முரசு கொட்டும் தெருக்கூத்து த. ராமலிங்கத்தின் தனிமுத்திரை

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

சமூ­கத்­தின் குர­லாக விளங்­கும் தமிழ் முரசு நாளி­தழ் ஆண்­டாண்டு கால­மாக இந்­திய சமூ­கத்­தி­ன­ரைப் பாதிக்­கும் பிரச்­சி­னை­களை அலசி ஆராய்ந்து வரு­கிறது.

நவீன யுகத்­தில் அனை­வ­ரின் கவ­ன­மும் மின்­னி­லக்கக் காணொ­ளி­களில் பதிந்திருக்க, அந்த மோகத்­தி­லேயே ஒரு புதிய இணை­யக் காணொளித் தொடரை தமிழ் முரசு நாளி­தழ் வரும் பொங்­கல் அன்று வெளி­யிடவிருக்கிறது.

இவை, சமூக அக்­க­றை­க­ள் பற்றிய சிந்தனையைத் தூண்­டும் விதமாக இருக்கும். ஆனால் சொல்லப்பட்டிருக்கும் விதம் மாறு­பட்டிருக்கும்.

"தமி­ழர் பாரம்­ப­ரிய கலை­களில் ஒன்­றான தெருக்­கூத்தின் மூலம் சமூ­கச் செய்­தி­களை உள்­ளூர் சூழ­லுக்கு ஏற்ப படைக்கும் முயற்சிகளை இத்­தொ­டரில் கையாண்­டுள்­ளோம்," என்று 'PerfectImage00 Entertain ment' தயா­ரிப்பு நிறு­வன இயக்­கு­நரான திரு இ.சுந்­தர் தெரிவித் ­தார்.

காணொ­ளி­யில் இடம்­பெ­றும் வெளிப்­புற காட்­சி­கள் வண்­ணமய­மா­க­வும் ஆர்வமூட்டும் வகையில் இருப்­ப­து­டன் இளை­யர்­க­ளை சென்றடைவதற்காக நவீன சாயலில் தெருக்­கூத்து, ஐந்து காணொளி களில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் விளக்­கி­னார்.

மின்­னி­லக்­கத் தாக்­கம், மாறி ­வ­ரும் வாசிப்­புப் பழக்­கம் ஆகி­ய­வற்­றுக்கு ஏற்ப தமிழ் முரசு நாளிதழ், சுவை­யான தகவல்களை தனது இணையத்தளம், 'ஃபேஸ்புக்', 'இன்ஸ்­டா­கி­ராம்' வழி தொடர்ந்து பகிர்ந்­து வரு­கிறது என்றார் தமிழ் முர­சின் செய்தி, மின்­னி­லக்­கப் பிரிவின் ஆசி­ரி­யர் திரு தமி­ழ­வேல்.

செய்­தித்­தாள் வழி­யாக மட்­டும் வாச­கர்­க­ளுக்­குச் செய்தி வழங்கி வந்த முரசு, இன்று இணை­யத்­தி­லும் சமூக ஊட­கங்­க­ளி­லும் கோலோச்சி வரு­கிறது என்­றும் பல தரப்பட்ட செய்­தி­க­ளை­யும் காணொளிக­ளை­யும் முரசு செய்­திக் குழு­வி­னர் தயா­ரித்து வழங்கி வரு­கின்­ற­னர் என்­றும் அவர் சொன்­னார்.

அந்த வரி­சை­யில் தமி­ழர் பாரம் ­ப­ரிய கலை­களில் ஒன்­றான தெருக்­கூத்­தைப் பறை­சாற்­று­கிறது இத்­தொ­டர்.

தமிழ் முர­சில் அச்சு வடி­வில் தெரி­விக்­கும் செய்­தி­க­ளைத் தெருக்­கூத்து வழி­யா­க­வும் கொண்டு போய்ச் சேர்க்­க முடியும் என்­பதே தொடரின் நோக்கம் என்று திரு தமி­ழ­வேல் மேலும் கூறினார்.

தெருக்­கூத்­தைப் பற்­றிய காணொ­ளி­யோடு, தமிழ் முர­சின் வர­லாறு, அடுத்­த­கட்ட அத்­தி­யா­யம், தேசிய ஒருங்­கி­ணைப்பு, சிங்­கப்­பூ­ரில் தமிழ் மொழி பயன்­பாடு, சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு என ஐந்து தலைப்­பு­க­ளை­யொட்டி இத்­தொ­டர் இருக்­கும்.

தெருக்­கூத்து தொடரை தனித்­துவ 'சினிமா' சாயல் கொண்ட பாணி­யில் மணி­மா­றன் கிரி­யே­‌‌ ஷன்ஸ் நடனக் குழு­வி­னர் தயாரித்து உள்ளனர்.

தெருக்­கூத்து படைப்­பில் இடம்­பெ­றும் மூல கதா­பாத்­தி­ரம் நாடக அம்­சங்களில் அதிக கவ­னம் செலுத்த, பின்­ன­ணி­யில் நட­ன ­மணி­கள் பாட­லுக்கு ஏற்­ற­வாறு அபி­ந­யம் பிடிப்­பர் என்று குழு­வில் இடம்­பெற்றுள்ள துணை நடன ஒருங்­கி­ணைப்­பா­ளர் 35 வயது முகம்­மது ‌‌ஷஜீர் கான் சொன்­னார்.

ஒயி­லாட்­டம், பறையாட்டம் போன்ற பாரம்­ப­ரிய நட­னங்­களும் இவர்­களது படைப்­பு­களில் சேர்க்கப் ­பட்டு உள்ளது.

'தேசிய ஒருங்­கி­ணைப்பு' தெருக்­கூத்து படைப்­பில் மலாய், சீன பாரம்­ப­ரி­யத்­தைப் பிர­தி­ப­­லிக்­கும் பொருட்­கள் நட­னத்­திற்கு பயன் ­ப­டுத்­தப்பட்டிருப்பதாக ­கு­ழு­வின் நடன ஒருங்­கி­ணைப்­பா­ளர் ரா. சுரேந்­தி­ரன், 35, கூறி­னார்.

தேசிய ஒருங்­கி­ணைப்பு படைப்­பில் இடம்­பெ­றும் மூல கதா­பாத்­தி­ர­மான 27 வயது மா.பார்த்­தி­பன், முகத்­தில் நீலச் சாயத்தைப் பூசி, ஜொலிக்கும் பாரம்­ப­ரிய ஆடை ஆபரணங்­களை அணிந்து ராஜா போன்று கம்­பீ­ர­மாக தோற்­ற­ம­ளிக்­க விருக்கிறார்.

"வழக்­க­மான பாரம்­ப­ரிய நட­னத்துடன் ஒப்­பி­டு­கை­யில் தெருக்­கூத்­தில் முக பாவ­னை­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் அளித்து உரக்­கப் பேசி நடித்து, ஆடிப்பாடும் சுதந்­தி­ரம் எனக்கு மிக­வும் பிடித்­திருக் கிறது.

"காணொளிகளைப் பார்­வை­யி­டு­வோர் இதனை அனுபவபூர்வமாக உணரலாம்," என்­றார் பார்த்­தி­பன்.

அடுத்­தாண்டு பொங்­கல் பண்டி கையின்போது, தமி­ழர் பாரம்­ப­ரி­யத்தை கொண்­டா­டும் வித­மாக தக­வல் ­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யத்­தின் ஆத­ர­வு­டன் தமிழ் முர­சின் இணையத் தளம், சமூக வலைத்­தளப் பக்­கங்­களில் காணொளித் தொடர் வெளியிடப் படுகிறது.

தமிழ் முரசின் சிறப்பு தெருக் கூத்து காணொளி தொடர் பாடல்களில் பிரபல திரைப்படக் கலை இயக்கு நரான (Art Director) 41 வயது திரு த.ராமலிங்கத்தின் தனி முத்திரை பதிந்துள்ளது.

இவர், 'காலா', 'கபாலி' போன்ற தமிழ் திரைப்படங் களின் கலை இயக்குநர்.

விழுப்புரம், வானூர் வட்டம், பேராவூர் கிராமத்தில் பிறந்த இவர், ெதருக்கூத்தில் தொடங்கி திரைப்படங்களில் நுழைந்துள்ளார். பகலில் விவசாயமும் இரவில் தெருக் கூத்து கலைஞராகவும் மாறிய தமது தந்தையைப் பார்த்து வளர்ந்ததில், அது தம்மையும் ஒரு கலைஞனாக செதுக்கியது என்றார் அவர்.

"தமிழ் முரசு நாளிதழை தோற்றுவித்த அமரர் தமிழவேள் கோ.சாரங்கபாணி, மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் திரு லீ குவான் இயூ ஆகியோர் சிங்கையில் தமிழ் மொழிக்காக ஆற்றிய பங்கு பற்றி ஆழமாக அறிந்து கொண்டேன். சிங்கப்பூர் மக்களோடு தெருக்கூத்து கலையை பகிர்ந்துகொள் வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று திரு த.ராமலிங்கம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!