‘நாளும் ஒரு கவிதை’ மூலம் தமிழோடு இணைந்திருங்கள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் முயற்­சி­யாக நாடு முழு­வ­தும் பெரும்­பா­லான மக்­கள் வீட்­டி­லேயே இருக்­க­வேண்­டி­யுள்ள சூழ­லில், அவர்­க­ளுக்கு உற்­சா­க­மூட்­டும் வகை­யில் ‘நாளும் ஒரு கவிதை’ எனும் திட்­டம் அறி­முகப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம் ஏற்­பாடு செய்­துள்ள இத் திட்­டம் முற்­றி­லும் இணை­யம் மூல­மா­க நடத்­தப்­ப­டு­கிறது.

கவி­ஞர்­கள் மட்­டு­மின்றி பல­தரப்­பட்ட மக்­களும் கவிதை வாசித்து, அதைக் காணொ­ளி­யா­கப் பதிவு செய்து, சமூக ஊட­கத்­தில் பதி­வேற்­றம் செய்­வதே இந்த முயற்­சி­யின் இலக்கு.

நாள்­தோ­றும் ஒரு கவி­தையை சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையம் அதன் ஃபேஸ்புக், இன்ஸ்­ட­கி­ராம் பக்­கங்­களில் பதி­வேற்­றம் செய்­து­வ­ரு­கிறது.

இம்மாதம் 14ஆம் தேதி சித்­தி­ரைப் புத்­தாண்டு நாளன்று தொடங்­கப்­பட்ட இந்தத் திட்­டம் அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை இடம்­பெ­றும் என்று சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் இளம் உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட ஏற்­பாட்­டுக் குழுவை வழி­ந­டத்­தும் திரு ரா.கார்­திக் கூறி­னார்.

வீட்­டிலேயே இருக்­க­வேண்­டும் என்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தும் ஏற்­பாட்­டா­ளர்­கள் இரு வாரங்­களில் இந்த முயற்­சி­யைத் திட்­ட­மிட்­டுச் செயல்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

“அனை­வ­ரும் வீட்­டி­லேயே இருக்­கும் காலம் இது. அவர்­களின் வாழ்க்­கை­யில் உற்­சா­கத்­தை­யும் மன­நிம்­ம­தி­யை­யும் ஏற்­படுத்த விரும்­பி­னோம். இயல்­பாகவே பர­ப­ரப்­பான வாழ்க்­கைச் சூழ­லில் மன­அ­மைதி தரும் ஆற்­றல் கவி­தைக்கு உண்டு. அத­னால் அதன்­வ­ழியே நாங்­கள் ஒரு முயற்­சியை எடுக்க முனைந்­தோம்,” என்­றார் திரு கார்­திக்.

சங்­க­கா­லக் கவி­தை­கள் முதல் நவீன படைப்­பு­கள் வரை பல­தரப்­பட்ட கவி­தை­க­ளை­யும் வாசிக்­க­லாம். ‘நாளும் ஒரு கவிதை’ படைப்­பு­க­ளைக் காண https://www.facebook.com/sgtamilorg/ எனும் ஃபேஸ்புக் பக்­கம் அல்­லது https://instagram.com/singapore.tamil?igshid=1mnj9o8d6fxw6 எனும் இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்தை நாட­லாம்.

சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மையத்­தின் இணை­யத்­த­ளத்­தில் (www.singaporetamil.org.sg) கூடு­தல் விவ­ரங்­க­ளைப் பெற­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!