பள்ளிவாசல் புதுப்பிப்புப் பணிகளுக்கு $50,000 நன்கொடை வழங்கிய கூத்தாநல்லூர் சங்கம்

வர­லாற்று சிறப்­பு­வாய்ந்த பென்­கூலன் பள்­ளி­வா­ச­லில் புதுப்­பிப்­புப் பணி­கள் நடைபெற்று­வ­ரும் வேளையில் சமூ­கத்­தி­ட­மி­ருந்து நன்­கொ­டை­கள் திரட்­டப்­பட்டு வரு­கின்­றன. அந்த வரி­சை­யில் கூத்­தா­நல்லூர் சங்­கம் (சிங்­கப்­பூர்), அதன் உறுப்­பி­னர்­க­ளி­டம் வசூ­லித்து பள்ளி­வாசல் புதுப்­பிப்­புப் பணி­களுக்­காக $50,000 நன்­கொ­டை­வழங்­கி­யுள்­ளது.

அந்த நன்­கொ­டைக்­கான காசோ­லை­யைச் சென்ற மாதம் 24ஆம் தேதி அப்­துல் கஃபூர் பள்­ளி­வா­ச­லில் கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தின் தலை­வர் சடை­யன் அப்­துல் அலீம், செய­லா­ளர் முஹம்­மது ‌‌‌ஷாஹுல் ஹமீது இரு­வ­ரும் பென்­கூ­லன் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­தி­ன­ரி­டம் வழங்­கி­னர்.

பென்­கூ­லன் பள்­ளி­வா­சல் நிர்­வா­கக் குழுத் தலை­வர் ஹாஜி எம்.ஒய்.முஹம்­மது ரஃபீக், துணைத் தலை­வர் ஹாஜி எஸ்.எம்.அப்­துல் ஜலீல், சிங்கப்பூர் இஸ்­லா­மிய சமய மன்ற தெற்குப் பள்­ளி­வா­சல் குழு­மத்­தின் பொது நிர்­வாகி ஹாஜி பைமான் சுபங்­காட் ஆகி­யோ­ரி­டம் காசோலை வழங்­கப்­பட்­டது.

“கொவிட்-19 நோய்ப் பர­வல் ஏற்­ப­டுத்­திய இக்­கட்­டான சூழ­லில் பலரும் பொரு­ளா­தார ரீதி­யில் நெருக்­க­டி­யைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் பல உறுப்­பி­னர்­கள் இந்த நிதி திரட்­டுக்கு மன­முவந்து ஆத­ர­வ­ளித்­த­னர்,” என்று பெரு­மி­தம் கொண்­டார் கூத்­தா­நல்லூர் சங்­கத்­தின் செய­லா­ளர் முஹம்­மது ‌‌‌ஷாஹுல் ஹமீது.

“இன்­னும் தொடர்ந்து உறுப்­பினர்­கள் பள்­ளி­வா­சல் புதுப்­பிப்­புக்கு நன்­கொடை வழங்க ஆர்­வம் கொண்­டி­ருப்­ப­தால் சங்­கம் தொடர்ச்­சி­யாக நிதி­யைத் திரட்டி பென்­கூலன் பள்­ளி­வா­ச­லின் பணி­களுக்கு உதவ நோக்­கம் கொண்டு உள்­ளது,” என்­றும் அவர் சொன்­னார்.

தமி­ழ­கத்­தின் கூத்­தா­நல்­லூரைப் பூர்­வீ­க­மா­கக் கொண்ட கிட்­டத்­தட்ட 300 குடும்­பங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் அங்­கம் வகிக்­கும் அந்­தச் சங்­கம், 1996ஆம் ஆண்டு கூத்­தா­நல்­லூர் குடும்ப மன்­றம் என்­ற பெய­ரில் நிறு­வப்­பட்­டது. 2004ல் கூத்­தா­நல்­லூர் சங்­கம் என்று அது பெயர் மாற்­றம் கண்­டது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளா­க­வும் மற்ற சிலர் நிரந்­த­ர­வா­சி­க­ளா­க­வும் சிங்­கப்­பூ­ரில் வசித்து வருபவர்­களை ஒன்­றி­ணைக்­கும் முயற்­சி­யில் சங்­கம் பல நட­வ­டிக்­கை­களை ஏற்­பாடு செய்து­ வ­ரு­கிறது.

குடும்­ப­ தி­னம், ரத்த நன்­கொடை, சுகா­தார முகாம்­கள் போன்ற நிகழ்ச்­சி­க­ளைத் தங்­கள் உறுப்­பி­னர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது­டன் இதர சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் அர­வ­ணைத்து நிகழ்ச்­சி­களைச் சங்­கம் நடத்தி வரு­கிறது.

பள்­ளி­வா­சல் புதுப்­பிப்­புக்­காக நன்­கொடை வழங்­கிய கூத்­தா­நல்லூர் சங்­கத்­திற்கு நன்றி நல்­கி­னார் ஹாஜி ரஃபீக்.

“$4 மில்­லி­யன் செல­வில் பென்­கூ­லன் பள்­ளி­வா­சலில் புதுப்­பிப்­புப் பணி­கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்­தப் பணி­க­ளுக்கு மேலும் $1.5 மில்­லி­யன் தேவைப்­ப­டு­கிறது.

“பொது­மக்­க­ளின் ஆத­ரவை எதிர்­பார்த்து இருக்­கும் எங்­க­ளுக்கு இந்தத் தரு­ணத்­தில் கூத்­தா­நல்­லூர் சங்­கம் வழங்­கி­யுள்ள நன்­கொடை பேரு­த­வி­யாக இருக்­கும். அதற்கு கூத்­தா­நல்­லூர் சங்­கத்­தின் தலை­வர், செய­லா­ளர், உறுப்­பி­னர்­களுக்கு பென்கூலன் பள்­ளி­வா­சல் நிர்­வாகக் குழு­வி­னர் நன்­றி­ தெரி­வித்­துக்­கொள்­கி­றோம்.

“இதேபோல மேலும் பல அமைப்பு­களும் பொது­மக்­களும் தங்­க­ளது ஆத­ரவை வழங்­கு­மாறு தாழ்­மை­யு­டன் கேட்­டுக்­கொள்­கிறோம்,” என்று கூறி­னார் ஹாஜி ரஃபீக்.

தொழு­கைக்­கான கூடுதல் இடங்­கள், இதர வச­தி­க­ளு­டன் இவ்­வாண்டு இறு­திக்­குள் புதுப்பிப்புப் பணி­கள் முடி­வ­டை­யும் என்று எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பென்­கூ­லன் பள்­ளி­வா­சல் புதுப்­பிப்­புப் பணி­க­ளுக்கு நன்­கொடை வழங்க விரும்­பு­வோர் https://masjidbencoolen.org/donate/ எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!