மேடை நாடகமாக அரங்கேறிய சுயசரிதை

எஸ். வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

உள்ளூர் தமிழ் வானொலி நிகழ்ச்சிகள், மேடை நாடகங்கள், தொலைக்­காட்சி நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு தளங்­களில் தடம் பதித்தவர் 75 வயது திரு

ரெ. சோமசுந்தரம்.

நாட­கங்­க­ளுக்கு எழுத்து, இயக்­கம், நடிப்பு என்று பல வழி­களில் ஐம்­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூர் கலைத்­து­றைக்­குப் இவர் பங்­க­ளித்­துள்­ளார்.

ஆனால் திரு சோமசுந்தரத்தின் படைப்­பு­களை ரசித்த பல­ருக்கு, அவ­ரது சொந்த வாழ்க்கையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திரு சோமசுந்தரம் தமது 11வது வய­தில் தமிழ்நாட்டில் உள்ள கும்­மங்­கு­டி­ எனும் ஊரிலிருந்து குடும்­பத்­தைப் பிரிந்து தனி­யாக சிங்­கப்­பூ­ருக்குக் கல்வி மற்றும் வேலை வாய்ப்­பு­க­ளைத் தேடி வந்­தார்.

படிப்பு உட்­பட செய்­தித்­தாள் விநி­யோ­கம், மளி­கைக் கடை வியா­பா­ரம் என்று இதர பல வேலை­

க­ளைச் செய்துகொண்டே நாட­கங்­க­ளி­லும் நடித்தார்.

1979ஆம் ஆண்­டில் வானொலிப் படைப்­பா­ள­ராகச் சேர்ந்­ததை அடுத்து, சிங்­கப்­பூர் கலைத்­து­றை­யில் முத்­தி­ரை பதிக்கத் தொடங்­கி­னார்.

இதுபோன்ற வாழ்க்­கைச் சம்­ப­வங்­களை துல்­லி­ய­மாக சித்­திரித்­தது அண்­மை­யில் அகம் மேடை­நா­ட­கக் குழு ஏற்­பாட்­டில் எஸ்­பி­ள­னேட் கலை­ய­ரங்­கில் நடை­பெற்ற ‘ரெ சோமா’ மேடை ­நா­ட­கம்.

“சுய­ச­ரிதை எழு­து­வது என்­பதே எளி­தான செயல் அல்ல. அதையே நாட­க­மாக்­கு­வது அதைவிட சவால்மிக்கது. என் வாழ்க்­கைப் பய­ணத்தை மேடை ­நா­ட­க­மாக படைக்க, அகம் குழு என்னை அணு­கி­ய­போது நுழை­வுச்­சீட்­டு­கள் விற்­ப­னை­யா­குமோ என்ற சந்­தே­கம் எனக்கு வந்­தது.

“ஆனால் பத்தே நாட்­களில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் விற்­ப­னை­யா­னது என்னை வியக்க வைத்­தது,” என்­றார் திரு சோம­சுந்­த­ரம்.

செப்­டம்­பர் 17 முதல் 19ஆம் தேதி வரை ‘ரெ சோமா’ நாடகம் ஐந்து முறை மேடையேறியது.

மொத்­தம் 250 பார்­வை­யா­ளர்­கள் நாடகத்தைக் கண்டு களித்தனர்.

“என் மகன் கார்த்­தி­கே­யன், இயக்­கு­நர் கணே­‌‌ஷு­டன் இணைந்து என் வாழ்க்­கைப் பய­ணத்­தைப் பற்றி எழுதி, என்­னைப் போல நடித்­ததைக் கண்­கூ­டாகப் பார்த்­தது என் பாக்­கி­யம். இறை­வன் எனக்குத் தந்த அருள். நடித்­த­வர்­கள் அனை­வ­ரும் சிறப்­பாக நடித்­த­னர்,” என்று கூறி­னார் திரு சோம­சுந்­த­ரம்.

தெருக்­கூத்து படைப்­பு­கள், மகா­பா­ரத இதி­கா­சத்­தில் வரும் துரி­யோ­த­னன் கதாபாத்­தி­ரத்தை நடிப்­பது போன்­றவை திரு சோம­சுந்­த­ரத்­திற்­குப் பிடிக்­கும்.

திரு சோம­சுந்­த­ரத்­தின் வெவ்­வேறு வாழ்க்­கைக் கட்­டங்­களில் வரும் முக்­கிய அம்­சங்­கள் கவ­ன­மாக நாட­கத்­தில் உள்­ள­டக்­கப்­பட்­டன என்­றார் திரு கணே‌ஷ்.

“பல­ரும் சுய­ச­ரி­தை­களை நூல்

களாக எழு­து­கி­றார்­கள். அதை ஏன் மேடை நாட­க­மாக படைக்­கக்

கூடாது என்று யோசித்­தேன். சிங்­கப்­பூர் கலை­ஞர்­களில் கவ­னம் செலுத்தி அவர்­க­ளின் வாழ்க்­கைப் பய­ணங்­களை மேடைக்கு கொண்டு வர­வேண்­டும் என்­பது அகம்

நாட­கக்­ கு­ழு­வின் இலக்கு.

“அடுத்த 20 ஆண்­டு­களில் 10, 15 கலை­ஞர்­க­ளின் சுய­ச­ரி­தை­களை மேடை நாட­க­மாகப் படைக்­க­லாம்,” என்­றார் திரு கணே‌ஷ்.

29 வயது திரு ஜே.எஸ்.சசி­கு­மார் நாட­கத்­திற்­குத் தேவை­யான ஆய்வு, எழுத்து, சுவ­ரொட்டி உரு­வாக்­கம் ஆகி­ய­வற்­றில் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்­திலி­ருந்து ஈடு­பட்­டார்.

“முதல் சுவ­ரொட்­டி­யைத் தயா­ரிக்க கணே‌ஷ், கார்த்­தி­கே­யன் ஆகிய இரு­வ­ரு­டன் ஸூம் தளம் வாயி­லாக நான்கு மணி நேரம் கலந்­து­ரை­யா­டி­னேன்.

“சுவ­ரொட்டி எத்­த­கைய உணர்வு­ களை வெளிப்­ப­டுத்த வேண்­டும் என்­பது குறித்து நாங்­கள் ஆராய்ந்­தோம். ஒரு வழக்­க­மான நாட­க­மாக ‘ரெ சோமா’ இருக்­கக்­கூ­டாது என்று ஆரம்­பத்­தி­லேயே நாங்­கள் முடி­வு­எடுத்­தோம்,” என்­றார் சசி.

நாட­கத்­தைப் பார்த்­த­வர்­கள் அதை வெகு­வா­கப் பாராட்­டி­னர்.

“ஒரு கலை­ஞ­ரின் சுய­ச­ரி­தை­யைத் தமிழ் மேடை நாட­க­மாக இதற்­கு­முன் பார்த்த நினைவு இல்லை. அது­மட்­டு­மல்­லாது, மகனே தந்­தை­யின் சுய­ச­ரி­தையை எழுதி, அவர் பாத்­தி­ரத்தை ஏற்று நடித்­த­தி­லும் இந்த நாட­கம் தனிச் சிறப்பு வாய்ந்­தது என்றே சொல்ல வேண்­டும். நாட­கத்­தில் நடித்த அனைத்­துக் கலை­ஞர்­களும் மிக அரு­மை­யாக நடித்­த­னர்.

“புத்­தாக்க முறை­யில் இந்த நாட­கத்தை இயக்­கிய சுப்­ர­ம­ணி­யம் கணேஷ், கார்த்­தி­கே­யன் இரு­வ­ரை­யும் எவ்­வ­ளவு பாராட்­டி­னா­லும் தகும்,” என்­றார் தேசிய நூலக வாரி­யத்­தின் தமிழ் மொழிச் சேவை­கள் பிரி­வின் தலை­வரும் நிகழ்ச்­சி­யின் பார்­வை­யா­ள­ரு­மான திரு அழ­கியபாண்­டி­யன், 57.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!