நவராத்திரியை முன்னிட்டு பெண்களை மையமாகக் கொண்ட பல சமய கலந்துரையாடல்

நவ­ராத்­தி­ரியை முன்­னிட்டு ‘ஒட்­டு­மொத்த உல­கிற்கே சக்தி கொடுத்து கற்­பிக்­கும் அதி­கா­ர­முள்­ள­வர்­கள் பெண்­கள்’ எனும் தலைப்­பில் நடந்­தே­றிய கலந்­து­ரை­யா­ட­லில் பிர­தான சம­யங்­க­ளைப் பிர­தி­நி­தித்து பேச்­சா­ளர்­கள் பங்­கேற்­ற­னர். சென்ற சனிக்­கி­ழ­மை­யன்று நடந்த இக்­க­லந்­து­ரை­யா­டலை ‘சேவ்ஸ்­பே­சஸ்.எஸ்ஜி’ எனும் சம­யங்­க­ளுக்­கி­டை­யே­யான நல்­லி­ணக்­கம் பேணும் தளத்தை நிறு­விய எலி­செ­பெத் டியோ வழி­ந­டத்­தி­னார்.

இந்து சம­யத்­தைப் பிர­தி­நி­தித்து நேர­லை­யில் கலந்­து­கொண்ட டாக்­டர் தர்­‌‌ஷனா ஸ்ரீதர், பிரிட்­டி‌ஷ் அர­சாங்­கத்­திற்­கான மூத்த கொள்கை ஆலோ­ச­கர் ஆவார். அவர் பெண்­கள், குழந்­தை­க­ளின் அதி­கா­ர­ம­ளித்­த­லுக்­குக் குரல் கொடுப்­ப­வர்.

சிங்­கப்­பூ­ரில் பதி­வு­செய்­யப்­பட்ட ஸ்ரீ ஞான­நந்தா சேவா சமா­ஜம் எனும் சமய அமைப்பு, ‘இஃப்தென்­ஹவ்’ எனும் ஆலோ­சனை அமைப்­பு­டன் இணைந்து இந்த நிகழ்ச்­சிக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

நீ சூன் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­வாட்டி கேரி டான் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

“வெவ்­வேறு சம­யங்­க­ளாக இருந்­தா­லும் ஆண், பெண் இரு பால­ருமே சம­மா­ன­வர்­கள் என்­பதை அனைத்து சம­ய­மும் கோடி காட்­டி­யுள்­ளது முக்­கி­ய­மான கருத்­தா­கும். இந்­தப் பொது­வான கருத்தை அனை­வ­ரும் ஏற்று பாலின சமத்­து­வத்தை நிலை­நாட்­ட­வேண்­டும்,” என்று அவர் கேட்­டுக்­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரில் வெவ்­வேறு சம­யத்­தி­னர் நல்­லி­ணக்­கத்­தோடு வாழ்­வது ஒரு சிறப்­பம்­சம் என்று கூறிய திரு­வாட்டி டான், சமூக ஊட­கங்­களும் மின்­னி­லக்க தொழில்­நுட்­ப­மும் பல பொய்ச் செய்­தி­க­ளைப் பரப்­பும் நிலை­யில் இது­போன்ற பாது­காப்­பான சூழ­லில் வெளிப்­படை­யா­கக் கருத்­து­க­ளைப் பகிர்­வது முக்­கி­யம் என்­றார்.

பெண்கள் ஆண்களுக்கு பின் இரண்டாம் நிலை குடிமக்களாகத் தான் கருதப்படவேண்டும் என்று இந்து மதம் வலியுறுத்துகின்றது என்னும் கருத்து உலகில் நிலவி வருகின்றது என்றும் இது திட்டவட்டமான தவறான கருத்து என்றும் டாக்டர் தர்ஷணா ஸ்ரீதர் கூறினார்.

’இந்து மதம் பெண்களை இறை நிலையில் வைத்து பார்க்கும் மதம், வேதங்களும் உபநிஷதங்களும் ஆண் பெண் வித்தியாசம் பார்ப்பதில்லை, சமூகம் தன்னுடைய அடக்குமுறைகளுக்கு இந்து மதத்தை போர்வையாக வைத்து தவறான விளக்கங்களையும் கருத்துக்களையும் உண்மை என பரப்பியுள்ளது,’’ என்று அவர் விவரித்தார்.

தாவோயிசம் சம­யத்­தைச் சேர்ந்த மாஸ்­டர் நியோ லீ கெங், தாம் 2011ஆம் ஆண்டு சம­யத் தலை­வ­ரா­ன­போது, அது­வரை அச்­ச­ம­யத்­தின் தலை­வர்­க­ளாக பெரும்­பா­லும் ஆண்­களே இருந்­த­னர் என்­றும் அவ்­வாறு இருந்­தும் தம்­மால் அந்த இடத்­திற்கு வர­மு­டிந்­தது சம­மான வாய்ப்­பு­கள் இருப்­ப­தைக் குறிக்­கிறது என்­றும் தெரி­வித்­தார். வேறு­பா­டு­கள் ஒரு­வ­ரின் தனித்­து­வத்­தைக் காட்­ட­வேண்­டுமே தவிர பிரி­வி­னை­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது என்று கூறி­னார் சிஸ்­டர் ஜோன் லோபெஸ். பிரி­வு­கள் காலங்­கா­ல­மாக மக்­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டா­லும் கத்­தோ­லிக்க தேவா­ல­யங்­கள் அந்த எண்­ணத்தை முறி­ய­டித்து வரு­வ­தாகச் சொன்னார்.

திரு­ம­ணம், சொத்து உரிமை போன்ற விவ­கா­ரங்­கள் புனித குர்­ஆ­னில் ‘அந்­நிஸா’ என்ற பெண்­ணின் பெய­ரைக் கொண்ட அத்­தி­யா­யத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்று சுட்­டிக்­காட்­டி­னார் உஸ்­தாஸா லியானா ரோஸ்லி அஸ்­மாரா. இந்­தி­யா­வில் பெண்­கள் கைத்­தறி துணி­க­ளைத் தைக்­கும் தொழில்­மு­னைப்­பைத் தொடங்­கு­வ­தற்­கான முயற்­சி­யில் இறங்­கி­யுள்­ளார் இவர்.

சம­யங்­களில் அண்­மை­யில் உரு­வான பஹாஇ சம­யத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் ஃபில்லிஸ் கிம், இரு பாலி­னங்­களும் ஒரு பற­வை­யின் இரு இறக்­கை­க­ளைப் போன்­றவை என்று எடுத்­து­ரைத்­தார். சம­மாக இரு இறக்­கை­களும் செயல்­பட்­டால்­தான் பறவை பறக்­க­மு­டி­யும் என்­ப­தைப் போலவே இரு பாலி­ன­மும் சம­மா­கும் என்­பதை அந்த சம­யம் நம்­பு­வ­தாகக் குறிப்­பிட்­டார்.

நவராத்திரி விழாவை முன்னிட்டு பெண்ணுரிமையை மையமாக வைத்து அனைத்து சமயங்களின் நல்லிணக்கமும் ஒருமைப்பாடும் மேலோங்கும் வகையில் இந்நிகழ்ச்சியை நடத்துமாறு பணித்த பூஜ்ய ஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள், அத்வைத தத்துவத்தின் குருவான ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாளின் ஜ்யோதிர் மட பரம்பரையில் தோன்றி, இன்று ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் பீடாதிபதியாக உள்ளார்.

ஆதி பராசக்தியின் அம்சமாக வணங்கப்பட வேண்டியவர்கள் பெண்கள், இவ்வுலகின் இயக்கத்துக்கு மூலாதாரமாக இருந்து ஆற்றலளிப்பவர்கள் பெண்கள், ஆனால் மாயையின் தாக்கத்தினாலும் சமூகத்தின் அடக்குமுறையாலும் இதை முழுமையாக உணராது உலகெங்கிலும் பலவகைகளில் அவர்களை கொடுமைப்படுத்தும் நிலைப்பாடு மாறினால் தான் இவ்வுலகம் உய்ய முடியும் என்றும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி ஸ்வாமிகள் கூறினார்.

இவ்வாறான சமூக நல தொண்டுகளும் சமூக விழிப்புணர்வு விழாக்களும் தொடர்ந்து நிகழ்த்தி, இந்து மதத்தின் உண்மை தத்துவங்களை வெளிக்கொணர்ந்து, இறை படைப்பின் அனைத்துயிர்களின் நலனுக்காகவும் சேவை செய்யுமாறு ஸ்வாமிகள் கோரினார் என்றும் இது போன்ற நிகழ்வுகள் பல இன நல்லிணக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார் இவ்விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவர் டாக்டர் கஜன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!