‘தாய்மை என்பது ஓர் இனிமையான பயணம்’

அம்மா என்­ப­வர், பிள்­ளை­க­ளின் வாழ்க்­கை­யில் பல­த­ரப்­பட்ட பாத்­திரங்­களை ஏற்­ப­வர். பிள்­ளை­கள் வளர வளர அதற்­கேற்ற சுதந்­தி­ரத்­தை­யும் முடி­வெ­டுக்­கக்­கூ­டிய அதி­கா­ரத்­தை­யும் அவர்­க­ளுக்கு வழங்­கு­வதை அறிந்­த­வர் என்று நம்­பு­கிறார் தன்­மு­னைப்பு பேச்­சா­ளர் திரு­மதி சரோ­ஜினி பத்­ம­நா­தன்.

1970களில் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்­குத் தம் அம்மா, சகோ­தர சகோ­த­ரி­க­ளு­டன் கப்­ப­லில் வந்த அனு­ப­வத்தை அவர் நினைவு­கூர்ந்­த­போது, “கப்­பல் பய­ணத்­தால் மயக்­கம், வாந்­தி­யால் அவ­திப்­பட்ட அம்­மா­வுக்கு நாங்­கள் உணவு கொண்டு சென்­றோம். கப்­பல் செயின்ட் ஜான்ஸ் தீவில் நின்­றது. எங்­கள் பக்­கத்­தில் சிறு பிள்­ளை­கள் அமர்ந்­தி­ருந்­த­னர். அந்த பிள்­ளை­க­ளுக்­குப் பசிக்­கும் என்று கூறி உடனே தம் உண­வில் கொஞ்­சம் அப்­பிள்­ளை­க­ளுக்­குக் கொடுக்­கு­மாறு கேட்­டார்.

“நான் பொறுப்­பு­ணர்­வு­டன் பல்­வேறு சமூ­கப் பணி­களில் ஈடு­பட்டு வரு­வ­தற்­குக் கார­ண­மா­ன­வர் என் தாயார்­தான்,” என்று தெரி­வித்­தார் திரு­மதி சரோ­ஜினி.

திரு­மதி சரோ­ஜி­னிக்­குத் திரு­ம­ண­மாகி 30 ஆண்­டு­கள் ஆகின்­றன. அவ­ருக்கு உமா, பாமா, ஹேமா ஆகிய மூன்று மகள்­கள் உள்­ள­னர்.

பெற்­றோர்­கள், தாய்­மார்­க­ளுக்­குப் பிள்­ளை­வ­ளர்ப்­புக்­கான ஆலோ­சனை வழங்­கும் இவர், மூன்று மகள்­களை வளர்த்த அனு­ப­வத்­தில் நிறைய கற்­றுக்­கொண்­ட­தாக தெரி­வித்­தார். பிள்­ளை­கள் பதின்ம வய­தாக இருக்­கும்­பொ­ழுது எங்கு தவ­றான பாதை­யில் சென்­று­வி­டு­வார்­களோ என்ற அச்­சம், வளர்ந்த பின் வெளி­நா­டு­க­ளுக்­குப் படிக்­கச் தம்­மை­விட்டு செல்­லும்­போது ஏற்­படும் பயம் இவை­யா­வும் திரு­மதி சரோ­ஜினி அனு­ப­வித்த சவால்­கள் ஆ­கும்.

தமது அனு­ப­வத்­தில், பிள்­ளை­களு­டன் நல்­லு­றவை வளர்த்­துக்­கொள்­வது அவ­சி­யம் என்­கி­றார் அவர். அது பல நேரத்­தில் கடி­ன­மான ஒன்­றாக இருக்­கும். ஆனால் அவர்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெற்று­விட்­டால், பின்பு அவர்­களே பெற்­றோ­ரு­டன் மனம்­விட்டு பேசத் தொடங்­கு­வர் என்­பது அவ­ரது கருத்து.

“தாய்மை ஓர் இனி­மை­யான பய­ணம். ஒரு­வர் வெற்­றி­ய­டை­யும்­பொ­ழுது அவ்­வெற்­றி­யைத் தொடர்­வ­தற்கு வேறு யாரும் இல்­லா­மல் போனால் அது வெற்றி ஆகாது. நாம் சாத­னை­கள் பல புரிந்­தி­ருந்­தா­லும், நல்ல மனி­தர்­களாக வாழ்ந்­தி­ருந்­தா­லும், நம்­முடைய பிள்­ளை­க­ளுக்­கும் அதே பண்­பு­கள், ஒழுக்­கம் ஆகி­ய­வற்றை ஊட்டி வளர்ப்­பது அவ­சி­யம்,” என்று சொன்­னார் திரு­மதி சரோ­ஜினி.

செய்தி: இந்து இளங்­கோ­வன்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!