விலங்குகளின் பாசத்தால் பரவசம்

சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டம் பார்த்த முதல் யானை­யான அனுஷா, இலங்­கை­யி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 1973ஆம் ஆண்டு ஜன­வரி மாதத்­தில் வந்­தது.

அதற்­குப் பின் 1974ஆம் ஆண்­டில் நான்கு வய­தில் ‘குமாளி’ என்ற இலங்கை யானை­யும் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் குடி­பு­குந்­தது. தற்­போது ஏறக்­கு­றைய 50 வய­தா­கும் குமா­ளியை இன்­னும் விலங்­கி­யல் தோட்­டத்­தில் காண­லாம். சிங்­கப்­பூ­ரர்­க­ளின் மன­தில் பதிந்த இந்த யானை­க­ளைத் தொடக்­கத்­தில் கண்­கா­ணித்த விலங்­கி­யல் தோட்­ட­க்கா­ரர்­களில் ஒரு­வர் திரு குமார் பிள்ளை, 68.

அதிக சம்­ப­ளமுள்ள சிங்­கப்­பூர் ஏர்­லைன்­சில் கிடைத்த வேலை வாய்ப்பை நிரா­க­ரித்து 48 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் பணி­யாற்றி வரும் திரு குமார் தற்­போது சிங்­கப்­பூர் வன­வி­லங்கு காப்­ப­கத்­தில் சிறப்­புத் திட்ட இயக்­கு­ந­ராக இருக்­கி­றார்.

“விலங்­கு­க­ளு­டன் பழ­கும் இந்த வேலை­யில் கிடைக்கும் மன­நி­றைவு, வேறு எந்த வேலை­யி­லும் எனக்கு கிடைத்­தி­ருக்­காது, அப்­போது சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தின் நிர்­வா­கத் தலை­வராக இருந்த டாக்­டர் ஆங் சுவி லா, விலங்­கு­க­ளு­டன் பழ­கும் என் திற­னைப் பார்த்து இந்த வேலைக்கு நான் மிகப் பொருத்தமானவன் என்று என்­னி­டம் சொன்­னார்.

“அதி­லி­ருந்து இங்கு என் பணி­யில் முழு­மூச்­சாக ஈடு­பட்டு வரு­கி­றேன்,” என்­றார் திரு குமார்.

தேசிய சேவை முடித்­தபின், தமது நண்­பர் மூலம் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் புதி­தாக குதி­ரை­கள் கொண்டு வரப்­பட்­டதை அறிந்­து­கொண்­டார் திரு குமார்.

குதிரை ஓட்­டு­வ­தைக் கற்­று­கொள்ள விருப்­பம் கொண்ட திரு குமார் அதற்­கா­கவே விலங்­கி­யல் தோட்­டத்­தில் தொண்­டூ­ழி­ய­ரா­கச் சேர்ந்­தார்.

தொடக்­கத்­தில் காண்­டா­மி­ரு­கங்­க­ளைப் பார்த்­து­க்கொள்­ளும் பொறுப்­பில் இருந்­த­போது, திரு குமார் விலங்­கு­க­ளு­டன் கொண்டிருந்த இயற்­கை­யான தொடர்பு ஆற்­ற­லைப் பார்த்து டாக்­டர் ஆங், சிங்­கப்­பூ­ரின் முதல் யானை­க­ளைப் பார்த்­துக்­கொள்­ளும் பொறுப்பை அவ­ரி­டம் ஒப்­ப­டைத்­தார்.

“ஒரு முறை புதிய கண்­காட்­சிக்­காக கூண்டிலி­ருந்து காண்­டா­மி­ரு­கங்­களை விடு­வித்­தோம். சிறிது நேரம் கழித்து, அந்த காண்­டா­மி­ரு­கங்­களை எப்­படி மீண்­டும் கூண்டுக்­குள் அழைத்துச் செல்­லப் போகி­றேன் என்று டாக்­டர் ஆங் என்­னி­டம் கேட்­டார்.

“அதை நான் எதிர்­பார்க்­க­வில்லை. இருந்­தா­லும் என் திட்­டத்தை அவ­ரி­டம் சொன்­னேன். அவர் எனக்கு அனு­மதி தந்து அதைப் பார்க்­க­வேண்­டும் என்று சொல்லி அங்கு நின்­றார்.

“கூண்டில் நான் கத­வைத் திறந்து பிடித்­தேன். என்­னோடு இருந்த மற்ற இரண்டு சக விலங்­கி­யல் தோட்­டக்­கா­ரர்­கள் அந்த காண்­டா­மி­ருகங்­க­ளைப் கூண்டுக்­குள் வழி­காட்­டிக்கொண்­டி­ருந்­தார்­கள்.

“பாதி வழி­யில் திடீ­ரென்று அந்த காண்­டா­மி­ருகங்­கள் திரும்பி, அந்த இரு தோட்­டக்­கா­ரர்­க­ளை­யும் துரத்த தொடங்­கின.

“அப்­போது எனக்­குள் ஏதோ ஒரு சக்தி வந்­தது போல, ஒடிச் சென்று அந்த காண்­டா­மி­ருங்­க­ளைப் பார்த்து ‘நிறுத்து! உள்ளே செல்’ என்று கத்­தி­னேன்.

“ஏதோ அதிர்ஷ்­டமோ என்னமோ தெரி­ய­வில்லை, அந்த காண்­டா­

மி­ரு­கங்­கள் கூண்டுக்­குள் திரும்பிச் சென்­றன, நான் கதவை மூடி­னேன்.

“அதைப் பார்த்த டாக்­டர் ஆங், நான் யானை­க­ளைப் பார்த்­துக்­கொள்ள பொருத்­த­மா­ன­வ­னாக இருப்­பேன் என்று முடி­வெ­டுத்­தார்,” என்­றார் திரு குமார்.

விலங்­கி­யல் தோட்­டத்­தின் ஆரம்­பக் காலத்­தில் பல அம்­சங்­கள் ஆரா­யப்­பட்டு வந்­தன என்­றும் பல தக­வல்­க­ளைச் சொந்த முயற்­சி­யில் படித்து, கண்­ட­றிந்­தார் என்­றும் குறிப்­பிட்­டார் திரு குமார்.

உதா­ர­ணத்­திற்கு ராஜநாகம் விலங்­கி­யல் தோட்­டத்­திற்கு வந்­த­போது அந்த நாகத்­திற்கு பல­வித மாமி­ச வகை­களை ஊட்­டி­னோம். ஆனால் அது எதை­யும் சாப்­பி­ட­வில்லை.

தேசிய நூல­கத்­தில் இருந்த பாம்­பு­கள் பற்றிய புத்­த­கங்­களை திரு குமார் படித்­த­போது, ராஜநாகம் மற்ற சிறு பாம்­பு­க­ளை பிர­தா­ன­மாக சாப்­பி­டும் என்று கண்­ட­றிந்­தார். குட்டி பாம்புகளை ராஜநாகத்­திற்கு உண­வாக வழங்­கி­ய­போது அது­வும் உண்­டது.

“தொடக்க காலத்தில் இணைய வசதி, அதிக கல்வி அறிவு போன்றவை இருக்கவில்லை. ஒரு விலங்கு என்ன சாப்பிடும் என்று ஒரு கணிப்பில் அதற்கு உணவு வழங்குவோம்.

“இப்போது ஊட்டச்சத்து நிபுணர், ஒவ்வொரு விலங்குக்கும் ஏற்ற முறையான ஊட்டச்சத்தை அறிந்து அதற்கு தகுந்த உணவைத் தயாரிப்பார். அனைத்தும் அறிவியல் அடிப்படையில் நடத்தப்படுகிறது,” என்றார் திரு குமார்.

உலக அளவில், ‘நைட் சஃபாரி’ எனப்படும் விலங்கியல் தோட்டத்தில் இரவு சுற்றுலாப் பயணத்தை வழங்கிய முதல் நாடு சிங்கப்பூர்.

இந்தச் சிறப்புப் பயணத்தை உருவாக்கிய குழு உறுப்பினர்களில் ஒருவர் திரு குமார்.

‘நைட் சஃப்பாரி’யின் பொது நிர்வாகியாகவும் சில ஆண்டுகள் பொறுப்பேற்றார் திரு குமார்.

“தொடக்­க­த்தில் நடத்­திய ஆய்­வு­க­ளின் மூலம் ஒரு வார­நா­ட்களில் 600 வரு­கை­யா­ளர்­களும் வார­யி­றுதியில் 1,000 வரு­கை­யா­ளர்­களும் ‘நைட் சஃபாரி’க்கு வந்­தால் நாம் நல்ல நிலை­யில் இருப்­போம் என்று கரு­தி­னோம்.

“ஆனால் அது மிக­வும் தப்புக் கணக்­கா­கி­விட்­டது. ஒவ்­வொரு நாளும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் ‘நைட் சஃபாரி’க்கு வந்­த­னர்.

“ஒன்­பது பேருந்­து­க­ளு­டன் தொடங்கி, இப்­போது 22 பேருந்­து­களை சேவை­யாற்­று­கி­றோம்,” என்­றார் திரு குமார்.

ஆண்­டுக்கு ஆண்டு அதி­க­ரித்து வரும் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தின் வரு­கை­யா­ளர்­க­ளின் எண்­ணிக்கை இப்­போது ஓர் ஆண்­டுக்கு கிட்­டத்­தட்ட இரண்டு மில்­லி­ய­னாக இருக்­கிறது.

உல­கத்தர­மான விலங்கு சுகா­தாரப் பரா­ம­ரிப்பு வச­தி­கள் உட்­பட திறன்­மிக்க கால்நடை மருத்­து­வர்­களைக் கொண்ட கால்நடை மருத்­து­வ­ம­னை­யும் சிங்­கப்­பூர் விலங்­கி­யல் தோட்­டத்­தில் உண்டு என்று பெரு­மை­யு­டன் கூறி­னார் திரு குமார்.

“அனைத்து விலங்­கி­யல் தோட்­டங்­களும் விலங்­கு­க­ளின் பரா­ம­ரிப்­புக்கு முன்­னு­ரிமை வழங்­க­வேண்­டும்.

“இதைத்தான் சிங்­கப்­பூ­ரின் வன­வி­லங்கு காப்­ப­க­மும் செய்து வரு­கிறது.

“அதற்­குப் பின் வனத்­தில் இருக்­கும் வன­வி­லங்­கு­கள், அவற்­றின் இயற்கை வாழ்­வி­டங்­கள் ஆகி­ய­வற்றைப் பேணிக்காப்ப­தற்கும் முயற்சி எடுக்­க­லாம்,” என்­றார் திரு குமார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!