யோகா மூலம் கின்னஸ் சாதனை படைத்த வெளிநாட்டு ஊழியர்

கடந்த ஆண்­டின் நோய்ப்­ ப­ர­வல் முறி­ய­டிப்­புக்­கான கால­கட்­டத்­தின்­போது வீட்­டில் இருந்த வெங்­க­ட­சாமி ஜெய­சீ­ல­னின் எண்­ணங்­கள், ஊழி­யர் தங்­கும் விடு­தி­களில் அடைப்­பட்­டி­ருந்த ஊழி­யர்­க­ளைப் பற்­றியே இருந்­தன. ஊழி­யர்­க­ளின் மன­ந­லம் குறித்த இவ­ரது அக்­க­றை­தான் இறு­தி­யில் இவ­ருக்கு யோகா­வில் கின்­னஸ் சாத­னைக்கு வழி­வ­குத்­தது.

‘விருட்­சா­ச­னம்’ என்ற ஆச­னத்­தில் திரு ஜெய­சீ­லன், 39, கின்­னஸ் சாத­னைக்­கான நான்கு சாட்­சி­களின் முன்­னி­லை­யில் கடந்த டிசம்­பர் மாதம் 4ஆம் தேதி­யன்று சாத­னையை நிகழ்த்­தி­னார்.

இந்த ஆச­னத்­தில் இவர் 1 மணி நேரம் 12 நிமி­டங்­கள் 59.84 வினா­டி­கள் நின்று சாத­னை படைத்­ திருப்­ப­தாக அந்­நி­கழ்­வில் பதி­வாகி­உள்­ளது.

இதற்­காக இவர் நவம்­பர் மாதம் விரைவு விண்­ணப்ப முறை­யின்­கீழ் (Fast track) இந்­தச் சாதனை­யைப் படைத்­துக் காட்ட விண்­ணப்­பித்­தார்.

நான்கு சுயேச்சை சாட்­சி­களில் ஒவ்­வொ­ரு­வ­ரும் குறிப்­பிட்ட துறை­யைச் சேர்ந்­த­வர்­கள் என்று அந்­தச் சாட்­சி­களில் ஒரு­வ­ரான யோகா பயிற்­று­விப்­பா­ளர் ரீத்தா ஜெய்ன், 42, தெரி­வித்­தார்.

“ஒரு வழக்­க­றி­ஞர், இரண்டு விளை­யாட்­டுப் பயிற்­று­விப்­பா­ளர்­களு­டன் நான் இவ­ரது சாத­னைக்கு சாட்­சி­யாக இருந்­தேன்,” என்று அவர் கூறி­னார்.

வியாசா யோகா நிலை­யத்­தில் இந்­தச் சாத­னையை ஆர்­வத்­து­டன் நிகழ்த்­தத் தொடங்­கிய திரு ஜெய­சீ­லன் அதனை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றி­ய­போது அங்­கி­ருந்த அனை­வ­ருமே மகிழ்ச்­சி­யு­டன் கொண்­டா­டி­ய­தாக திரு­வாட்டி ஜெய்ன் கூறி­னார்.

“திரு ஜெய­சீ­லன் ஆச­னத்தை தடு­மாற்­ற­மின்றி செய்­தார். அவர் இறு­தி­யில் ஆச­னத்­தைக் கைவிட்டு தரை­யில் விழும்­வரை நானும் மற்­றொ­ரு­வ­ரும் நேரத்­தைக் கண்­காணித்­துப் பதிவு செய்­தோம்,” என்று சாத­னை­க­ளைக் கண்ட நான்கு சாட்­சி­களில் ஒரு­வ­ரான திரு சுமித் சட்­டர்ஜி, 40, தெரி­வித்­தார்.

எங்­க­ளது கையொப்­பங்­க­ளைக் கொண்ட படி­வங்­களும் சாதனை நிகழ்ந்­த­தைக் காட்­டும் காணொ­ளி­யும் கின்­னஸ் அமைப்­பி­டம் அஞ்­சல் வழி­யாக அனுப்­பப்­பட்­டது,” என்று குளோ­பல் இந்­தி­யன் அனைத்­து­ல­கப் பள்­ளி­யைச் சேர்ந்த உடற்­ப­யிற்சி ஆசி­ரி­ய­ரான திரு சட்­டர்ஜி கூறி­னார்.

விரு­து­ந­கர் மாவட்­டத்­தி­லுள்ள ஆமத்­தூ­ரைச் சேர்ந்த திரு ஜெய­சீ­லன், சிங்­கப்­பூ­ரில் 13 ஆண்­டு­களாக கட்­டு­மா­னப் பாது­காப்பு அதி­கா­ரி­யாக வேலை செய்து வரு­கி­றார்.

கிரு­மிப் ­ப­ர­வல் நேரத்­தில் மன உளைச்­ச­லால் ஊழி­யர் தங்­கு விடுதி­களில் சிலர் உயிரை மாய்த்­துக்­கொள்­ளும் சம்­ப­வங்­க­ளைப் பற்றி கேள்­விப்­பட்ட திரு ஜெய­சீலன், ஒரு சாதனையைப் படைத்து மன அமைதி மற்­றும் உடல் ஆரோக்­கி­யத்­தைக் கட்­டிக்­காப்­பது குறித்த விழிப்­பு­ணர்வை அதி­க­ரிக்க விரும்­பி­ய­தா­கத் தெரி­வித்­தார்.

யோகா­சன ஆசி­ரி­ய­ரான தமது அண்­ண­ன் வி. ஜெயக்­கு­மாரிடம் கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளா­கக் கற்று வரு­கி­றார். இதற்கு முன்­ன­தாக யோகா­ச­னக் கலை­யின் மீது அதிக ஆர்­வ­மில்லை என்று கூறிய ஜெய­சீ­ல­னின், இரு­பது ஆண்­டு­களாக இதில் அனு­ப­வ­முள்ள தமது அண்­ண­னால் இதற்குள் ஈர்க்­கப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

ஜெய­சீ­ல­னுக்கு கிட்­டத்­தட்ட இரு­பது ஆச­னங்­கள் தெரி­யும். இச்சாத­னை­யைப் படைப்­ப­தற்கு முன்­னர் கிட்­டத்­தட்ட ஆறு மாதங்­கள் மட்­டும் விருட்­சா­ச­னத்­தைப் பயிற்சி செய்து படிப்­ப­டி­யாக அதற்­கான நேரத்­தைக் கூட்­டிக்­கொண்டு வந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

உட­லும் மன­தும் மூச்­சும் ஒருங்­கி­ணைக்­கும் யோகா­வைப் பழ­கு­வது தொடக்­கத்­தில் சிர­ம­மாக இருந்­தா­லும் சரி­யா­கச் செய்­யும்­போது வலி ஏற்­ப­டாது என்­கி­றார் திரு ஜெய­சீ­லன். இத­னால் தமது உடற்­ப­யிற்­சி­க­ளுக்­கான தேவை யோகா­வி­லேயே பூர்த்­தி­யா­வ­தாக அவர் கூறி­னார்.

திரு ஜெய­சீ­ல­னின் சாதனை குறித்து மகிழ்ச்­சி­யும் பெரு­மை­யும் அடை­வ­தா­க அவ­ரது அண்­ணன் தெரி­வித்­தார்.

தமது கண­வ­ரின் சாத­னை­யால் யோகா பற்­றிய விழிப்­பு­ணர்வு அதி­க­ரித்து மேலும் பலர் அதனை தங்­கள் வாழ்க்கை முறை­யு­டன் இணைத்­துக்­கொள்ள விரும்­பு­வ­தாக ஜெய­சீ­ல­னின் மனைவி திரு­மதி கீதாஞ்­சலி தமி­ழ­கத்­தி­லி­ருந்து தொலை­பேசி வழி­யா­கத் தெரிவித் தார்.

“யோகா செய்­த பின்­னர் எனக்கு இருந்த சோம்­பல் வெகு­வா­கக் குறைந்துள்ளது. இப்­போது நான் சீரான மன­நி­லை­யு­ட­னும் நல்ல ஒழுக்­கத்­து­ட­னும் இருக்­கி­றேன். முப்­பது வய­தில் இருந்­த­தைக் காட்­டி­லும் நான் இப்­போது இன்­னும் இள­மை­யாக இருப்­பதாக உணர்­கிறேன்,” என்றார் ஏழு வயது மக­ளுக்­குத் தந்­தை­யான திரு ஜெய­சீ­லன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!