வாழ்நாளில் கண்டிராத பெரிய மாற்றம்

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைத்து வயதுப் பிரிவினரும் இதனால் பாதிக்கப்பட்டாலும், அனைவரதும் நலனைக் கருதி மக்கள், குறிப்பாக முதியோர் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமுதாயத்தில் உள்ள அனைத்து வயதுப் பிரிவினரும் இதனால் பாதிக்கப்பட்டாலும், அனைவரதும் நலனைக் கருதி மக்கள், குறிப்பாக முதியோர் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அதி­காலை ஐந்து மணிக்­கெல்­லாம் தாம் வசிக்­கும் அடுக்­கு­மாடி வீட்­டிற்கு வெளியே பூட்­டப்­பட்­டி­ருக்­கும் சைக்­கிளை எடுத்து மின்­தூக்­கி­யின் வழி இறங்­கு­வார் முஹம்­மது காசிம் முஹம்­மது யூசுஃப், 73.

வீட்­டிற்கு அரு­கி­லுள்ள தாசெக் உதாரா பள்­ளி­வா­ச­லுக்கு சைக்­கி­ளில் செல்­வார் இவர்.

அங்கு தொழுகை மேற்­கொள்ள வரு­வோ­ரில் முதன்­மை­யா­ன­வர் இவர். அங்கு இருந்து அனை­வ­ரை­யும் இவர் வர­வேற்­பது தினந்­தோ­றும் காணும் காட்சி.

அக்­கம்பக்­கத்­தில் இருக்­கும் வீட­மைப்­புப் பேட்­டை­க­ளி­லி­ருந்து தொழு­கை­க்காக பள்­ளி­வா­ச­லுக்கு வரு­ப­வர்­க­ளுக்­கும் நன்கு பரிட்­ச­ய­மா­ன­வர் திரு காசிம்.

இஸ்­லா­மிய சம­யத்­தின்­படி, முஸ்­லிம்­கள் ஒரு நாளில் ஐந்து முறை தொழுகை மேற்­கொள்­ள­வேண்­டும். மற்­ற­வர்­க­ளோடு சேர்ந்து பள்­ளி­வா­ச­லில் தொழு­வது சிறந்­தது. அல்­லது வச­திக்­கேற்ப வீட்­டி­லேயோ இருக்­கும் இடத்­தில் சுத்­த­மான பகு­தி­க­ளிலோ தொழ­லாம்.

அந்த வகை­யில் தின­மும் ஐந்து வேளை­யும் பள்­ளி­வா­ச­லுக்­குச் சென்று தொழுகை மேற்­கொள்­வதை திரு காசிம் இயல்­பாக்­கிக்­கொண்­டுள்­ளார்.

அதி­காலை ஐந்து மணி­ய­ள­வில் ‘சுபுஹ்’, மதி­யம் ஒரு மணி­ய­ள­வில் ‘லுஹர்’, மாலை நான்கு மணி­ய­ள­வில் ‘அசர்’, மாலை ஏழு மணி­ய­ள­வில் ‘மஹ்­ரிப்’, இரவு எட்டு மணி­ய­ள­வில் ‘இ‌‌‌ஷா’ என ஐந்து வேளை தொழு­கைக்­கும் கடந்த 20 ஆண்டு ­க­ளாக இவர் பள்­ளி­வா­ச­லில் தொழுது வந்­தார்.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக கிட்­டத்­தட்ட ஒரு மாத கால­மா­கப் பள்­ளி­வா­சல்­கள் மூடப்­பட்­டுள்­ள­தைத் தொடர்ந்து வீட்­டி­லேயே தொழுகை மேற்­கொண்டு வரும் திரு காசிம், தற்­போ­தைய சூழ்­நி­லை­யைப் பற்றி மனம் உருகிறார்.

“நீண்­ட­கா­ல­மாக பழ­கிப்­போன ஒன்றை திடீ­ரென மாற்­று­வது போன்ற உணர்வு இது. தற்­போ­தைய நிலை மிக­வும் சிர­ம­மா­கத்­தான் இருக்­கிறது. வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­ப­து­போல தோன்­று­கிறது. திட்­டு­முட்­டா­கவே உள்­ளது.

“தொடக்கத்தில் ஏதோ ஒன்றை இழந்ததைப் போன்ற மனநிலையில் இருந்தேன். படிப்படியாக மாற்றங்களை ஏற்றுக்கொண்டேன்,” என்­றார் திரு காசிம்.

“இன்­னும் மூன்று வாரங்­களில் புனித ரம­லான் மாதம் தொடங்­கு­கிறது. தின­மும் இரவு நேரங்­களில் நடை­பெ­றும் சிறப்­புத் தொழுகை நீள­மா­னது. 

“முஸ்­லிம்­கள் அனை­வ­ரும் சேர்ந்து தொழு­வதே சிறப்பு. இவ்­வாண்டு நோன்பு நோற்­கும் மாதம் என் வாழ்­நா­ளில் நான் இது­வரை கண்­டி­ராத பெரிய மாற்­றம்,” என்றும் இவர் தெரி­வித்­தார்.

கூடிய விரை­வில் கொரோனா கிரு­மித்­தொற்று நில­வ­ரம் கட்­டுக்­குள் வந்து அனை­வ­ரும் இயல்பு வாழ்க்­கைக்­குத் திரும்ப வேண்­டும் என்று தாம் இறை­வ­னி­டம் பிரார்த்­தித்து வரு­வ­தாக இவர் கூறி­னார்.