பயத்தை புறந்தள்ளி பொறுப்போடு பணிசெய்வோர்

கொரோனா கிருமி பெரும்­பா­லா­ன­வர்­களை வீட்­டி­லேயே முடக்­கி­யி­ருக்­ கிறது என்­றா­லும் இதர சிலர் 24 மணி நேர­மும் உழைக்க வேண்­டிய நிலையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­த­கையோரில் சுத்­தி­க­ரிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களும் ஒரு பிரிவினர். கிருமி தொற்றும் ஆபத்துள்ளபோதிலும் கிருமிப் பரவலை தடுப்பதில் அயராது பாடுபட்டு வருகின்றனர் இவர்கள்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட இடங்­க­ளைச் சுத்­தம் செய்­வ­தற்­கா­கவே கிருமி ஒழிப்புப் பணிக்­கு­ழுவை அமைத்­துள்­ளது மருத்­து­வ­ம­னை­, பள்­ளி, வர்த்­த­கக் கட்­ட­டங்­கள் போன்ற இடங்­க­ளுக்கு சுத்­தி­க­ரிப்புச் சேவை வழங்கி வரும் ‘ஐஎஸ்­எஸ் வேர்ல்ட்’ நிறு­வ­னம்.

நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்­களைக் கொண்டுள்ள இந்த பணிக்­குழு, 15 சிறு குழுக்­க­ளாக இயங்­கு­கிறது. ஒவ்­வொரு குழு­வி­லும் 3 முதல் 5 உறுப்­பி­னர்­கள் உள்­ள­னர்.

“இக்­கு­ழு­வில் இடம்பெற்றுள்ள பலர், சார்ஸ் காலத்­தில் பணி­யாற்­றிய அனு­ப­வம் பெற்றவர்கள். அது இப்­போது கை­கொ­டுக்­கிறது,” என்­றார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி, ஜீனா தோ.

­நி­று­வ­னத்­தின் சுத்­தி­க­ரிப்பு மேற்­பார்­வை­யா­ள­ரான திரு­மதி கலா தேவி, 38 வாரத்­தில் ஆறு நாட்­கள் பணி­யாற்­று­கி­றார்.

“ஒரு நாளில் வழக்­க­மாக இரு­முறை சுத்­தப்­ப­டுத்த வேண்­டிய நுழை­வா­யில், முகப்பு, கதவு கைப்­பிடி, மின்தூக்கி பொத்­தான்­கள், கழி­வ­றைக் கத­வு­கள் போன்ற மக்­கள் அடிக்­க­டி தொடும் இடங்­களை இப்­போது நான்கு முறை சுத்­தம் செய்­கி­றோம்,” என்­றார் மலே­சி­ய­ரான திரு­மதி கலா.

“கல்வி நிலை­யங்­க­ளைச் சுத்­தப்­ப­டுத்­து­வது சற்று கடி­னம். மாண­வர்­கள் வந்­து­போய் கொண்­டி­ருப்­பார்­கள். வகுப்­ப­றை­கள், விரி­வுரை மண்­ட­பங்­கள் போன்ற இடங்­களில் நாற்­காலி, மேசை­கள் சுத்­தம் செய்­வது கடி­னம். தேர்­வு­கள் நடக்­கும் சம­யத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான மேசை­க­ளை­யும் நாற்­கா­லி­க­ளை­யும் சுத்­தம் செய்­ய­வேண்­டி­யி­ருக்­கும். தேர்­வு­க­ளின்­போது இரண்டு மணி நேர இடை­வெ­ளிக்­குள் வேலை­யைச் செய்து முடிக்­க­வேண்­டும்,” என்று குறிப்­பிட்­டார் திரு­மதி கலா.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் வழி­மு­றை­கள், ஆலோ­ச­னை­க­ளின்­படி சுத்­தி­க­ரிப்புப் பணி­களை மேற்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்ட சுத்­தி­க­ரிப்பு சிறப்புப் பிரி­வின் மூத்த நிர்­வா­கி­யான திரு அலேக்ஸ் ஹவ், 44, பொது­வான பலபயன் சவர்க்கா­ரத்­திற்கு பதி­லாக கிரு­மி­க­ளைக் கொல்­லும் ரசா­ய­னங்­களை உப­யோ­கிப்­ப­தா­கக் கூறி­னார்.

துறை­சார்ந்த நிபு­ணர்­கள் மூலம் தேவை­யான பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு இது­போன்ற சூழ்­நி­லை­களுக்கு ஊழி­யர்­கள் எப்போதும் தயார்நிலை­யில் உள்­ள­னர் என்­பதை திரு­மதி கலா குறிப்பிட்டார்.

கடந்த 1995ல் இலி­ருந்து இயங்கி வரும் ‘ஐஎஸ்­எஸ் வேர்ல்ட்’ நிறு­வனம் கிட்­டத்­தட்ட 1,700 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு சேவை வழங்­கு­கிறது. ஏறத்­தாழ 10,000 ஊழி­யர்­கள் வேலை பார்க்­கின்­ற­னர். இதில் கிட்­டத்­தட்ட 1,600 பேர் மலே­சி­யர்­கள். மலே­சிய அரசு நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை விதித்­ததை அடுத்து அவர்­க­ளின் தங்­கு­மிட வச­தி­கள், போக்­கு­வ­ரத்து, உணவு போன்­ற­வற்­றுக்கு ஏற்­பாடு செய்து, பணி இடை­விடாமல் தொடர முயற்சி எடுத்­துள்­ளது.

பயத்­து­டன் பணி­யாற்­றும் சுத்­தி­க­ரிப்­புத் துறை­யி­னர்

தொற்­று­நோய் பர­வ­லின்­போது சுகா­தா­ரத் துறை­யி­ன­ரைப் போன்று முன்­ன­ணி­யில் பணி­யாற்­றும் துப்­பு­ர­வுத் துறை­யி­ன­ருக்­கும் ஆபத்­துக்­கான வாய்ப்­பி­ருக்­கிறது என்­றார் ‘புரா­ஜெக்ட் 27 ஹோல்­டிங்ஸ் 27 கிளீன் ஹஸல்’ நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர்­க­ளின் ஒரு­வ­ரான திரு மஹெஸ்­வ­ரன் ராம­சாமி, 25.

“கிருமி தொற்­றிய ஒரு­வ­ரின் காரைச் சுத்­தும் செய்­யும் பணி வந்­தபோது ஊழி­யர்­கள் பயந்­த­னர். அத­னால் நாங்­கள் அந்­த பணியை மேற்­கொள்­ள­வில்லை. எங்­க­ளுக்கு வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் வாய்ப்பில்லை. அந்த இடத்­துக்­குச் சென்­று­தான் பணி­செய்ய வேண்­டும்,” என்று அவர் கூறினார்.

“கழி­வறை மூலம் கிருமி பர­வும் வாய்ப்பு அதி­கம். அத­னால் அதற்­கான கரு­வி­க­ளைத் தனி­யாக வைத்­துள்­ளோம்,” என்று அவர் கூறினார்.

“அதி­க­மா­னோர் புழங்­கும் இடங்­க­ளைச் சுத்­தம் செய்­யும்­போது கிருமி தொற்­றும் ஆபத்து அதி­கமுள்­ளது. முறை­யான பாது­காப்பு உடை­களை அணிந்து முறை­யாக சுத்­தி­க­ரிப்­புப் பணி­களில் ஊழி­யர்­கள் ஈடு­ப­டு­கி­றார்­கள் என்­றா­லும் பயம் இருக்­கவே செய்­யும்,” என்றார் திரு மஹெஸ்­வ­ரன்.

“எனி­னும், இது எங்­கள் பணி. கிரு­மிப்­ ப­ர­வலைத் தடுப்­பதில் முழு முயற்­சி­யு­டன் இத்­து­றை­யி­னர் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்,” என்று அவர் பெரு­மை­யு­டன் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!