முதியோர் மனநலம் குறித்த விழிப்புணர்வு

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 நோய் பர­வு­வ­தற்கு முன், வழி­பாட்­டுத் தலங்­க­ளுக்கு செல்­வது, உண­வங்­காடி நிலை­யங்­களில் நண்­பர்­களோடு சேர்ந்து உண­வ­ருந்­து­வது, லிட்­டில் இந்­தி­யா­விற்குச் சென்று காய்­க­றி­கள் வாங்­கு­வது உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­களில் முதி­ய­வர்­கள் ஈடு­பட்டு வந்­த­னர்.

ஆனால், கொவிட்-19 நோயை ஏற்­ப­டுத்­தும் கொரோனா கிரு­மித்­தொற்று தீவி­ர­ம­டைய, கிருமி பர­வலை முறி­ய­டிப்­ப­தற்­கான அதி­ர­டித் திட்­டத்தை அர­சாங்­கம் அமல்­ப­டுத்­தி­யது.

அத்­தி­யா­வ­சிய தேவை­களுக்கு மட்­டுமே வீட்­டை­விட்டு வெளியே செல்ல வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

வெளியே செல்­லும்­போது முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக தாங்­கள் கடைப்­பி­டித்து வந்த வாழ்க்­கை­மு­றை­யில் மாற்­றங்­கள் தேவைப்­ப­டும்­போது முதி­ய­வர்­கள் மன­த­ள­வில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டும்.

இத­னைப் பற்றி மேலும் அறிய, மன­நல நிபு­ணர்­க­ளின் கருத்­து­களை தமிழ் முரசு சேக­ரித்­தது.

முதி­ய­வர்­க­ளுக்கு எத்­த­கைய மன­நல பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டும்?

கிரு­மித்­தொற்­றைப் பற்றி புரிந்து­கொள்ள முடி­யா­விட்­டா­லும் செய்தி­களில் கொவிட்-19 நோய்ப் பர­வ­லைப் பற்றி படிக்­கும்­போ­து முதி­ய­வர்­க­ளுக்கு மன­வு­ளைச்­சல் ஏற்­ப­டக்­கூ­டும் என்று மன­ந­லக் கழக மருத்­து­வர் டாக்­டர் நிகிலா ரவிச்­சந்­தி­ரன் குறிப்­பிட்­டார்.

எந்­தச் செய்­தியை நம்­பு­வது எனத் தெரி­யா­மல் குழப்­ப­ம­டை­வது, வீட்­டி­லேயே முடங்­கிக் கிடப்­ப­தால் வழக்­க­மான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யா­தது முதி­ய­வர்­களை மன­வு­ளைச்­ச­லுக்கு இட்­டுச்­செல்லலாம் என்­றார் அவர்.

ஊட­கங்­களில் படிக்­கும் செய்தி ஒரு சில­ரைப் பதற்­ற­ம­டை­யச் செய்­யும் என்­றார் பிரொ­மி­சஸ் (வின்ஸ்லொ) மருந்­த­கத்­தின் மூத்த மன­நல மருத்­து­வர் டாக்­டர் ஜேக்­கப் ராஜே‌ஷ்.

குறிப்­பாக, வய­தா­ன­வர்­களும் நாள்­பட்ட நோய் உடை­யோ­ரும் அவர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­களும் மன­வு­ளைச்­ச­லுக்கு ஆளா­கும் சாத்­தி­ய­முள்­ளது என்று அவர் கூறி­னார்.

கார­ணம், முதி­ய­வர்­க­ளைக் கிருமி தொற்­றி­னால் அதிக சிக்­கல்­களை அது ஏற்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டும்.

தங்­க­ளது அல்­லது தங்­க­ளது அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளின் ஆரோக்­கி­யம் பாதிக்­கப்­ப­டுமோ என்ற கவ­லை­யும் முதி­ய­வர்­க­ளுக்கு ஏற்­ப­ட­லாம் என்­றார் அவர்.

உதா­ர­ணத்­திற்கு, தூங்­கு­வ­திலோ அல்­லது ஒரு காரி­யத்­தில் கவ­னம் செலுத்­து­வ­திலோ அவர்­கள் சிர­மத்தை எதிர்­நோக்­கக்­கூ­டும்.

எதைச் செய்­ய­லாம், எதைச் செய்யக்கூ­டாது?

முடிந்­த­வரை முதி­ய­வர்­கள் வெளியே செல்ல வேண்­டாம் என்­றும் நேரத்­து­டன் உண­வ­ருந்தி எளிய உடற்­ப­யிற்­சி­க­ளைச் செய்­வது உகந்­தது என்றும் டாக்­டர் நிகிலா கூறி­னார்.

உதவி தேவைப்­பட்­டால் குடும்ப உறுப்­பி­னர்­க­ளைத் தொடர்­பு­கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­திய அவர், வாட்ஸ்­அப் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­களில் வலம்­வ­ரும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத செய்­தி­களை நம்ப வேண்­டாம் என்று வலி­யு­றுத்­தி­னார்.

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்த தெரி­யாத முதி­ய­வர்­கள், தொலை­பே­சி­வழி உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளைத் தொடர்­பு­கொள்­ள­லாம். தனிமை உணர்­வைப் போக்கி பயத்­தைக் குறைக்க இது உத­வும் என்று டாக்­டர் ஜேக்­கப் சொன்­னார்.

தொலைக்­காட்சி, செய்­தித்­தாள், வானொலி உள்­ளிட்ட பிர­தான ஊட­கங்­களில் கொவிட்-19 பற்றி ஆக அண்­மைய செய்­தி­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம்.

குடும்ப உறுப்­பி­னர்­கள் எவ்­வாறு உத­வ­லாம்?

முதி­ய­வர்­க­ளின் உடல்­ந­லம், மன­ந­லம் தொடர்­பில் மாற்­றங்­கள் ஏற்­பட்­டுள்­ள­னவா என்­ப­தைக் குடும்ப உறுப்­பி­னர்­கள் கவ­னிக்க வேண்­டும் என்று கூறிய டாக்­டர் நிகிலா, இதில் அவர்­க­ளின் பங்கு முக்­கி­ய­மா­னது என்று வலி­யு­றுத்­தி­னார்.

முதி­ய­வர்­க­ளின் பிரச்­சி­னை­களைச் செவி­ம­டுத்து கேட்­ப­தும் உத­வும்.

முதி­ய­வர்­கள் தனி­யாக வசித்­தால், நெருக்­க­டி­யான சூழ்­நிலை ஏற்­ப­டும்­போது அவர்­க­ளுக்கு உதவ யாரா­வது தயார்­நி­லை­யில் இருக்க வேண்­டும் என்­றும் அவ­ச­ரத்­திற்­குத் தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி எண்­களை அனை­வ­ரும் தெரிந்­து­கொள்வ­தும் முக்­கி­யம் என்­றும் அவர் கூறி­னார்.

குடும்ப உறுப்­பி­னர்­கள் முதி­ய­வர்­க­ளி­டம் ஆக அண்­மைய கொவிட்-19 நில­வ­ரத்­தைப் பகிர்ந்து­கொள்­ள­லாம் என்று டாக்­டர் ஜேக்கப் சொன்­னார்.

வீட்டில் ஈடுபடக்கூடிய நடவடிக்கைகள்

இசை கேட்­பது, உணவு சமைப்­பது, ஓவி­யம் வரை­வது, பேரப்­பிள்­ளை­க­ளுக்­குக் கதை சொல்­வது, வீட்டு வேலை செய்­வது, நூல் வாசிப்­பது, தியா­னம் செய்­வது, மெது நடை­ப­யிற்சி மேற்­கொள்­வது என பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் முதி­யோர் ஈடு­ப­ட­லாம் என டாக்­டர் நிகிலா விவ­ரித்­தார்.

வீட்­டி­லி­ருந்­த­வாறு சது­ரங்­கம் போன்ற விளை­யாட்­டு­களை முதி­ய­வர்­கள் விளை­யா­ட­லாம் என்று டாக்­டர் ஜேக்­கப் குறிப்­பிட்டார்.

தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்த தெரி­யா­த­வர்­கள், சமூக ஊட­கங்­கள் மூலம் உற­வி­னர்­கள், நண்­பர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­பது எப்­படி என்­ப­தைக் கற்­றுக்­கொள்­ள­லாம்.

பரா­ம­ரிப்­பா­ளர்­க­ளுக்கு ஓய்வு அவ­சி­யம்

‘அல்­ஸை­மர்ஸ்’ (Alzheimer’s) எனப்­படும் நினை­வாற்­றல் இழப்பு போன்ற நோய்­கள் உடை­யோர் வழக்­க­மான நட­வ­டிக்­கை­க­ளு­டன் தொடர்பு வைத்­தி­ருக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று டாக்­டர் ஜேக்­கப் கூறி­னார்.

“முதி­ய­வர்­க­ளைப் பரா­ம­ரிப்­ப­வர்­கள், கொவிட்-19 நில­வ­ரத்­தைப் பற்றி அவர்­க­ளி­டம் எளிய முறை­யில் எடுத்­துச் சொல்ல வேண்­டும். அத­னைப் பற்றி பல­முறை அவர்­களுக்கு நினை­வுப்ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கும்.

“விஷ­யங்­க­ளைத் தெளி­வா­க­வும் சுருக்­க­மா­க­வும் முதி­ய­வர்­க­ளுக்கு எடுத்­துக்­கூற வேண்­டும். தக­வல்­களை எழுத்து அல்­லது பட வடி­வ­மாக விவ­ரிப்­பது உத­வும்,” என்­றார் அவர்.

‘டிமென்­ஷியா’ எனப்­படும் முது­மைக்­கா­லத்­தில் வரும் ஞாபக மறதி நோய் உடை­யோ­ரைப் பரா­ம­ரிப்­ப­வர்­க­ளுக்கு ஓய்வு வழங்­கப்­பட வேண்­டும். அந்த நேரத்­தில் முதி­ய­வர்­க­ளைப் பார்த்­துக்­கொள்ள குடும்ப உறுப்­பி­னர்­கள் உத­வ­லாம்.

இதன்­வழி பரா­ம­ரிப்­பா­ளர்­களுக்கு மன­வு­ளைச்­சல் ஏற்படுவது, சோர்வு அடை­வதற்கான சாத்­தி­யம் குறை­யும்.


அண்டை வீட்டாரும் உதவலாம்

இக்காலகட்டத்தில் தனிமையில் வாழும் முதியவர்கள், தங்களது பிள்ளைகளுடன் அணுக்கமான உறவை கொண்டிராத முதியவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று ‘விஸ்பரிங் ஹார்ட்ஸ்’ குடும்ப சேவை நிலையத்தின் மூத்த சமூக ஊழியரும் ‘கிளாப்2கேர்’ அமைப்பின் தொண்டூழியருமான குமாரி சந்திரசேகரன் காயத்திரி தெரிவித்தார்.
பெரும்பாலும் பிறருடன் அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் வீட்டில் முடங்கிக்கிடக்கும் முதியவர்களுக்கு கொவிட்-19 நோய் குறித்தும் கிருமி பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் குறித்தும் அதிக விவரம் தெரியாமல் இருக்கலாம்.
முதியவர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் மட்டும்தான் உதவ வேண்டும் என்றில்லை. அண்டை வீட்டாரும் தங்களது பங்கை ஆற்றலாம். எடுத்துக்காட்டாக, அவர்களுக்கு மளிகைப் பொருட்கள் வாங்க உதவலாம்.
முதியவர்களுக்கு தினசரி உணவு அல்லது இதர தேவைகளுக்கு உதவி தேவைப்பட்டால் சமூக மன்றம், மூத்தோர் நடவடிக்கை நிலையம் அல்லது சமூக சேவை அலுவலகத்திடம் தெரிவிக்கலாம்.
நீங்கள் பெற்றோருடன் சேர்ந்து வசிக்காவிட்டால் கீழ்வரும் குறிப்புகள் உங்களுக்கு உதவும்:
 தொலைபேசிவழி தொடர்புகொள்வது அல்லது வாட்ஸ்அப் திறன்பேசி செயலி மூலம் காணொளி அழைப்பு செய்து முதியவர்களைத் தொடர்புகொள்ளலாம். தினமும் இதற்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கினால், பிள்ளைகளுடன் பேச முதியவர்கள் ஆவலுடன் இருப்பர்.
 முதியவர்களுக்கு மளிகைப் பொருட்கள், மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்கள் உதவலாம். முதியவர்கள் அடிக்கடி வெளியே செல்வதற்கான தேவையை இது குறைக்கும். பொருட்களை அவர்களிடம் கொடுத்துவிட்டு செல்லலாம். மளிகைப் பொருட்களை வீட்டிற்கு விநியோகம் செய்யும் சேவையையும் அவர்கள் நாடலாம்.
 தற்போது அரசாங்கம் வழங்கும் நிதி ஆதரவு குறித்து முதியவர்களிடம் விளக்கி, தகுந்த உதவி பெற வழிகாட்டலாம்.
 முதியவர்கள் வழக்கமாக ஈடுபடும் நடவடிக்கைகளை இப்போது செய்ய முடியாத பட்சத்தில், மாற்று நடவடிக்கைகளை அவர்களுக்கு பரிந்துரைக்கலாம்.
 வீட்டிலிருந்து முதியவர்களைப் பராமரிப்பவர்கள் இந்நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முதியவர்களைச் சமாளிப்பதில் சவாலை எதிர்நோக்கினால், தகுந்த உதவியை நாடவும்.

கீழ்க்கண்ட அமைப்புகளைத் தொடர்புகொண்டு முதியவர்கள் உதவி பெறலாம்:

சமூக சேவை அலுவலகம் - 1800 222 0000
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு - 1800 650 6060
கொவிட்-19 தொடர்பான தேசிய பராமரிப்பு தொடர்பு எண் - 6202 6868
(‘கிளாப்2கேர்’ அமைப்பின் தமிழில் பேசக்கூடிய தொண்டூழியர்களும் இதில் இடம்பெறுகிறார்கள்)
மனநலக் கழகம் - 6389 2222

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!