‘ரேடியோகிராஃபர்’ சுரேந்தரின் பணி

நோயாளிக்கு கொரோனா கிருமித்தொற்றா அல்லது நிமோனியா போன்ற வேறு ஏதேனும் பிரச்சினையா, கிருமித் தாக்கம் எந்த நிலையில் இருக்கிறது என்பதையெல்லாம் நுரையீரலை ஊடுகதிர் (எக்ஸ்ரே) படம் எடுத்து ஆய்வு செய்பவர், டான் டோக் செங் மருத்துவமனையின் தலைமை கதிர்ப்பட பதிவாளரான (Radiographer) திரு சுரேந்தர் ரெட்டி.

“சார்ஸ், இபோலா, கொவிட்-19 போன்ற நோய்த்தொற்றுக்கான பரிசோதனையின்போது ‘எக்ஸ்-ரே’, ‘சிடி ஸ்கேன்’ போன்றவற்றின் வழியாக நுரையீரல் முக்கியமாக கவனிக்கப்படுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த 26 ஆண்டுகளாக இங்கு பணியாற்றும் 56 வயது திரு சுரேந்தர், மெமோகிராம், அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ, எஞ்சியோகிராஃபி உள்ளிட்ட முறைகளின் வழியாகவும் நுரையீரலைப் படம் எடுத்து ஆய்வுக்கு அனுப்புவார்.

‘எக்ஸ்ரே’ படங்களை நோயாளிகள் படபடப்பு இன்றி நிதானமாக இருக்கும்போதுதான் சரியாக எடுக்க முடியும் என்பதால் அவர்களை அமைதிப்படுத்தும் பொறுப்பு கதிர்ப்பட பதிவாளர்களுக்கு இருப்ப தாக திரு சுரேந்தர் கூறினார்.

கொரோனா கிருமித்தொற்றுக்கான மருத்துவமனையின் பிரத்யேக சோதனை நிலையத்தில் இவரது பிரிவு 24 மணி நேர சேவையில் ஈடுபட்டுள்ளது.

சார்ஸ் நோய்ப்பரவலின்போது சோதனைகளுக்காக திறந்தவெளிக்கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததை நினைவுகூர்ந்த திரு சுரேந்தர், தற்போதுள்ள தேசிய தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தில் கொரோனா கிருமிப்பரவலை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதியும் தயார்நிலையும் மேம்பட்ட நிலையில் இருப்பதாகக் கூறினார்.

“மின்னிலக்கத் தொழில்நுட்பத்தால் கதிர்ப்படங்களுக்கான அறிக்கையைத் தயாரிக்கும் நேரம் குறைந்துள்ளது. தொலைவிலிருந்தும் மின்னிலக்க பகிர்வு வசதி மூலம் இந்தப் படங்களைக் கண்டு அறிக்கையை மருத்துவர்களுக்காகத் தயாரிக்கலாம். முக்கியமான முடிவுகளை விரைவில் பெறுவதற்கு இது வகை செய்கிறது,” என்றார் திரு சுரேந்தர் ரெட்டி.

வீட்டில் மனைவி, பிள்ளைகளுடன் வயதான மாமியார், மாமனாருடன் தங்குவதால் சில நேரங்களில் மனதில் ஒருவித கவலை உறுத்துவதாகக் கூறிய திரு சுரேந்தர், கொவிட்-19 பரவத் தொடங்கியது முதல் பல்லாயிரக்கணக்கான ‘ஸ்கேன்கள்’ செய்யப்பட்டிருப்பதைச் சுட்டினார்.

பின்பற்றப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமது கதிரியக்கவியல் பிரிவில் எவருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை என்பது இவருக்கு ஆறுதலான விஷயம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!