சுயதொழில் புரிவோர், கலைஞர்கள், கலைகள் தொடர்ந்து நிலைத்திருக்க உதவிகள்

பிர­பல உள்­ளூர் நாட­கக் கலை­ஞ­ரான திரு செல்வா, 52, தமது சொந்த இலக்­கிய, கலை நிறு­வ­ன­மான ‘அவான்ட் தியேட்­டர்’ நாடக நிறு­வ­னத்தை 2011ஆம் ஆண்டு முதல் நடத்தி வரு­கி­றார். அலி­வால் ஆர்ட்ஸ் சென்­ட­ரில் இந்த நிறு­வ­னம் இயங்கி வரு­கின்­றது.

‘அஞ்­சடி’ எனும் நகைச்­சுவை நாட­கத்தை ஜூன் மாதத் தொடக்­கத்­தில் மேடை­யேற்­றத் திட்­ட­மிட்­டி­ருந்­தார் 52 வய­தா­கும் திரு. செல்வா (படம்). ஆனால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வ­லால் ஏற்­பட்­டுள்ள நிச்­ச­ய­மற்ற தன்­மை­யி­னால் மேடை ஏற்­பாட்­டா­ளர்­கள் நுழைவுச்சீட்டு முன்­ப­தி­வு­களை அனு­ம­திக்­கா­த­தால், நாட­கம் நிகழ்வு ரத்து செய்­யப்­பட்­டு­விட்­டது. ‌

இந்த நிலை­மை­யால் அடுத்த மூன்று மாதங்­க­ளுக்கு நாடகங்­களை மேடை­யேற்­றவோ, நேர­டி­யான பயி­ல­ரங்­கு­களை ஏற்­பாடு செய்ய முடி­யா­த நிலை ஏற்பட்டுள்­ளது. இத­னால் இந்­நி­று­வ­னத்­தின் முக்­கிய அடிப்­படை வரு­வாய் மூன்று மாதங்­க­ளுக்கு பாதிக்­கப்­படும் என்று அவான்ட் தியேட்­டர் நிர்­வாக இயக்­கு­னர் திரு செல்வா கூறி­னார்.

முன்­னெப்­போ­தும் இல்­லாத இத்­த­கைய நெருக்­க­டி­யான காலத்­தி­லும் நாடக நிறு­வ­னம் தொடர்ந்து செயல்­பட ஏது­வாக, இந்த மே மாதத்­தில் பொது­மக்­க­ளுக்­கான நிகழ்ச்­சி­க­ளை­யும் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் இணை­யம் வழி நடத்த அவான்ட் தியேட்­டர் நிறு­வ­னம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

தேசிய கலை­கள் மன்­றம் நிய­மித்த நாட­கம் எழு­தும் பயி­ல­ரங்கு இன்­ன­மும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

வளர் தமிழ் இயக்­கம் நிய­மித்த மாண­வர்­கள் மற்­றும் பெரி­ய­வர்­க­ளுக்­கான இரு நடிப்­புப் பயிற்சிப் பயி­ல­ரங்­கு­க­ளை­யும் இணை­யம் வழி அவான்ட் தியேட்­டர் நடத்­த­வுள்­ளது. தமிழ் மொழி கற்­றல் வளர்ச்­சிக் குழு நிய­மித்த மாண­வர்­க­ளுக்­கான பிரத்­யே­க­மான பேச்­சுத்திறன் பயி­ல­ரங்­கை­யும் நாடக உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்தி நடத்­தத் திட்­ட­மிட்­டுள்­ளது. இது இன்­ன­மும் முடிவு செய்­யப்­ப­ட­வில்லை.

கலை, மொழி, கலா­சார அமைப்­பின் ஆத­ர­வி­னால் சிர­ம­மான காலங்­கள் படைப்­பாற்­ற­லுக்­குத் தடை­யாக இருக்­கப்­போ­வ­தில்லை என்­பதை இது நிரூ­பிக்­கிறது என்­றார் அவான்ட் தியேட்­டர் நிறு­வ­னத்­தின் முழு நேரக் கலை­ஞ­ரான திரு செல்வா.

இத்­த­கைய முயற்­சி­கள் ஏதோ ஒரு­வகை­யில் அவான்ட் தியேட்­டர் நிறு­வ­னத்­துக்கு வரு­மா­னத்தை ஈட்­டித் தர முடி­யும் என்று கூறிய திரு செல்வா, தமது நிறு­வ­னம் செயல்­படும் அலி­வால் ஆர்ட்ஸ் சென்­ட­ருக்கு அர­சாங்­கத்­தால் வழங்­கப்­படும் சொத்து வரி தள்­ளு­ப­டி­க­ளால் தமது நிறு­வ­னத்­துக்­கும் பயன் கிடைக்­கும் என்­றார்.

மேலும் அவான்ட் தியேட்­டர் நிறு­வ­னத்­தைச் சேர்ந்த ஏறக்­கு­றைய 80 பகு­தி­நேரக் கலை­ஞர்­கள் தங்­க­ளது திறன்­களை வளர்த்­துக்­கொண்டு, எதிர்­கால மேடை நிகழ்ச்­சி­க­ளுக்கு தயா­ராக ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் நிதி­யைப் பயன்­ப­டுத்தி பயிற்­சித் திட்­டங்­களில் ஈடு­பட உள்­ள­தா­க­வும் திரு செல்வா குறிப்­பிட்­டார்.

எதிர்­கா­லத்­தில் மக்­கள் தனி­மைப்­ப­டுத்­தப்­படும் காலங்­களில் அவர்­களை ஈடு­படுத்த, அண்­மை­யில் புதிய மின்­னி­லக்க தயா­ரிப்பு மானி­யம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தர­மான, மக்­களை ஈர்க்­கும் படைப்­பு­களை வழங்­கக்­கூ­டிய கலை அமைப்­பு­கள் அதி­க­மான இணை­யத் தயா­ரிப்­பு­களை வழங்க இதன் மானி­யம் மூலம், தேசிய கலை­கள் மன்­றம் மற்­றொரு வாய்ப்பை ஏற்­ப­டுத்­தித் தந்­துள்­ளது. இந்த மானி­யத்­துக்கு அவான்ட் தியேட்­டர் நிறு­வ­னத்­தின் சார்­பில் திரு செல்வா இரு தயா­ரிப்­பு­களை முன்­மொ­ழிந்­துள்­ளார்.

வரவுசெல­வுத் திட்­டத்­தில் கலை, கலா­சார துறை­க­ளுக்கு அர­சாங்­கம் ஒதுக்­கி­யுள்ள $55 மில்­லி­யன் தொகை­யி­லி­ருந்து ஒரு தொகையை அவான்ட் தியேட்­டர் போன்ற கலை நிறு­வ­னங்­க­ளுக்கு நிதி­யா­த­ரவு அளிக்க தேசிய கலை­கள் மன்­றம் ஒதுக்­கி­யுள்­ளதை திரு செல்வா சுட்­டி­னார். விரை­வில் தமக்கு கிடைக்­க­வுள்ள தொகை­யின் அளவு தமக்­குத் தெரி­விக்­கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

அவ­ரது ஊழி­யர்­க­ளுக்குத் தொடர்ந்து ஊதி­யம் வழங்­கு­வ­தற்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட தொழில் ஆத­ரவு திட்­டம் (Jobs Support Scheme ) உத­வி­யாக இருக்­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!