மாணவர் கல்வியில் வசதிகுறைந்தோர் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்

பல பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் எதிர்நோக்கும் சவால்கள்

எனது வேலைக்குப் பயன்படுத்தும் ஒரு மடிக்கணினிதான் வீட்டில் இருக்கிறது. உயர்நிலையில் இரண்டு பிள்ளைகள், தொடக்கநிலையில் ஒரு பிள்ளை என மூவருக்கும் இணையம் வழி பாடங்கள் நடத்தப்படுகின்றன. என் ஒரு கணினி போதாது. இந்நிலையில், சிண்டா ஒரு மடிக்கணினியை வழங்கினார்கள். மூன்று பிள்ளைகளும் அதைத்தான் பயன்படுத்துகிறார்கள். இவ்வாண்டு வழக்கநிலைத் தேர்வு எழுதவுள்ள மூத்த மகளுக்கு மடிக்கணினியைப் பயன்படுத்த முன்னுரிமை வழங்கியுள்ளோம். அதனால் இளைய பிள்ளைகளுக்கு பாடங்கள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வகுப்புகள், பாடங்கள் சிலவற்றில் ஈடுபட முடியாமலும் போனது. ஆசிரியர்களுக்கு சூழ்நிலையை எடுத்துக் கூறியபோது அதை அவர்கள் புரிந்துகொண்டார்கள்.

திரு முத்துக்குமரன் சுப்பிரமணியம், 43, துணை மேலாளர், சாம்சுங் நிறுவனம்


தனி அணுகுமுறை தேவை

குறைந்த வருமான பின்புலத்தைச் சேர்ந்த பிள்ளைகள் கல்வியில் வெற்றி பெறுவதற் கான சமத்துவமான வாய்ப்பை உரு வாக்கித் தருவது பள்ளிகள், ஆசிரியர்க ளின் பொறுப்பாக உள்ளது. ஓரறை வீட்டில் தங்கும் பிள்ளைகள், நான்கு சகோதரருடன் ஒரு கணினியைப் பகிரும் பிள்ளைகள் உள்ளிட்டோரின் இல்லம் சார்ந்த கற்றல் பெரிதும் பாதிக்கப் படுவதால் அவர்களுக்கென்றே தனி அணுகுமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

எ.ம.ராஜேன், 35, குடியியல், பண்புநலக் கல்விப் பிரிவுத் தலைவர், நார்த்லைட் பள்ளி


மாணவர் நலனில் ஆசிரியர் பங்கு

மாணவர்களின் தேவைகளை அறிந்திருந்ததால் வீட்டிலிருந்து படிக்கும் சூழல் ஏற்பட்டபோது பெரும்பாலானோருக்கு பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்த்தோம். எனது மாண வர்களில் 12 பேர் கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டத்தில் உள்ளனர்; 9 பேரிடம் மடிக்கணினி இல்லை. மாணவர்களுக்குத் தேவைப்படும் வசதிகளைச் செய்து தருவதுடன், அவர்களிடம் போதிய உணவும் பணமும் உள்ளதா என ஆசிரியர்கள் நாள்தோறும் கேட்பர். ஒரு சிலருக்கு வீட்டில் சரியான கவனிப்பு இருக்காது. இவர்களை முன்கூட்டியே பள்ளிக்கு அழைப்போம்.

ஷாஜாவானி பேகம், 30, விளையாட்டு நல ஆசிரியர், நார்த்லைட் பள்ளி


தேவை அறிந்து உதவுதல்

எங்கள் பள்ளியில் ஆதரவாளர்களின் உதவியோடு 25 மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கினோம். வீட்டுப் பாடத்துடன், பள்ளிக்குப் பிந்திய மாணவர் பராமரிப்பு நிலையத்தில் நடத்தப்படும் பெரும்பாலான நடவடிக்கைகளை ‘ஸூம்’ மெய்நிகர் சந்திப்புத் தளம் வாயிலாக நடத்தி வருகிறோம். இதன்வழி, ஆக்கபூர்வ விதத்தில் அவர்களது கல்வி பயணம் தொடர்வதை இது உறுதிசெய்கிறது.

திருமதி தே.சாந்தா, 31 பள்ளிக்கு பிந்திய மாணவர் பராமரிப்பு நிலைய ஆசிரியர்


தேர்வுக்கு உதவ முடியாத கவலை

ஒற்றை பெற்றோராக நான்கு பெண்களை வளர்க்கிறேன். மூன்று பேர் படிக்கிறார்கள். பள்ளிகள் இரவலாக வழங்கிய இரு மடிக்கணினிகளைக் கொடுத்தார்கள். வீட்டில் ஒரு மடிக்கணினி உண்டு. இவற்றை என் பிள்ளைகள் பகிர்ந்து பயன்படுத்துகிறார்கள். நான் வேலை செய்யும் உணவகம் கொவிட்-19 முறியடிப்பு நடவடிக்கைகளால் மூன்று வாரங்களுக்கு மூடியது. சேமிப்பும் அரசாங்க உதவி களும் வீட்டுச் செலவுக்கு கைகொடுத்தன. கல்வி அமைச்சின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் போது உணவுக்குப் பணம் கொடுப்பார்கள். இப்போது அது இல்லை என்றாலும், ஈசி-லிங்க் அட்டையில் பணம் நிரப்புகிறார்கள். பள்ளிக்குத் திரும்பச் செல்லும்போது இந்த தொகை போக்குவரத்து, உணவுச் செலவுகளுக்கு உதவும். ஓரளவு நிதி உதவி கிடைத்தாலும் என் மகள்களுக்கு என்னால் படிப்பில் உதவ முடியாததுதான் என் கவலை. கடைசி மகள் பிஎஸ்எல்ஈ எழுதவுள்ளார். உயர்நிலை 2 வரை படித்த என்னால் எந்தளவுக்கு உதவ முடியும்?

- திருவாட்டி ஜமீனா பானு


சிண்டாவின் உதவி

தேவையான வளங்களைப் பெறுவதும் வீட்டில் கற்றல் சூழலை ஏற்படுத்தவும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு சவாலானது. கணினிகளும் இதர வசதிகளும் பெறுவதற்கு போதிய நிதி இல்லை. உதவி, ஆதரவு திட்டங்களைப் பற்றிய தேவையான தகவல்களும் அவர்களுக்கு இல்லை. எனவே, வசதி குறைந்த குடும்பங்களை முடிந்த வேகத்தில் அணுகி முக்கிய கருவிகளையும் மின்னிலக்க வளங்களையும் சிண்டா வழங்கியது.

திரு அன்பரசு ராஜேந்திரன், சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி


ஆங்கில வாசிப்பில் உதவி தேவை

வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பெரும்பாலும் ஆங்கில மொழியில் படித்துப் புரிந்துகொள்ளச் சிரமப்படுவதை என் அனுபவத்தில் உணர்ந்தேன். இதனால், ஆங்கில மொழியில் நடத்தப்படும் அறிவியல், கணிதம் போன்ற பாடங்களிலும் இவர்கள் பின்தங்கி விடுகின்றனர். கேட்கப்படும் கேள்விகள் அவர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு போதிய வளங்கள் இல்லாதது அல்லது குடும்ப உறுப்பினர்கள் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்காதது, அவர்கள் கல்வியில் சிறக்க தடங்கலாக இருக்கிறது.

குமாரி கிரித்தி பு‌ஷ்பநாதன், 23, குடும்ப சேவை நிலைய தொண்டூழிய துணைப்பாட ஆசிரியர்


நம்பிக்கை தைரியம் தரும்

பராமரிப்பாளர்கள் மீதான நம்பிக்கையை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும். தேவைப்படும் உதவியை அவர்கள் தைரியமாகக் கேட்கும்போது பராமரிப்பா ளர்களுக்கு உதவி அளிப்பது சுலபமாக இருக்கும். இதற்காக நாங்கள் பள்ளிகளு டன் இணைந்து செயல்பட்டு அவர்களது தேவைகளை மேலும் ஆராய்வோம்.

- கலைவாணி ஆறுமுகம், 27, பள்ளிசார்ந்த மாணவர் பராமரிப்பு நிலையத்தின் மேற்பார்வையாளர்


உடனடி உதவி வழங்க தடைகள்

அரசாங்கத்தின் பல உதவிகளும் மானியங்களும் இணைய வங்கிச் சேவைகள் மூலம் வழங்கப்படுகின்றன. பல வசதி குறைந்த குடும்பங்க ளிடம் அந்த வசதி இருக்காது. பலரும் முன் கட்டண அட்டையைப் (prepaid cards) பயன்படுத்துவதால், அவர்களின் தொலைபேசி எண்கள் அடிக்கடி மாறும். எளிதில் தொடர்பு கொண்டு உதவி வழங்குவதும் இதனால் கடினமாகிறது. அரசாங்க உதவி உடனடியாக அவர்களுக்குக் கிடைக்காமல் போகலாம். வீட்டிலிருந்து இணையம் வழி படிப்பதற்குத் தேவையான வசதிகளைப் பெற இவை தடைகளாக அமைகின்றன.

- திரு அபி‌ஷேக் பஜாஜ், 28, 'எ குட் ஸ்பேஸ்' ஊழியர், சிக்ஸ்த் ஸேன்ஸ்' தொண்டூழியர்


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!