இணையம்வழி தாய்மொழிக் கருத்தரங்கு

வருடாந்திர நிகழ்வான ‘தாய்மொழிகள் கருத்தரங்கு’ இவ்வாண்டு கொவிட்-19 சூழலால் மெய்நிகர் நிகழ்வானது. தாய்மொழி தொடர்பில் வாழ்நாள் கற்றலைக் குழந்தைகளிடையே ஊக்குவிப்பதும் குடும்பங்கள், சமூகப் பங்காளிகள் ஆகியோரை ஈடுபடுத்தி ஒரு துடிப்புமிக்க தாய்மொழி சுற்றுச்சூழலை உருவாக்கித் தருவதும் கருத்தரங்கின் நோக்கமாக இருந்து வருகிறது.

ஒன்பதாவது ஆண்டாக நேற்று நடைபெற்ற இந்த இணையக் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். கல்வியாளர்கள், சமூகப் பங்காளிகள், பெற்றோர் ஆகியோருடன் திரு வோங் கலந்துரையாடல் குழுவிலும் பங்கேற்று ஆரம்பக் கால மொழிக் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார்.

தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவர் திரு விக்ரம் நாயர் தொடக்க உரை ஆற்றினார்.

தமிழில் நான்கு இணையப் பகிர்வு அங்கங்கள் இடம்பெற்றன. ‘கதைகள்வழி மகிழ்ச்சியான கற்றல்’ என்ற தலைப்பில் ‘AKT Creations’ நிறுவனத்தின் திருமதி ராணிகண்ணா மற்றும் திரு ஆனந்த கண்ணன் பேசினர். குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஒரு முக்கிய உத்தி, ‘கதைசொல்லுதல்’ என்று அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள். கருத்துப் பரிமாற்றத் திறன், தன்னம்பிக்கை, உணர்வுகள் குறித்த புரிந்துணர்வு, புத்தாக்கச் சிந்தனை போன்ற பலன்களை இந்த உத்தி மூலம் பெறுவதால் மொழியில் ஈடுபாடு கூடும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இணையக் காட்சிக்கூடத்தில் பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவை தங்களின் தாய்மொழி கற்கும் உத்திகளைப் பற்றி பகிர்ந்துகொண்டிருந்தன.

விருது வென்ற தமிழாசிரியர் ஜெயா

தாய்மொழிகள் கருத்தரங்கின் ஓர் அம்சமாக ஏழு ஆசிரியர்களுக்கு ‘தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருது’ வழங்கப்பட்டது. அவர்களில் தமிழ் ஆசிரியர் 43 வயது திருமதி லூயிஸ் ஜெயா ரூபி கரோலினும் ஒருவர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஆங்கிலம், நான்கு ஆண்டுகளுக்கு தமிழ் என்று மொத்தம் ஆறு ஆண்டுகளாக பாலர் பள்ளி ஆசிரியராக இருந்து வரும் இவர், தம் ஆசிரியர் பணிக்காக முதன்முறையாக விருது வென்றிருப்பதாக குறிப்பிட்டார்.

“குழந்தைகள் ஆர்வத்துடன் வகுப்பில் கலந்துகொள்வது, தமிழில் சிறப்பாக பேசுவது, சொல்வதை ஒழுக்கத்துடன் கேட்டு நடந்துகொள்வது போன்ற அம்சங்கள் எனக்கு மிக முக்கியம். சுவாரசியமான பல உத்திகளை வகுப்பில் பயன்படுத்துவதால் என் மாணவர்கள் இயல்பாகவே ஆர்வத்துடன் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்,” என்று கூறினார் ஜெயா.

பொங்கோல் ஈஸ்ட் பிளோக் 187B ‘பிசிஎஃப் ஸ்பார்கல்டாட்ஸ்’ பாலர் பள்ளி ஆசிரியரான திருமதி ஜெயாவை இவ்விருதுக்கு முன்மொழிந்தவர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்.

“கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் போல் நடிப்பது, வரைவது, கலாசார பாடல்கள், நடனங்கள் போன்ற உத்திகள் மூலம் பாடத்தைச் சுவாரசியமாக்குவேன்,” என்று திருமதி ஜெயா தமது தினசரி வகுப்புகளைப் பற்றி விளக்கினார்.

வகுப்பில் மாணவர்களைச் சிந்திக்க வைப்பதும் தமிழில் கேள்வி கேட்டு உரையாடுவதும் வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ள வழிவகுக்கிறது என்று மேலும் கூறினார் திருமதி ஜெயா.

தற்போதைய சூழலில் பல குழந்தைகள் வீட்டில் ஆங்கிலத்தை அதிகமாக பயன்படுத்துவது தமிழ் கற்றலுக்கான ஒரு பெரிய சவால் என்றும் ஆசிரியர் மட்டுமில்லாமல் பெற்றோரும் பிள்ளைகளின் கற்றலுக்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார் திருமதி ஜெயா.

“பெற்றோர் முதலில் குழந்தைகளிடம் தமிழில் பேசவேண்டும். சில பெற்றோர்களுக்கு தமிழ் தெரியாமல் இருக்கலாம். அவர்களும் சேர்ந்து கற்றுக்கொள்ள தமிழ் சொற்களுடன் ஆங்கிலச் சொற்களையும் வீட்டுப்பாடங்களுடன் இணைக்கிறேன். பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுப்பதுடன் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை. அவர்களின் விருப்பங்களையும் கேட்டறியவேண்டும். அதற்குத் தகுந்தது போல தமிழ் கற்றுக்கொடுப்பது சிறப்பு,” என்றார் திருமதி ஜெயா.

இந்த ஏழு விருதுகளைத் தவிர, மேலும் ஏழு ஆசிரியர்களுக்கு ‘தகுதிசார் விருது’ வழங்கப்பட்டது. இந்த விருதுக்கு இரண்டு தமிழ் ஆசிரியர்களான திருமதி ரசல் ராஜ் மேரி செலின் ஷர்மிளா மற்றும் திருமதி சண்முகம் ஷோபா ஆகியோர் தேர்வு பெற்றிருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!