வாழ்க்கை வழக்கநிலைக்குத் திரும்ப காத்திருக்கிறார்

உள்­ளூ­ரில் நடை­பெ­றும் ‘சன்­டெளன்’ நெடுந்­தொ­லைவு ஓட்­டத்­தில் ஒவ்­வோர் ஆண்­டும் தவ­றா­மல் பங்­கெ­டுப்­ப­வர் திரு க.சந்­தி­ர­சே­க­ரன், 74 (படம்).

கொவிட்-19 கிரு­மித்­தொற்று நில­வ­ரத்­தைக் கருதி அதி­க­மா­னோர் கூடும் இது­போன்ற விளை­யாட்­டுப் போட்­டி­கள் ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தால், பொறி­யா­ள­ராக பணி­பு­ரி­யும் இவ­ரால் இவ்­வாண்டு ஓட்­டத்­தில் பங்­கு­பெற முடி­யாது.

இருப்­பி­னும், தின­சரி வாழ்க்­கை­மு­றை­யில் பெரும் பாதிப்­பில்லை என்­றும் தாம் தொடர்ந்து உடற்­பயிற்சி செய்து வரு­வ­தாக குறிப்­பிட்­டார். வார­நாட்­களில் இவர் தாம் வசிக்­கும் அடுக்­கு­மாடி வீட்­டில் மாடிப்­படி ஏறு­வது, ஆறு கிலோ மீட்­டர் தூரம் ஓடு­வது, வீட்­டி­லி­ருந்­த­வாறு சைக்­கிள் உடற்­ப­யிற்சி சாத­னத்­தைப் பயன்­ப­டுத்­து­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கி­றார்.

வார­யி­றுதி நாட்­களில், வீட்­டிற்கு அரு­கி­லுள்ள பூங்­கா­வில் தம் மனைவி ச.மனோன்­ம­ணி­யு­டன் நடைபயிற்­சி­யில் திரு சந்­தி­ர­சேகரன் ஈடு­ப­டு­கி­றார்.

கடைத்­தொ­கு­திக்கு செல்­வ­தைக் குறைத்­துக்­கொண்­ட­து­டன் நண்­பர்­கள் வீடு­க­ளுக்­குச் செல்­வ­தை­யும் இவர் தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யுள்­ளார்.

லிட்­டில் இந்­தி­யா­வில் காய்­க­றி­கள் வாங்­கி­விட்டு இவர் உடனே வீட்­டிற்­குத் திரும்­பி­வி­டு­வார்.

தற்­போது வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் இவர், சமூக இடை­வெளியை கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­டால் பாது­காப்­பான முறை­யில் தொடர்ந்து உடற்­ப­யிற்சி செய்­ய­லாம் என கரு­து­கி­றார்.


‘முடிந்தவரை வீட்டில் இருக்கிறேன்’

வாரத்­தில் மூன்று முறை கோயி­லுக்­குச் செல்­லும் திரு­வாட்டி மு.ஞானம்­மாளுக்கு (படம்) வழக்­கம்­போல அங்கு பிரார்த்­தனை செய்ய முடி­ய­வில்­லையே என்ற வருத்­தம் உள்ளது. ஸ்ரீ மாரி­யம்­மன் ஆல­யம், ஸ்ரீ லயன் சித்தி விநா­ய­கர் ஆல­யம், ஸ்ரீ வீர­மா­கா­ளி­யம்­மன் ஆல­யம் ஆகி­ய­வற்­றுக்கு வழக்­க­மாக செல்­லும் இவர், பக்­தர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள கட்­டுப்­பா­டு­க­ளால் அங்கு செல்­ல­வில்லை. இவர் பல ஆண்­டு­க­ளாக ஆல­யங்­களில் தொண்­டூ­ழி­யப் பணி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­ப­வர்.

பூன்லே ‘ஸோன் எச்’ வசிப்­போர் குழுத் தலை­வ­ரான இவர், கொவிட்-19 தொடர்­பான உதவி நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்.

அண்­மைக் கால­மாக இவ­ரது வட்­டா­ரத்­தில் வசிக்­கும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்­காக முகக்­க­வ­சங்­கள் மற்றும் கிருமி நாசி­னி­களை விநி­யோ­கிக்க இவர் உத­வி­னார். கிரு­மிப் பரவி வரும் நிலை­யில், தாம் ஆற்­றும் சேவை முக்­கி­ய­மா­னது என்­பதை இவர் உணர்­கி­றார்.

“வழக்­க­மாக ஈடு­படும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­ய­வில்லை. எனி­னும், அண்­மை­யில் என் தம்பிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்­தது. குழந்­தை­யைப் பரா­ம­ரிக்க நான் உதவி வரு­கி­றேன். முடிந்தவரை வீட்­டில் இருக்­கி­றேன்,” எனத் தெரி­வித்­தார் ஞானம்­மாள், 65.


‘தொடர்ந்து பிரார்த்திக்கிறேன்’

வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்­குச் செல்ல முடி­ய­வில்­லையே என்ற ஏக்­கம் திரு­வாட்டி அ.ஆதி­லட்­சு­மிக்­கு (படம்) உள்­ளது. ‘இயேசு ஜீவிக்­கி­றார் திருச்­சபை’ தேவா­ல­யத்­திற்கு வாரத்­திற்கு மூன்று முறை­யா­வது சென்று வந்த இவர், தற்­போது வீட்­டி­லி­ருந்­த­வாறு பிரார்த்­த­னை­களை மேற்­கொள்­கி­றார்.

“வய­தான காலத்­தில் கட­வு­ளு­டன் தொடர்பை நெருக்­க­மாக்­கிக்­கொள்­வது இயல்பு. திருச்­ச­பைக்கு செல்ல முடி­யா­ததை எண்ணி வருந்­து­கி­றேன். ஆனா­லும், வீட்­டி­லி­ருந்­த­வாறு தின­மும் காலை­யில் கட­வு­ளைப் பிரார்த்­திக்­கி­றேன்,” என கூறி­னார் திரு­வாட்டி ஆதி­லட்­சுமி, 68.

தற்­போ­தைய நில­வ­ரத்­தைக் கருதி, கடந்த சில வாரங்­க­ளாக இவர் ஈரச் சந்­தைக்­கும் செல்­ல­வில்லை. வீட்­டிற்கு தேவை­யான கறி, மளி­கைப் பொருட்­களை வாங்க இவ­ரது இல்­லப் பணிப்­பெண் உதவி வரு­கி­றார்.

எங்­கும் வெளியே செல்­லா­மல் வீட்­டில் முடங்­கிக் கிடப்­ப­தால் முதி­ய­வர்­க­ளுக்கு பல சிந்­த­னை­கள் அலை­மோ­து­வ­தாக தெரி­வித்த திரு­வாட்டி ஆதி­லட்­சுமி, நேர்­ம­றை­யாத சிந்­த­னை­க­ளுக்கு வழி­வ­குக்க தமது கவ­னத்­தைச் சமை­யல் பக்­கம் திருப்­பு­வ­தா­கக் கூறி­னார்.

அன்­றா­டம் மூன்று வேளை­யும் இவர் வீட்­டில் உணவு சமைக்­கி­றார். குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்கு விருப்­ப­மான உண­வைச் சமைத்து பரி­மா­று­வ­தில் ஒரு­வித திருப்தி அவ­ருக்கு கிடைக்­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று தொடர்­பில் அர­சாங்­கம் எதற்கு வெவ்­வேறு கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை நன்கு உணர்­வ­தாக குறிப்­பிட்ட திரு­வாட்டி ஆதி­லட்­சுமி, நிலைமை சீராகி, வழக்க நிலைக்கு திரும்ப ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார், தொடர்ந்து அதற்­காக பிரார்த்தித்து வருகி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!