சிங்கப்பூரின் முன்னோடி இசைக் கலைஞருக்குப் புகழஞ்சலி

சிங்­கப்­பூ­ரின் முன்­னோடி இசைக் கலை­ஞ­ரான ஹாஜி பி.எம்.முஹம்­மது ஷா உடல்­ந­லக் குறைவு கார­ண­மாக இம்­மா­தம் 21ஆம் தேதி கால­மா­னார். அவ­ருக்கு வயது 90.

சிங்­கப்­பூர் வானொலி தொலைக்­காட்சி முன்­னோடி இசைக்­கு­ழுவான ஷாஜ­ஹான் இசைக்­கு­ழு­வின் தலை­வ­ராக இருந்த ஹாஜி ஷா, சில கால­மாக உடல்­ந­லக்குறை­வால் பாதிக்­கப்­ப­ட்டி­ருந்­தார் என்று சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் முன்னாள் தலைவர் திரு நசீர் கனி தெரிவித்தார்.

‘அக்­கார்­டி­யன்’ கரு­வியை இசைப்­ப­தில் வல்­ல­வ­ரா­கத் திகழ்ந்­த ஹாஜி ஷா, சிங்­கப்­பூர் வானொலி தொலைக்­காட்சி முன்­னோடி இசைக்­கு­ழுக்­களில் ஒன்­றான ஷாஜ­ஹான் இசைக்­கு­ழு­வின் தலை­வராகவும் இருந்­தார்.

இவ­ரது ஷாஜ­ஹான் இசைக்­குழு­வி­னர் 1970களில் சிங்கை வானொலி தொலைக்­காட்­சி­யில் இடம்­பெற்ற பல்­வேறு இசை நிகழ்ச்சி­க­ளி­லும் மாலை மது­ரம், ஒலி ஒளி போன்ற தொலைக்­காட்சி நிகழ்ச்­சி­க­ளி­லும் பாட்­டுத்­தி­றன் போட்­டி­க­ளி­லும் இன்­னிசை வழங்கி மகிழ்­வித்­த­னர்.

இசைக்­க­லை­ஞர்­கள் பலரை வழி­ந­டத்தி, உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. அத்­து­டன், சமூக சேவை­யி­லும் ஆர்­வ­மிக்­க­வ­ராக விளங்­கிய இவர், சிங்­கப்­பூர் தென்­காசி முஸ்­லிம் நலன் அபி­வி­ருத்தி சங்­கத்­தின் தலை­வரா­கப் பல­ ஆண்டு­கா­லம் சேவை­யாற்­றி­னார்.

ஹாஜி ஷா சிறந்த இசைக்­கலை­ஞர் மட்­டு­மல்ல, மனி­த­நே­யப் பண்­பா­ள­ரும்­கூட என்­றார் முன்­னாள் வானொ­லிப் படைப்­பா­ள­ரான திரு கார்­மே­கம். “ஹாஜி ஷா அவர்­களின் மறைவு மிகுந்த வருத்­த­மும் வேத­னை­யும் அளிக்­கிறது. வானொ­லி­யில் நான் தயா­ரித்­துப் படைத்த நூற்­றுக்­கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­களில் அவ­ரோடு சேர்ந்து பய­ணம் செய்த இனிய நிகழ்­வு­களும் நினைவு­களும் என் மன­தில் வரிசை­பிடித்து நிற்­கின்­றன. அவ­ரி­டம் இருந்து நான் கற்­றுத் தெளிந்து கொண்­ட­வை­யும் அதி­கம். அவ­ரைப் போன்­ற­வர்­களின் இசைப் பய­ணம் சிங்­கப்­பூர் இந்­திய இசை உல­கில் ஒரு பொற்­கா­லம் என்­றால் அது மிகை­யா­காது,” என்று திரு கார்­மே­கம் குறிப்­பிட்­டார்.

தமது இசை வாழ்­வில் ஹாஜி ஷாவிற்கு முக்­கிய இட­முண்டு என்றும் 80களில் அவர் தமக்கு அதிக வாய்ப்­பு­கள் தந்­தார் என்­றும் நினைவு­கூர்ந்­தார் புத்­தாக்க இந்­தி­யக் கலை­ய­கத்­தின் தலை­வர் திரு சி.குண­சே­க­ரன்.

ஹாஜி ஷா சிங்­கப்­பூ­ரின் ஆரம்­ப­காலக் கலை முன்­னோ­டி­களில் ஒரு­வ­ரா­கத் திகழ்ந்­தார் என திரு ஏ.பி.ராமன் குறிப்­பிட்­டார்.

ஹாஜி ஷா ஜப்­பா­னி­யக் கொடும் தாக்­கு­த­லில் இருந்து மண்­ணு­ம­லைக்­குத் தப்­பித்து ஓடி, அங்­கு இ­ருந்த ஒதுக்­குப்­பு­றப் புதை­கு­ழி­யில் சில நாட்­கள் உண­வின்­றிப் பதுங்கி இருந்­தார் என்றும் இது ஒரு சில­ருக்கு மட்­டுமே தெரிந்த செய்தி என்­றும் சிங்­கப்­பூர் கடை­ய­நல்­லூர் முஸ்­லிம் லீக்­கின் துணைத் தலை­வரான மு.அ.மசூது கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!