கல் பதித்த ஊழியரை குணப்படுத்திய மருத்துவமனை

கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, செங்காங் மருத்துவமனையின் ஏழாவது மாடி வார்டில் அனுமதிக்கப்பட்டபோது, 44 வயது திரு வெள்ளைச்சாமி பெரியகருப்பனுக்கு அச்சம், உடல்வேதனை எல்லாவற்றையும் மீறி ஒருவித மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்டது.

அது அவர் இரண்டாண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்த இடம். பலமுறை நடந்து நடந்து பழகிய இடம்.

“நான் கல் பதித்த வார்டு இது,” என்ற எண்ணத்தில் ஏற்பட்ட பெருமையினால் கொரோனாவின் தாக்கத்தையும் மீறி அவரது முகத்தில் புன்னகை மலர்ந்தது.

“வீட்டிற்கு அழைத்து, கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதைச் சொன்னபோது, கவலைப்படவேண்டாம் என அவர்களை நான் தேற்றினேன். நான் வேலை பார்த்த மருத்துவமனையில்தான் நான் இப்போது இருக்கிறேன் இங்கு என்னைக் கவனித்துக்கொள்ள நல்ல மருத்துவர்களும் தாதியரும் இருக்கிறார்கள் எனக் கூறினேன்,” என்றார் இரு மகன்களுக்கு தந்தையான திரு பெரியகருப்பன்.

கடந்த 2018ல் கட்டிமுடிக்கப்பட்ட செங்காங் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளில் அவர் வேலைபார்த்த நிறுவனமும் ஈடுபட்டிருந்தது. அவர் தங்கிய வார்டு அறையின் தரைக்கற்களைப் பதித்தவர் அவர். அப்போது, “இது எவ்வளவு பெரிய மருத்துவமனையாக இருக்கும், எவ்வளவு வசதிகள் கொண்டதாக இருக்கும், எத்தனை பேர் இங்கே சிகிச்சை பெறப்போகிறார்கள்,” என்றெல்லாம் யோசித்த அவர், தான் இங்கே வந்து தங்குவோம் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள வெற்றியூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு பெரியகருப்பன் கடந்த 22 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். பொங்கோலிலுள்ள எஸ்11 ஊழியர் தங்கும் விடுதிக்கு அருகில்தான் அவர் தங்கும் ‘பிபிடி லாட்ஜ் 1ஏ’ உள்ளது.

‘எஸ்11’ல் இருப்பவர்கள் உணவு வாங்க இவரது தங்கும் விடுதிக்குத்தான் வருவார்கள். இரு விடதிகளில் வசிப்பவர்களும் பொதுப்பேருந்தில் ஒன்றாக வேலையிடங்களுக்குப் போவார்கள். சில நேரங்களில் முதலாளிகள் எல்லாரையும் ஒரே லாரியில் கட்டுமானத்தளங்களுக்குக் கொண்டு செல்வதுண்டு.

‘எஸ்1’1 கிருமித்தொற்று குழுமமாக உருவானதுபோது, திரு பெரியகருப்பன் கவலையடைய ஆரம்பித்தார். அவர் பயந்ததுபோல ஏப்ரல் 18ஆம் தேதி காலையில் அவருக்கு தலைவலி, காய்ச்சல் போன்ற நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டன. அவரது வெப்பநிலை 38.68 டிகிரி செல்சியஸ் என பதிவானபோது, ஆம்புலன்சில் அவர் செங்காங் மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

“முதலில் என்னை ஆறாவது மாடியிலுள்ள வார்டில் வைத்திருந்தார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதி மாலை கிருதித்தொற்று உறுதி செய்யப்பட்டதும் நான் ஏழாவது மாடியிலுள்ள வார்டுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு நானும் மற்றொரு தமிழரும் இருந்தோம்,” என்றார் திரு பெரியகருப்பன்.

காய்ச்சல் மூன்று நான்கு நாட்களுக்குப் பிறகு தணிய ஆரம்பித்ததும் அவருக்குத் தைரியம் ஏற்படத் தொடங்கியது.

மருத்துவமனை சாப்பாடு, குளியல் மற்றும் தொலைக்காட்சி, தொலைபேசி வசதிகளுடன் ஊழியர்களின் பராமரிப்பு குறித்து மிகவும் நெகிழ்ந்ததாகவும் அவர் தெரிவித்தார். “குறிப்பாக தமிழில் பேசும் டாக்டர் ஹமிட் எனக்கு தைரியமூட்டினார்,” என்றார் அவர்.

மே 2ஆம் தேதி இவர் எக்ஸ்போ சமூகப் பராமரிப்பு இடத்திற்கு மாற்றப்பட்டார்.

அங்கே எல்லா வசதிகளும் இருக்கிறது என்று கூறிய திரு பெரிய கருப்பன், முழுமையாகக் குணமடைந்து, தமது தங்கும் இடத்துக்கு திரும்பி, நண்பர்களைக் காணும் நாளை இவர் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்.

ஊழியர்கள் இச்சமயத்தில் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்பைப் பெற்றாலும் பிரச்சினை முற்றிலும் தீரும்வரை சிங்கப்பூரிலேயே இருப்பது நல்லது எனத் திரு பெரியகருப்பன் கருதுகிறார். வசதியைப் பொறுத்தளவில் சிங்கப்பூரே சிறந்த இடம். தமிழைச் சரியாக படிக்கத் தெரியாதவர்கள் கூட இங்கு பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!