புகழாளர்கள் தோள்சேர்ந்த பூமாலைகளைத் தொடுத்தவர்

சிங்­கப்­பூ­ரில் நடந்த பொதுத் தேர்­தலின்­போது முன்­னாள் பிர­த­மர் அம­ரர் லீ குவான் இயூவிற்கு பூமாலை கட்­டித் தரும் வாய்ப்பு திரு ர.ஜெய­செல்­வத்­திற்குக் கிடைத்­தது. 2002ஆம் ஆண்­டில் ஒரு திறப்புவிழாவிற்காக முன்­னாள் பிர­த­மர் கோ சோக் டோங்­கிற்கான மாலை­யை­யும் இவர்­தான் கட்­டி­னார். தற்­போ­தைய பிர­த­மர் திரு லீ சியன் லூங்­கை­யும் சேர்த்து மூன்று பிர­த­மர்­க­ளுக்கு மாலை கட்­டிய பெருமை, 56 வய­தான திரு ஜெய­செல்­வத்­தைச் சேரும்.

சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்த 1965ஆம் ஆண்­டில் பிறந்­த­வர் திரு ஜெய­செல்­வம். கைத்­தொ­ழில்­கள் செழித்த கால­கட்­டம் அது. தாம் இளை­ஞ­ராக இருந்­த­போது, ‘ஜோதி ஸ்டோர்’ பூக்­க­டை­யின் செயல்­பா­டு­களை நிர்­வ­கித்த திரு மு.பசு­பதி இவருக்கு அறி­மு­க­மா­னார்.

வார இறு­தி­நாள்களில் ஓய்வு நேரத்­தில் கடை­யில் வந்து உத­வு­மாறு தம்­மி­டம் கேட்­டுக்­கொண்­ட­தால், அந்தக் க­டை­யில் பூமாலை கட்­டும் உத்­தி­களைக் கற்­றுக்­கொண்­டார் திரு ஜெய­செல்­வம். 1980களில் முந்­தைய தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பயின்று இயந்­திர வல்­லு­ந­ராக ஒரு நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றத் தொடங்­கி­னார்.

இவ­ருக்கு 1994ஆம் ஆண்­டில் திரு­ம­ண­மா­னது. வாழ்க்­கை­யில் மேலும் முன்­னேற்­றம் காண, தம் மனைவி ப.அனு­‌‌ஷியா பெய­ரில் டன்­லப் சாலை­யில் பூக்­கடை ஒன்றை ஆரம்­பித்­தார்.

தாம் தொடங்­கி­ய­போது லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் பத்துக்கும் குறை­வான பூக்­க­டை­களே செயல்­பட்டு வந்­த­தாக திரு ஜெய­செல்­வம் குறிப்­பிட்­டார். நாளாவட்டத்தில் பல பூக்­கடை­கள் லிட்­டில் இந்­தியா வட்­டா­ரத்­தில் தொடங்கப்பட்டு, போட்­டித்­தன்மை அதி­க­ரித்­து­விட்­ட­தாக இவர் கூறி­னார்.

ஒருபக்­கம் கடை வாட­கை­யும் உயர, 2000ஆம் ஆண்­டில் அப்­பர் டிக்­சன் சாலைக்­குக் கடை இடம்­ மா­றி­யது. கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக வீரா­சாமி சாலை­யில் அனு­‌‌ஷியா பூக்­கடை இயங்கி வரு­கிறது.

1990களில் தொழில்­நுட்ப வளர்ச்சி அதி­கம் இல்­லாத நிலை­யில், வாடிக்­கை­யா­ள­ர்களின் பரிந்­து­ரையை நம்­பித்­தான் பூக்­க­டை­க­ளுக்கு வியா­பா­ரம் நடந்து வந்­தது.

பிர­த­மர்­க­ளைத் தவிர மற்­றும் சில பிர­ப­லங்­க­ளின் தோள்­மீ­தும் இவர் கட்­டிய மாலை அணி­விக்­கப்­பட்­டது.

“ஒலிம்­பிக் போட்­டி­யில் தங்­கப் பதக்­கம் வென்ற ஜோசஃப் ஸ்கூ­லிங், சாங்கி விமான நிலை­யத்தை அடைந்­த­போது அவரை வர­வேற்­ப­தற்­காக நான் தயா­ரித்த ஆர்க்­கிட் மாலை அவ­ருக்­குச் சூட்­டப்­பட்­டது. அது மறக்க முடி­யாத ஒரு தரு­ணம். அவர் தங்­கப் பதக்­கத்தை வென்­றி­ருந்­த­தால், பூமாலை­யில் தங்க நாடாக்­க­ளை­யும் சேர்த்­துக்­கொண்­டேன்,” என்று ஐந்து­ ஆண்டுகளுக்குமுன் நடந்­ததை நினைவு­கூர்ந்­தார் திரு ஜெய­செல்­வம்.

அண்­மை­யில் தோக்­கி­யோ­வில் நடை­பெற்ற பாரா­லிம்­பிக் போட்­டி­களில் ஒன்­றுக்கு இரண்­டா­கத் தங்­கப் பதக்­கம் வென்ற சிங்­கப்­பூ­ர் நீச்­சல் வீராங்­கனை யிப் பின் சியூ­வுக்­கும் அதே­போல் இவர்­தான் மாலை கட்­டி­னார்.

இக்­கா­லத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு ஏற்ப, 2018ஆம் ஆண்­டில் மின்­வர்த்­தக இணை­யத்­த­ளம் ஒன்றை இவர் தம் மூத்த மகன் 26 வயது ஜெய­கிரி­‌‌ஷ­னின் உத­வி­யு­டன் தொடங்­கி­னார்.

கடந்த சில ஆண்­டு­களாகத் திரு­மண மாலை­களைத் தயா­ரிப்­ப­தில் இவர்­கள் கவ­னம் செலுத்தி வருகின்றனர்.

‘ஃபேஸ்புக்’, ‘இன்ஸ்­ட­கி­ராம்’ போன்ற சமூக வலைத்­த­ளங்­களில் கடை­யின் சேவை­களை விளம்­ப­ரப்­படுத்த இளைய மகன் ஜெய­கண்­ணன் பங்­காற்றி வரு­கி­றார்.

வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் முத­லில் மின்­வர்த்­த­கம் தொடர்­பில் நல்ல வர­வேற்பு கிடைக்­க­வில்லை என்று குறிப்­பிட்ட திரு ஜெய­செல்­வம், கொவிட்-19 கால­கட்­டத்­தில் வாடிக்­கை­யா­ளர்­கள் மின்வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும் கட்­டா­யச் ­சூழலுக்குத் தள்­ளப்­பட, தம் வியா­பா­ரம் பன்­ம­டங்கு பெரு­கி­யது என்­றார். ஆனால் பூமாலை கட்­டு­வ­தற்­குத் தாம் ஒரு­வர் மட்­டுமே இருப்­ப­தால், ஒரு குறிப்­பிட்ட எண்­ணிக்கை வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவையை மட்­டுமே தம்மால் பூர்த்தி செய்ய முடி­கின்­றது என்­றார்.

“இத்­து­றை­யில் பூமாலை கட்­டும் திறன் கொண்ட ஊழி­யர்­களை வேலைக்கு எடுப்­பது பெரும் சவால்.

“இந்­திய சமூ­கத்­தி­னர் இந்த கைத்­தொ­ழி­லைக் கற்று, பூக்­க­டை­யைத் தொடங்கி, தாங்­களும் வியா­பா­ரத்­தில் வெற்றி காண்­பதே என் ஆசை­யா­கும். கலை­யைக் கற்­றுத்­தர நான் தயார்,” என்றார் திரு ஜெய­செல்­வம்.

மூன்று வாரங்களுக்கு நடை­பெ­றும் ‘மை கம்யூ­னிட்டி ஃபெஸ்டி­வல்’ எனும் மர­பு­டைமை விழா­வில் பொது­மக்­க­ளுக்கு இவர் பூமாலை கட்­டும் உத்­தி­யைக் கற்­றுத்­தர இருக்கிறார்.

மேல்விவ­ரம் அறிய பொது­மக்­கள் https://mycommunityfestival.sg/ என்ற இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!