வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கலைப் படைப்புகள்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்கு ஆத­ரவு வழங்­கும் வண்­ணம் சிங்­கப்­பூ­ரர்­கள் பலர் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கி­றார்­கள்.

அந்த வ­ரி­சை­யில் தொழி லாளர்கள் தின­த்தைக் கொண்­டாட ‘ரிதம்ஸ் எஸ்­தெ­டிக் சங்­கம்’ இசைக் காணொ­ளி ஒன்றை வெளி­யிட்­டுள்ளது. கடந்த ஆண்டு ‘ஜஸ்ட் ரிலேக்ஸ்’ என்ற மூன்று மணி நேர நுண்­கலை மேடைப் படைப்பை இந்த சங்­கம் படைத்துள்ளது. அந்த நிகழ்ச்­சி­யிலிருந்து ஐந்து நிமிட அங்­கம் ஒன்றை தேர்வு செய்து, பிரத்­தி­யே­க­மாக தயா­ரித்த இசைக் காணொ­ளியை ஊழி­யர்­க­ளுக்­காக வழங்­கி ­உள்ளது அந்த சங்­கம்.

காலஞ்­சென்ற பிர­பல கலை­ஞ­ரும் பல­துறை அறி­ஞ­ரு­மான திரு ரவீந்­தி­ர­நாத் தாகூ­ரின் ‘அலோ அமார் அலோ ஒகோ’ என்ற கவி­தையை மைய­மாக்கி உரு­வாக்­கப்­பட்ட அந்த இசை அங்­கத்­தில், வய­லின், மிரு­தங்­கம், சித்­தார், புல்­லாங்­கு­ழல் போன்ற பல இசைக் கரு­வி­க­ளின் பயன்­பாட்­டைக் காண­லாம்.

“சுறு­சு­றுப்­பாக வேலை செய்­து­கொண்­டி­ருந்த ஊழி­யர்­கள் இப்­போது ஓர் இடத்­தில் அடைந்து கிடைப்­ப­தால் மன­உ­ளைச்­சல் ஏற்­ப­ட­லாம். இத­மான பாரம்­ப­ரிய இசை அவர்­க­ளுக்கு அமைதி வழங்­கும்,” என்­றார் சங்­கத்­தின் செய­லா­ள­ரான திரு­வாட்டி கி.ஜெய­பி­ரேமா, 51. மொத்­தம் எழு காணொளிகளைத் தயா­ரிக்க திட்­டங்­கள் உள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார் ஜெய­பி­ரேமா.

இதற்­கி­டையே, வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக நட­னப் படைப்­பு­க­ளை­யும் வழங்க முனைந்­துள்­ளது ‘‌ஷுக்­ரான்’ என்ற இணைய நட­னப் படைப்பு தொடர். இம்­மா­தத்­தின் ஒவ்­வொரு ஞாயிற்­று­கி­ழ­மை­யும் மாலை 7 மணிக்கு நேர­டி­யாக படைக்­கப்­படும் நட­னப் படைப்­பு­கள் ‘சுனேனா குப்தா’ என்­ற­வ­ரின் யூடி­யூப் இணை­யத்­த­ளத்­தில் நேர­டி­யாக இடம்­பெ­ற­வுள்­ளன. 30 நடனக் கலைஞர்கள் ஈடுபடும் இந்த முயற்சி இன்று முதல் ஒளிபரப்பாகும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!