வாழ்க்கையோடு பொருந்தும் திருக்குறளைப் போற்றிய விழா

அஷ்­வினி செல்­வ­ராஜ்

 

தமிழ்­மொழி பண்­பாட்­டுக் கழ­கத்­தின் ஏற்­பாட்­டில் ஆண்­டு­தோ­றும் நடை­பெ­றும் திருக்­கு­றள் விழா, இந்த வரு­டம் இணை­யம் வழி முப்­பத்­தைந்­தா­வது ஆண்­டாக நடந்­தே­றி­யது.

விழாவில் வர­வேற்­பு­ரை ஆற்­றிய திரு மு. ஹரி­கி­ருஷ்­ணன், திருக்­கு­றள் விழா மூலம் தொடர்ச்­சி­யாக திருக்­கு­றள் போட்­டி­களை மாண­வர்­க­ளுக்கு ஏற்­பாடு செய்து வரு­வ­தன் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி, விழா­விற்கு வருகை தந்­தி­ருந்த அனை­வ­ருக்­கும் தனது மன­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்­டார்.

விழா­விற்கு சிறப்பு விருந்­தி­ன­ராக வருகை தந்­தி­ருந்த முன்­னாள் நிய­மன நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு இரா. தின­க­ரன், சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் வர­லாற்றை மட்­டு­மல்ல, நாட்­டின் தற்­கால அர­சி­யல் கொள்­கை­க­ளை­யும் நடப்­பு­க­ளை­யும் திருக்­கு­ற­ளு­டன் இணைத்து சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.

கிட்­டத்­தட்ட முப்­ப­துக்­கும் மேற்­பட்ட மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்ள உல­கப் பொது­ம­றை­யின் சிறப்­பு­க­ளைச் சுட்­டிக்­காட்டி, ஒவ்­வொரு கால­கட்­டத்­தி­லும் சிங்­கப்­பூ­ரின் அர­சி­யல் தலை­வர்­கள் நடை­மு­றைப்­ப­டுத்­திய அர­சி­யல் கொள்­கை­கள் குறித்­தும் அவை எவ்­வாறு வள்­ளு­வர் இயற்­றிய குறள்­க­ளு­டன் பொருந்தி போகின்­றன என்­பது குறித்­தும் திரு தின­க­ரன் விளக்­கி­னார்.

அத­னைத் தொடர்ந்து, நான்கு பள்ளி மாண­வர்­க­ளின் கூட்டு இயக்­கத்­தில் உரு­வான 'குறளே தீர்வு' என்ற குறும்­ப­டம் திரை­யி­டப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் உள்ள தமிழ்க் குடும்­பங்­களில் ஏற்­படும் அன்­றாட பிரச்­சி­னை­க­ளுக்கு திருக்­கு­றள் வழி வெவ்­வேறு கதா­பாத்­தி­ரங்­கள் எவ்­வாறு தீர்வு காண்­கி­றார்­கள் எனும் கருப்­பொ­ரு­ளைக் கொண்டு குறும்­ப­டம் அமைந்­தி­ருந்­தது.

ஆண்­டு­தோ­றும் விழா­வில் வழங்­கப்­படும் திரு­வள்­ளு­வர் விருது, தேசிய கல்­விக் கழ­கத்­தின் ஆசிய மொழி­கள் மற்­றும் பண்­பா­டு­கள் துறை­யில் இணைப் பேரா­சி­ரி­ய­ரா­க­வும் அத்­து­றை­யின் தமிழ்­மொழி பண்­பாட்­டுப் பிரி­வின் துணைத் தலை­வ­ரா­க­வும் உள்ள முனை­வர் சீதா­லட்­சு­மிக்கு இவ்­வாண்டு வழங்­கப்­பட்­டது.

கல்­வி­யி­யல் மற்­றும் படைப்­பி­லக்­கி­யம் சார்ந்த பல ஆய்­வு­களை மேற்­கொண்ட முனை­வர் சீதா­லட்­சுமி, தாய்­மொ­ழி­க­ளின் முக்­கி­யத்­து­வத்தை எடுத்­து­ரைத்­த­து­டன் அவற்­றைச் சிறு வய­தி­லேயே பிள்­ளை­க­ளுக்­குக் கற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் வலி­யு­றுத்­தி­னார்.

விழா­வின் போட்­டி­களில் கலந்­து­கொண்ட மாண­வர்­க­ளுக்­குப் பரி­சு­கள் வழங்­கப்­பட்­ட­தோடு விழா­வின் சிறப்பு பேச்­சா­ள­ரான முனை­வர் மன்னை இரா­ஜ­கோ­பா­லன், 'முப்­பா­லில் மூன்­றாம் பால்' என்ற தலைப்­பில் சிறப்­பு­ரை­யாற்றி விழாவை நிறைவு செய்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!