வீட்டிலிருந்தபடி இந்தியப் பாரம்பரிய கலைகள், விளையாட்டுகளில் ஈடுபட வாய்ப்பு

கொவிட்-19 நோய்ப் பரவலால் பலரும் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த காலகட்டத்தில் பாரம்பரிய இந்திய கைவினைக் கலைகளிலும் விளையாட்டுகளிலும் தொடர்ந்து இணைந்து இருக்க இந்திய மரபுடைமை நிலையம் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.

பல்லாங்குழி, ரங்கோலி, பரமபதம், ஐந்து கற்கள் கொண்டு விளையாடும் அஞ்சாங்கல் போன்ற பாரம்பரிய கலைகளையும் விளையாட்டுகளையும் ஒட்டிய காணொளிகள் இந்த மாதமும் அடுத்த மாதமும் வெளியிடப்படும்.

இந்திய மரபுடைமை நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இந்தக் காணொளிகளைப் பார்த்து வீட்டில் இருந்தவாறு விளையட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் உருவாக்கலாம்.

இந்திய கலாசார, பாரம்பரிய அம்சங்களை ஆராயவும் நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவிடவும் இந்த முயற்சி வாய்ப்பளிக்கிறது என்று குறிப்பிட்டார் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளரான திருமதி மரியா பவானி தாஸ்.

“நமது மரபுடைமை தகவல்களை மின்னிலக்கமயமாக்குவது தேசிய மரபுடைமைக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அரும்பொருளகங்களும் மரபுடைமை நிலையங்களும் தற்காலிகமாக மூடியிருக்க வேண்டிய நிலையில் இந்த முயற்சி மேலும் முக்கியமாகிறது.

“பார்வையாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சொந்தமாக பாரம்பரிய விளையாட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் உருவாக்கும் முறைகளை இந்த இணையக் காணொளித் தொடர் காட்சிப்படுத்தும்,” என்றார் திருமதி மரியா.

காணொளி குறித்த மேல் விவரங்களுக்கு https://www.facebook.com/indianheritagecentre/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.

அத்துடன், இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தர கண்காட்சிகளின் ஒலி சுற்றுலாவை அனுபவிக்க ‘சமார்டிஃபை’ என்ற செயலியை bit.ly/applesmartify அல்லது bit.ly/googlesmartify என்ற இணைப்புகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!