உடல் வருத்தி உழைப்பவர்களின் மென்மையான கோலங்கள் தமிழரை ஒன்றிணைக்கும் தைத்திருநாள்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

 

லிட்­டில் இந்­தியா பொங்­கல் பண்­டிகை கொண்­டாட்­டங்­க­ளின் ஓர் அங்­க­மாக கோல­மி­டும் நிகழ்ச்சி வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­காக ஏற்பாடு செய்­யப்­பட்­டது.

முப்­பது ஊழி­யர்­கள், ஐவர் கொண்ட ஆறு குழுக்­களாக 'சிங்­கா­ரங்­கோலி' எனும் வண்ணத் தூரிகை கோலத்­தைப் போட்­ட­னர்.

லி‌‌‌ஷா எனப்­படும் லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டைமைச் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் கடந்த வாரம் ஞாயிற்­றுக்­கி­ழமை கிளைவ் ஸ்திரீட்­, 'பொலி' கூடா­ரத்­தில் ஊழியர்கள் கோலமிடப் பழகினர்.

நிகழ்ச்­சியை சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி குமரன் தொடங்­கி ­வைத்­தார்.

வார­யி­றுதி வேலை விடுப்பு நாளில் நண்பர்­களு­டன் இணைந்து பொங்கல் கோலம் போட்டதில் ஊழி­யர்­கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்­த­னர்.

"இது­தான் நான் போடும் முதல் கோலம். மிகுந்த மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது. நண்­பர்­களு­டன் இணைந்து கோலம் போடும் இந்த வாய்ப்­பு கிடைத்தில் மகிழ்ச்சி," என்றார் நில­வ­னப்­புத் துறை­யில் மூன்று ஆண்­டு­க­ளாகப் பணி­யாற்­றும் திரு சந்­தி­ரன்.

பல வெளி­நாட்டு ஊழி­யர்­கள் ஒரு கையில் கோல­மிட்­டுக் கொண்டு மறுகையில் திறன்­பே­சி­யின் மூலம் காணொளி வாட்ஸ்­அப் தொடர்பு மூலம் தமிழ்­நாட்­டில் வசிக்­கும் தங்கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் உரை­யா­டி­னர்.

"இங்கே பாரு. நான் என்னா செய்­றேனு பாரு. கோலம் போடு­றேன்," என்று குதூ­கலத்­துடன் குடும்­பத்­தி­ன­ரி­டம் பேசினார் மேற்­பார்­வை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் திரு சீனி­வா­சன். அவ­ரது நிறு­வனத்­தைச் சேர்ந்த பல ஊழி­யர்­கள் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

கலந்­து­கொண்ட குழுக்­களில் ஒன்று, இல்­லப் பணி­ப்பெண்­களை உள்­ள­டக்­கி­யது. நண்­பர்­க­ளைச் சந்­தித்து உண­வ­ருந்­து­வது மட்­டு­மல்­லா­மல் நட­வ­டிக்­கை­யில் ஈடு­படு­வ­து­மூ­லம் நல்ல முறை­யில் செல­விட்­டது மன­திற்கு இத­மாக இருப்­ப­தாக குழு­வி­னர் தெரி­வித்­த­னர்.

பங்­கேற்­பா­ளர்­கள் மிகுந்த ஆர்­வத்­து­டன் ஈடு­பட்­ட­தைக் கண்டு மகிழ்ச்சி அடைந்­த­தாகக் கூறி­னார் லி‌‌‌ஷா­வின் தலை­வர் திரு சி. சங்க­ர­நா­தன்.

"இவ்­வ­ளவு திற­மை­களை வைத்­துள்­ளார்­கள் என்­ப­தைக் கண்டு வியப்­பாக இருக்­கிறது," என்­றார் அவர்.

ரங்­கோலி கோலத்­தில் பல சாத­னை­க­ளைப் படைத்த திரு­மதி விஜ­ய­லட்­சுமி மோகன் நட­வ­டிக்­கையை வழி­ந­டத்தி பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு உற்­சா­கம் ஊட்­டி­னார்.

பெரும் திரை­யில் வண்ண மைக­ளைக் கொண்டு தூரிகை வைத்து கோல­மி­டும் கலையை திரு­மதி விஜ­ய­லட்­சுமி அண்மை ஆண்­டு­க­ளா­கப் பிர­ப­லப்­ப­டுத்தி வரு­கி­றார். அதற்கு 'சிங்­கா­ரங்­கோலி' என்­றும் அவர் பெய­ரிட்டு அடை­யா­ளப்­ப­டுத்தி வரு­கி­றார்.

உழவருக்கும் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் நன்றிசொல்லும் திருநாளான தைப்பொங்கல்

நாடு, சமய பேதங்களின்றி தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் தமிழர் திருநாளாக சிங்கப்பூரில் கொண்டாடப்பட்டு வருகிறது. தைத்திருநாளை முன்னிட்டு சமூக அமைப்புகளும் நிறுவனங்களும் தை மாதம் முழுவதும் நாடெங்கும் நேரிலும் மெய்நிகரிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. சென்ற வாரம் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் சில இன்று இடம்பெறுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!