பாரம்பரிய ஓவியங்கள், சிற்பங்கள் போல ஆடை அணிந்து பாவனை செய்த மூத்தோர்

இந்திய மரபுடைமை நிலையத்தின் இணைய நடவடிக்கைகளில் ஒன்றான ‘Stay Home and (Re)create art’ போட்டியில் ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தாதிமை இல்லவாசிகள் பங்குபெற்றனர்.

கொவிட்-19 கிருமித்தொற்று சமயத்தில், வீட்டிலிருந்தவாறு மரபுடைமை அம்சங்களை ஆராய, தேசிய மரபுடைமைக் கழகம் அறிமுகம் செய்த இணைய நடவடிக்கைகளில் இது ஒன்றாகும்.

இதில் இந்திய மரபுடைமை தொடர்பான ஓவியங்களை மையப்படுத்தி அதுபோலவே பாரம்பரிய உடைகளை அணிந்து, ஓவியங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் சித்திரிக்கப்படுபவர்கள் போல காட்சியளித்தும் பாவனை செய்தும் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் வசிக்கும் மூத்தோர் அசத்தினர்.

“இந்திய மரபுடைமை நிலையத்துடன் ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நெருங்கிய உறவு இருக்கிறது. எங்கள் இல்லத்தில் வசிக்கும் மூத்தோருக்கு லிட்டில் இந்தியாவுக்குச் செல்ல பிடிக்கும். அங்கு செல்லும்போது பழைய நினைவுகள் அவர்களுக்கு மீண்டும் நினைவுக்கு வந்து அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை பற்றி தெரியவந்ததும், உடனே இதில் பங்குகொள்ள இணங்கினோம்.

“கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை காரணமாக எங்கள் சமூக நிகழ்வுகளும் வெளிப்புற நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

“எனவே இது போன்ற நடவடிக்கைகள் அவர்களுக்கு பொழுதை கழிக்க உதவுகின்றன,” என்று ஸ்ரீ நாராயண மி‌‌ஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ்.தேவேந்திரன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!