தமிழார்வத்தால் சிறார் நூல்களுக்கு உயிர்கொடுத்த ஓர் அன்னை

தம் முதல் குழந்தை பிறந்­த­போது, இளஞ்­சி­றார்­கள் தமிழ் கற்­ப­தற்கு முறை­யான தமிழ் புத்­த­கங்­கள் இல்­லா­ததை உண­ரத் தொடங்­கி­னார் திரு­மதி வனிதா வீரா­சாமி. இத­னாலேயே 2017ஆம் ஆண்­டில் வண்­ண­ம­ய­மான, சுவா­ர­சி­ய­மான தமிழ்ப் புத்­த­கங்­களை உரு­வாக்­கும் முயற்­சி­யில் இறங்­கி­னார் அவர்.

கடந்த 14 ஆண்­டு­க­ளாக ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரத்­தில் வாழும் சிங்­கப்­பூ­ர­ரான வனி­தா­விற்கு எட்டு வய­தில் ஒரு மக­னும் ஐந்து வய­தில் ஒரு மகளும் உள்­ள­னர். ‘வாரணம் சில்­ரன்ஸ் புக்ஸ்’ (Vaaranam Children's Books) என்ற நிறு­வ­னத்தை அமைத்து இது­வரை ஆறு நூல்­களை வெளி­யிட்­டுள்­ளார் திரு­மதி வனிதா, 43.

“என் மகன் பிறந்­த­போது அவர் தமிழ்ப் புத்­த­கங்­கள் படிக்­க­வேண்­டும் என்று விரும்­பி­னேன். சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து என் தாயார் சில புத்­த­கங்­களை அனுப்­பி­னார். ஆனால் ஆங்­கி­லப் புத்­த­கங்­களை ஒப்­பி­டும்­போது அவற்­றின் தரம் சற்று குறை­வா­கவே இருந்­தது. சித்­தி­ரங்­கள் கவர்ச்­சி­யாக இல்லை. சொற்­கள் அதி­க­மாக இருந்­தன. குழந்­தை­கள் விரும்­பிப் படிக்­கும் வகை­யில் இல்லை,” என்­றார் இல்­லத்­த­ரசி வனிதா.

நூல்­க­ளுக்­குத் தேவை­யான சொற்­கள், படங்­கள், தக­வல்­கள் போன்­ற­வற்றை ஆராய்ந்து சேக­ரித்­தார் அவர். பின்­னர் சித்­தி­ரக் கலை­ஞர் ஒரு­வரை அணுகி, புத்­த­கத்­திற்­குத் தகுந்த படங்­களை உரு­வாக்­கச் சொன்­னார்.

முதல் நான்கு நூல்­க­ளுக்கு இத்­தாலி நாட்­டைச் சேர்ந்த ஸ்ரீமள்ளி பசானி, பிந்­தைய இரண்டு நூல்­க­ளுக்கு இந்­தி­யா­வைச் சேர்ந்த நவ்யா ராஜூ ஆகிய சித்­தி­ரக் கலை­ஞர்­கள் இந்த முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

பல­முறை திருத்­தம் கண்டு இறுதி­யாக வரும் நூல் படி­வம், அச்­ச­டிப்­ப­வர்­க­ளுக்கு அனுப்­பப்­படும். குழந்­தை­க­ளுக்கு ஏற்­பு­டைய புத்­த­கத்தை எப்­படி உரு­வாக்­க­லாம் என்­பதை ஆராய்ந்து அதற்­கான விலை­யும் கணக்­கி­டப்­படும். வர­வு­செ­ல­வுக்­குத் தகுந்­த­வாறு நூல்­கள் தயா­ரிக்­கப்­பட்டு விற்­கப்­படும்.

“வண்­ணச் சித்­தி­ரங்­கள், பெரிய எழுத்­து­கள் போன்ற அம்­சங்­க­ளால் குழந்­தை­களை இந்த புத்­த­கங்­கள் ஈர்க்­கும். புத்­த­கத்­து­டன் தங்­க­ளைத் தொடர்­பு­ப­டுத்­திக்­கொள்­ளும் வாய்ப்­பை­யும் வழங்­கும். உதா­ர­ணத்­திற்கு, ‘நிறங்­கள்’ என்ற தலைப்­பி­லான எனது நான்­கா­வது புத்­த­கம், தொட்டு உண­ரக்­கூ­டிய விதத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

“அப்­படி ஆடு ஒன்­றின் படம் இருந்­தால் அதற்­குப் பக்­கத்­தில் கம்­பளி போன்று இருக்­கும். அதைத் தொடும்­போது ஆட்­டின் தோல் இப்­ப­டித்­தான் இருக்­கும் என்­பதை சிறார்­கள் உணர்­வர். இது­போன்ற ஆங்­கில புத்­த­கங்­கள் பல உள்­ளன. ஆனால் தமி­ழில் மிக அரிதே என்று நம்­பு­கி­றேன்,” என்­றார் வனிதா.

எளி­தில் கிழி­யாத, திட­மான தாட்­கள் கொண்டு புத்­த­கங்­கள் உரு­வாக்­கப்­ப­டு­வ­து­டன் அதில் பாது­காப்பு அம்­ச­மும் இருப்­பதை உறு­தி­செய்­வ­தாக வனிதா குறிப்­பிட்­டார்.

முதல் நூல் தொகுப்­பில் உயிர் எழுத்­து­க­ளுக்­கும் மெய் எழுத்­து­களுக்­கும் இரண்டு வெவ்­வேறு புத்­த­கங்­கள் வெளி­வந்­தன. ‘பாப்­பா­வின் முதல் தமிழ் புத்­த­கம்’ என்ற தலைப்­பில் அந்த நூல் தொகுப்பு உரு­வாக்­கம் கண்­டது.

கொவிட்-19 கார­ணத்­தால் கடந்த ஆண்டு நூல் தயா­ரிக்­கும் பணி­கள் மெது­வ­டைந்­த­தாக பகிர்ந்து­கொண்­டார் வனிதா. இருப்­பி­னும், சென்ற மாதம் ‘பாட்டி வீடு’, ‘எதிர்ப்­ப­தம்’ ஆகிய நூல்­களை வெளி­யிட்­டார். ‘பாட்டி வீடு’ தம் சிறு வயது அனு­ப­வங்­களை மைய­மா­கக்­கொண்டு எழு­தப்­பட்­ட­தாக வனிதா கூறி­னார்.

“புத்­த­கத்­தின் இறு­திப் பக்­கத்­தில் புத்­த­கத்தை வாசித்த சிறார்­கள், தங்­க­ளின் தாத்தா பாட்­டி­யோடு எடுத்த படங்­களை ஒட்­டிக்­கொள்­ள­லாம். இதுபோன்று புத்­தாக்க முறை­யில் புத்­த­கங்­கள் வழங்­க­வேண்­டும் என்­பதே என் ஆசை,” என்­றார் வனிதா.

ஒவ்­வொரு நூலுக்­கும் 500 பிரதி­கள் என்ற குறைந்த அள­வில் அச்­சிட்டு வரு­வ­தா­க­வும் தேவை ஏற்­பட்­டால் மட்­டுமே கூடு­த­லாக அச்­சி­டு­வ­தா­க­வும் வனிதா தெரி­வித்­தார். இதில் தமக்கு லாபம் ஏது­மில்லை என்­றும் கூறி­னார்.

“பணம் சம்­பா­திப்­பது என் நோக்­க­மல்ல. குழந்­தை­க­ளி­டையே தமிழ் ஆர்­வத்தை வளர்க்­க­வேண்­டும். தர­மான புத்­த­கங்­கள் அதி­கம் இல்லை என்­றால் எப்­படி சிறு­வர்­களி­டம் தமிழ் ஆர்­வத்­தைத் தூண்ட முடி­யும்? ஆகை­யால், என் குழந்­தை­க­ளுக்­கும் மற்ற சிறார்­க­ளுக்­கும் தர­மான நூல்­க­ளைத் தயா­ரித்து வழங்­கு­வதே என் முக்­கிய நோக்­க­மாக இருக்­கிறது,” என்று வலி­யுறுத்­தி­னார் வனிதா.

இந்­திய மர­பு­டைமை நிலை­யம், ஆசிய நாக­ரிக அரும்­பொ­ரு­ள­கம் ஆகிய இடங்­க­ளி­லுள்ள கடை­களி­லும் புத்­த­கங்­கள் விற்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வி­டங்­களில் தற்­போது முதல் நான்கு புத்­த­கங்­கள் கிடைக்­கும். வரும் செவ்­வாய்க்­கி­ழமை முதல் ஆறு புத்­த­கங்­களும் விற்­கப்­படும்.

தேசிய நூல­கங்­களில் தற்­போது வனி­தா­வின் முதல் நான்கு நூல்­கள் இர­வ­லுக்­குக் கிடைக்­கும். கூடிய விரை­வில் மற்ற இரண்டு நூல்­களும் சேர்க்­கப்­படும் என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் வனிதா.

மற்ற நாடு­களில் உள்­ளோர், இனை­யம்­ வ­ழி­யாக இந்த நூல்­களை வாங்­கு­கின்­ற­னர்.

அனைத்து வாரணம் நூல்­களை tamilwithlovesg.myshopify.com என்ற இணைப்­பில் சிங்­கப்­பூ­ரர்­கள் வாங்­கிக்­கொள்­ள­லாம். வர்­ணம் நூல்­கள் குறித்த முழு விவ­ரங்­களுக்கு www.vaaranambooks.com.au/books என்ற இணைய முக­வ­ரியை அணு­க­லாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!