தமிழ் ‘யுத்தம்’ புரிந்த இளையர்கள்

இந்து இளங்­கோ­வன்

 

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை கடந்த சில ஆண்டு­க­ளாக தமிழ்­மொழி மாதத்­தில் இளை­யர்­க­ளுக்­காக தமிழ் சொல்­வள மேம்­பாட்­டுப் போட்­டி­களை நடத்தி வரு­கிறது.

2016ஆம் ஆண்டு தொடக்­கக்­கல்­லூரி, பல­து­றைத் தொழிற்­கல்லூரி மாண­வர்­க­ளுக்­காக மட்டும் ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'யுத்தம்' என்­னும் இந்­தப் போட்டி, இவ்­வாண்டு விரி­வு­ப­டுத்­தப்­பட்டு அனைத்து உயர் கல்வி நிலை­யங்­களைச் சேர்ந்த மாண­வர்­களும் கலந்­து­கொள்ள அனு­ம­தித்­தது.

நேற்று காலை இணை­யம்­வழி நடை­பெற்ற 'யுத்­தம்' நிகழ்ச்­சி­யில், சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கத்­தின் (சிண்டா) தலைமை நிர்­வாக அதி­கா­ரி­யான திரு அன்­பரசு ராஜேந்­தி­ரன் சிறப்பு விருந்தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

போட்­டி­யில் தொடக்­கக் கல்­லூ­ரி­கள், பல­து­றைத் தொழிற்­கல்லூரிகள், தொழில்­நுட்­பக் கல்வி கழ­கங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­களுக்­கான பிரி­வும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான பிரி­வும் இடம்­பெற்­றன.

பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு முந்­தைய நிலை­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான பிரி­வில் "கண்­டு­பிடி, கண்­டு­பிடி!", "சொல்­வி­ளை­யாட்டு!" எனும் போட்­டி­களும் பல்­கலைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கான பிரி­வில் "இங்­கி­லிஷ் பேசி­னா­லும் தமி­ழன்டா!", "வேற மாறி, வேற மாறி!" எனும் போட்­டி­களும் நடத்­தப்­பட்­டன.

புது­மை­யான போட்­டி­கள், பங்கு­பெற்­ற­வர்­களை மட்­டும் அல்ல பார்­வை­யா­ளர்­க­ளை­யும் வெகு­வாக கவர்ந்­தது. தெரி­யாத, புரி­யாத தமிழ்ப் பாடல் வரி­க­ளின் அர்த்­தத்­தைக் கண்­டு­பி­டிக்­கும் 'வேற மாறி, வேற மாறி!' என்­னும் போட்டி அங்கம் உற்­சா­க­மூட்­டும் வகை­யில் அமைந்­தது.

முழுக்க முழுக்க இணை­யத்­தில் நடத்­தப்­பட்ட இந்­தப் போட்­டியை பார்­வை­யா­ளர்­கள் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேர­வை­யின் ஃபேஸ்புக் பக்­கத்­தில் கண்டு­களித்­த­னர். தொழில்­நுட்­பச் சவால்­களுக்கு மத்­தி­யில் மிக சுமூ­க­மாக நடத்­தப்­பட்ட இந்­தப் போட்டி, இளை­யர்­க­ளி­டையே தமிழ்­மொழி மீதான ஆர்­வத்தை அதி­க­ரிக்­கும் நோக்­கத்­தைக் கொண்­டது.

பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு முந்­தைய நிலை­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்­கான பிரி­வில் செயின்ட் ஆண்ட்­ரூஸ் தொடக்­கக்­கல்­லூரி மாண­வர்­கள் வெற்றி பெற்­ற­னர். பல்­க­லைக்­க­ழகப் பிரி­வில் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் முதல் பரிசை தட்­டிச் சென்­ற­னர்.

இளை­யர்­க­ளுக்­காக இளை­யர்­கள் ஏற்­பாடு செய்­தி­ருந்த இந்­தச் சொல்­வளப் போட்டி எழுத்து, பேச்சுத் தமி­ழில் மாண­வர்­க­ளுக்­குள்ள திறனை வெளிப்­ப­டுத்த நல்­ல­தொரு தள­மாக அமைந்­தது.

பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களிடம் மொழி ஆர்­வம் தொடர்ந்து இ­ருக்க வேண்­டும் என்ற நோக்கத்தில் 'யுத்தம் 2021' போட்­டியை சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்ப் பேரவை நடத்­தி­யது," என ஏற்­பாட்டுக் குழு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!