காண வேண்டிய தமிழ் குறும்படங்கள்

கவ­ரும் கதைக்­க­ளம், நினை­வில் இருந்து அகலா கதா­பாத்­தி­ரங்­கள் ஆகி­ய­வற்­றுக்­குப் பெயர் போன­வர் உள்­ளூர் பட இயக்­கு­நர் டான் அர­விந்த். இதை அறிந்தே இரு குறும்­ப­டங்­க­ளைத் தயா­ரிக்க 'விட்சீ ஸ்டூ­டி­யோஸ்' இவரை நாடி­யது.

"இவ­ரது கதை­கள் உள்­ளூர் ரசி­கர்­க­ளு­டன் உணர்­வு­பூர்­வ­மான ஒரு தொடர்பை ஏற்­ப­டுத்­தும். அதே சம­யம் அடை­யா­ளம், ஒற்­றுமை, சமூக உணர்­வை­யும் தூண்­டும்," என்­றது நிறு­வ­னம்.

அவ்­வாறு டானின் 18 நிமிட தமிழ் குறும்­ப­டம்­தான் 'கலர்ஸ்'. முதி­ய­வர் ஒரு­வர், தம் மனை­வி­யின் பிறந்­த­நா­ளுக்­காக திட்­ட­மிடு­கி­றார். ஆனால் கொண்­டாட்­டத்­திற்­காக குடும்­பத்தை ஒன்­று­கூட வைக்க அவர் தவிக்­கி­றார்.

"தீரா அன்பை அழ­காக எடுத்­துச் சொல்­வ­து­டன் அதில் உள்ள வலி­யை­யும் உணர்த்த இக்­க­தை­யைப் பட­மாக்­கி­னேன்," என்­றார் டான். முது­மை­யில் வரக்­கூ­டிய ஞாபக மறதி நோயால் அவ­தி­யு­றும் கதா­பாத்­தி­ரத்தை அதற்­கெ­னப் பயன்­ப­டுத்­தி­ய­தாக விளக்­கி­னார்.

மற்­றொரு குறும்­ப­ட­மான 'சன்­செட்' 19 நிமிட நீள­மு­டை­யது. பிள்­ளை­யைக் கவ­னித்­துக்­கொண்ட பிறகு, தத்­தெ­டுக்க முடி­வெ­டுக்­கும் வளர்ப்­புப் பெற்­றோர், பெற்ற தாய் வந்­த­தும் அனு­ப­விக்­கும் வேத­னையை இது சித்­தி­ரிக்­கிறது.

கிருமி முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தில் இவ்­வி­ரண்­டை­யும் பட­மாக்­கு­வது பெரும் சவா­லாக இருந்­த­போதும் இக்­க­தை­க­ளைச் சொல்­லியே தீர­வேண்­டும் என்ற பேரா­வல் தமக்கு உந்­து­த­லாக இருந்­த­தாக டான் பகிர்ந்­து­கொண்­டார். இவ்­விரு குறும்­ப­டங்­க­ளை­யும் யூடி­யூப் தளத்­தில் கண்டு ரசிக்­க­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!