கொவிட்-19 காலக் கொண்டாட்டம்: மிளிரும் மரபுடைமை நிலையம், வாடாத 100,000 மலர்கள்

கொவிட்-19 காலத்­தி­லும் தீபாவளிக் கொண்­டாட்ட உணர்வை மக்­க­ளுக்கு ஏற்­ப­டுத்த முயற்­சி­கள் தொடர்ந்து நடந்து வரு­கின்­றன.

அதன் ஒரு பகு­தி­யாக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் வண்ண அலங்­கா­ரங்­கள் பளிச்­சென காணப்­ப­டு­கின்­றன. தீபா­வளி தொடர்­பான மர­பு­களை விளக்­கும் கண்­காட்­சிக்­கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டது.

கிளைவ் ஸ்த்­ரீட்­டில் நேற்று நூறா­யி­ரம் வாடாத வண்­ணப் பூக்கள் தீபா­வளி அலங்­கா­ர­மாக நேற்று மலர்ந்­தன.

லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம், மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை ஆகி­ய­வற்­று­டன் திரு­மதி விஜயா மோகன் தலை­மை­யி­லான தொண்­டூ­ழி­யர்­கள் ஆகி­யோ­ரின் கூட்டு முயற்சி இது. 55 சமூக மன்­றங்­க­ளின் இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழுக்­கள், 15 அமைப்­பு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் இவற்­றைத் தயா­ரித்­த­னர்.

பழைய செய்­தித்­தாட்­கள் பூக்­க­ளாக வடி­வ­மைக்­கப்­பட்டு பின்­னர் அவற்­றுக்கு வண்­ணம் பூசப்­பட்­டது. சிங்­கப்­பூர் சாதனை புத்­த­கத்­தில் இம்­மு­யற்சி இடம்­பி­டித்­துள்­ளது.

நேற்று அலங்­கா­ரப் பூக்­களை வைக்­கும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­டார் செம்­ப­வாங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விக்­ரம் நாயர்.

படங்­கள்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ், லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் மர­பு­டை­மைச் சங்­கம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!