந்­த­தாக பூங்­கொடி கூறி­னார்.

தமிழ் முர­சின் பேஸ்­புக் பக்­கத்­தில் பூங்­கொ­டி­யைத் தொடர்­பு­கொள்­ளக் கேட்­டி­ருந்த பதிவு பற்றி ஜேக்­சன் என்­ப­வர் திரு­வாட்டி பூங்­கொ­டிக்­குத் தெரி­வித்­தார். அதன் மூலம் தமிழ் முரசு திரு­வாட்டி பூங்­கொ­டி­யைத் தொடர்­பு­கொண்டு அவ­ரது பள்­ளிப்­ப­ருவ நினை­வு­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டது.

“அரி­தான அந்­தப் புகைப்­ப­டத்தை ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தா­ளில் பார்த்த நான், அதன் பிறகு தமிழ் முர­சின் பேஸ்­புக் பதிவு குறித்து பூங்­கொ­டி­யி­டம் தெரி­வித்­தேன்,” என்று கூறி­னார் விமான நிலைய பய­ணச் சேவை அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றும் ஜேக்­சன் சந்­தி­ர­சே­க­ரன், 53.

பல் அழ­குப் போட்­டி­யில் வென்­றதை அடுத்து, தம் பள்­ளி­யின் தமிழ் ஆசி­ரி­யர்­களும் சக மாண­வர்­களும் தம்மை ‘பல்­ல­ழகி’ என அழைக்கத் தொடங்கியதாக புன்­ன­கை­யு­டன் நினை­வு­கூர்ந்­தார் பூங்­கொடி.

“குறிப்­பாக திரு முத்­தையா என்ற ஆசி­ரி­யர் என்னை அப்­படி அழைத்­த­தாக எனக்கு நினைவு இருக்­கிறது,” என்ற அவர், போட்­டிக்­குப் பிறகு சிறிது காலம் பள்­ளி­யின் குட்­டிப் பிர­ப­ல­மாக வலம் வந்­த­தா­கச் சொன்­னார். வய­தான சிலர் இன்­று­கூட தம்மை அப்­ப­டியே அழைப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். பூங்­கொ­டி­யின் பற்­கள் இப்­போ­தும் நல்ல ஆரோக்­கி­யத்­து­டன் உள்­ள­தைக் காண முடிந்­தது.

சிங்­கப்­பூர் மக்­கள் கம்­பத்து வாழ்க்கை முறை­யி­லி­ருந்து நக­ரச்­சூ­ழ­லுக்கு மாறிக்­கொண்­டி­ருந்த காலக்­கட்­டத்­தில் திரு­வாட்டி பூங்­கொ­டி­யின் பிள்­ளைப்­ப­ரு­வம் கழிந்­தது. 2004ஆம் ஆண்­டில் 74 வய­தாக இருந்த தமது தந்தை சங்­க­ரன் பொன்­னு­சாமி கால­மா­கி­விட, தற்­போது தமது தாயார் தில­கத்­துக்கு 77 வயது ஆவ­தா­கக் கூறி­னார். நான்கு சகோ­த­ரர்­க­ளு­டன் ஒரே வீட்­டில் வளர்ந்த நாட்­கள் தம் வாழ்­நா­ளில் மறக்­க­மு­டி­யாத பசு­மை­யான காலக்­கட்­டம் எனத் தெரி­வித்­தார்.

“வெயில், மழை பாரா­மல் வெளி­யில் விளை­யா­டி­னோம். சேறு சக­தியை பொருட்­டா­கக் கரு­த­மாட்­டோம். தெருத்­தெரு­வா­கச் சுற்­றும் ‘பாய்’யிடம் ‘காயா’ ரொட்டி வாங்­கி­னோம். மரங்­களில் ஏறிப் பழங்­க­ளைப் பறித்­தோம். காயம்­பட்­டா­லும் அதனை மிகைப்­ப­டுத்­த­மாட்­டோம். இக்­கா­லத்­தில் எந்­நே­ர­மும் தொழில்­நுட்­பத்­தில் மூழ்­கி­யுள்ள பிள்­ளை­கள் பல­ருக்­குக் கிடைத்­தி­ராத அந்த அரிய அனு­ப­வங்­கள் இன்­றும் நினைக்க நினைக்க இனி­மை­யா­னவை.

“அனை­வ­ரின் கத­வு­கள் திறந்தே இருக்­கும். இன, சமய வேற்­று­மை­யின்றி எல்­லோ­ரும் பழ­கு­வோம். அக்­கா­லத்­தில் பல­ருக்­குப் படிப்­ப­றிவு இல்­லா­த­போ­தும் பண்­பு­கள் இருந்­தன,” என்­றார் பூங்­கொடி.

பிள்­ளைப்­ப­ரு­வத்­தின்­போது மக்­க­ளுக்கு இடையே இருந்த நெருக்­கம் இப்­போது குறைந்­து­விட்­ட­தாக உணர்­கி­றார் இந்த மாது.

தற்­போது கே கே மக­ளிர் குழந்­தை­கள் மருத்­து­வ­ம­னை­யில் மூத்த இணை நிர்­வா­கி­யா­கப் பணி­பு­ரி­யும் பூங்­கொடி, ஜூரோங் வட்­டா­ரத்­தில் தமது 22 வயது மகன் அர­விந்­து­ட­னும் 17 வயது மகள் அஷ்­மி­தா­வு­ட­னும் வசிக்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!