தமிழில் பேசவும் பாடவும் ஊக்குவிப்பு

ஜாலான் புசார் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­குழு, முஸ்­லிம் லீக் (சிங்­கப்­பூர்) சமூக நல்­லி­ணக்க சேவை அமைப்­பின் மொழி மற்­றும் இலக்­கி­யப் பிரி­வான இளம்­பிறை இலக்­கிய வட்­டம் ஏற்­பாட்­டில் பேசும் கலை வளர்ப்­போம் மன்­றம், மாண­வர்­கள், பெரி­ய­வர்­கள் என அனைத்­துத் தரப்­பி­ன­ரும் பங்­கு­பெ­றும் நிகழ்ச்­சியை மாதந்­தோ­றும் தொடர்ந்து நடத்தி வரு­கிறது.

மேடை­யில் பேச ஆர்­வம் இருந்­தும் வாய்ப்பு இல்­லா­த­வர்­க­ளுக்கு இத்­த­ளம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

மாண­வர்­கள் தமி­ழில் பேச­வும் பாட­வும் ஊக்­குவிக்­க­வும் தமிழ்­மொழி என்­றென்­றும் நம் நாவி­லும் இல்­லங்­க­ளி­லும் ஒலித்­துக்­கொண்டே இருக்­க­வும் இந்த முயற்சி மேற்­கொள்­ளப்­ப­டு­கிறது.

கடந்த செப்­டம்­பர் மாதம் 19ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 11 மணிக்கு மெய்­நி­கர் தளம் மூலம் பேசும் கலை வளர்ப்­போம் நிகழ்ச்சி நடை­பெற்­றது. 24வது முறை­யாக இந்த நிகழ்ச்சி நடத்­தப்­பட்­டது.

அமைப்­பின் தலை­வர் மு. ஜஹாங்­கீர் தலை­மை­யில் நடை­பெற்ற நிகழ்­வில் சிறப்பு விருந்­தி ­ன­ராக சமூக அடித்­த­ளத் தலை­வ­ர் திரு நிஜா­மு­தீன் பிபி­எம் கலந்­து­கொண்­டார்.

பேச்­சா­ளர்­கள் எவ்­வாறு தங்­க­ளைத் தயார்­ப்ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­பது குறித்து அவர் ஆலோசனை வழங்கினார். மேலும் கடைப்­­பி­டிக்க வேண்­டிய உத்­தி­க­ளைப் பற்­றி­யும் அவர் பேசி­னார். இளம்­பிறை இலக்­கிய வட்­டத்­தின் பணி­க­ளை அவர் பாராட்­டி­னார். சிறப்புப் பேச்­சா­ள­ராக தான்­சா­னியா நாட்­டில் 'தமிழ் ஆப்­பி­ரிக்கா' அமைப்பை நிறுவி சமூக சேவை­யும் தமிழ்ப்­ப­ணி­யும் ஆற்றி வரும் திரு­மதி நாச்­சி­யார் கலந்­து ­கொண்­டார். 'சிறகு இருந்­தால் போதும், சின்­ன­து­தான் வானம்' என்ற தலைப்­பில் அவர் சிறப்­பு­ரை­ ஆற்­றி­னார்.

முன்­ன­தாக, வர­வேற்­புரை நிகழ்த்­திய ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் துணைத் ­த­லை­வ­ரு­மான திரு முஹம்­மது பிலால், தமிழ்­மு­ரசு நாளி­தழ், சிங்­கப்­பூர் தமி­ழா­சி­ரி­யர் சங்­கம் மற்­றும் தமிழ்­மொழி கற்­றல் வளர்ச்­சிக்­ குழு ஆகிய அமைப்­பு­கள் இணைந்து வழங்­கிய நல்­லா­சி­ரி­யர் விருதைப் பெற்ற ஆசி­ரி­யர் பெரு­மக்­க­ளுக்கு வாழ்த்துகளைத் தெரி­வித்தார், பிறகு மாதந்­தோ­றும் மூன்­றாம் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் நடை­பெ­றும் பேசும் கலை வளர்ப்­போம் நிகழ்­வில் பேச்சு, பாடல், கவிதை எனத் தங்­கள் திற­மை­களை வெளிப்­ப­டுத்­தும் மாண­வர்­க­ளுக்கு சான்­றி­தழ்­க­ளோடு சிறிய ஊக்­கப் பரி­சும் வழங்­கப்­ப­டு­கிறது என்­ப­தைச் சொல்லி, மாண­வர்­கள் பங்­கேற்க அழைப்பு விடுத்­தார்.

மாண­வர்­கள் சேது மாத­வன், ஸ்வேதா மணி­கண்­டன், யாழினி கம­லக்­கண்­ணன், முஹம்­மது ஷேக் ஷஹீம் ஆகி­யோ­ரு­டன் பெரி­ய­வர்­க­ளான திரு­மதி வெண்­ணிலா அசோ­கன், திரு முரளி வைத்­தி­ய­நா­தன், திரு அப்­துல் சுப­ஹான், திரு கார்த்­திக் சிதம்­ப­ரம், திரு­மதி மஹ்­ஜ­பீன் ஆகி­யோர் வெவ்­வேறு தலைப்புகளையொட்டிப் பேசி­னர்.

கவி­ஞர் வேலம்­பு­துக்­குடி பரீஜ் எழு­திய பாடலை நாகூர் தெள­லத் மியான் இசை­ய­மைத்து திரு பாவா ஜலா­லுத்­தீன் பாடிய காணொளி காண்­பிக்­கப்­பட்­டது. செய­லா­ளர் கவி­ஞர் அஷ்­ரப் நன்­றி­யுரை ஆற்­றி­னார்.

மெய்­நிகர் தளம் வழி­யாக 40க்கும் மேற்­பட்­டோர் இணைந்த நிலை­யில், ஃபேஸ்புக் மற்­றும் யூடி­யூப் மூல­மாகப் பலர் நிகழ்ச்சியைக் கண்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!