பொங்கல் சிறப்புப் பட்டிமன்றம்

தங்­ளின் சமூக மன்ற இந்­தி­யர் நற்­ப­ணிச் செயற்­கு­ழு­வும் சமூக மன்ற மேலாண்­மைக்­கு­ழு­வும் இணைந்து பொங்­கல் கொண்­டாட்­டத்தை நேரடி, மெய்­நி­கர் நிகழ்ச்சி ­க­ளாக ஏற்­பாடு செய்­தன.

கொண்­டாட்­டத்­தின் முக்­கிய நிகழ்­வாக ‘பண்­டி­கை­க­ளைக் கொண்­டா­டு­வ­தால் பண்­பாடு வளர்­கி­றதா? சேமிப்பு குறை­கி­றதா?’ என்ற தலைப்­பில் சிறப்­புப் பட்­டி­மன்­றம் நடை­பெற்­றது. பட்­டி­மன்­றத்­தின் நடு­வ­ராக திரு அ. முஹம்­மது பிலால் பங்­காற்ற, பண்­பாடு வளர்­கிறது என்ற அணி­யின் தலை­வ­ராக திரு­மதி காமாட்சி பால­மு­ரு­கன், அணி­யின் பேச்­சா­ளர்­க­ளாக திரு முரு­கை­யன், திரு சுரேஷ் கெள­ஷிக் வாதிட்­ட­னர்.

பண்­டிகை காலங்­க­ளில்­தான் பெரி­யோரை மதித்­த­லும், சிறி­யோர் மீது அன்­பு­செ­லுத்­து­த­லும் என்ற பண்பு முதற்­கொண்டு பல்­வேறு சிறப்­பான பண்­பு­ந­லன்­கள் புதுப்­பிக்­கப்­ப­டு­கின்­றன என பல்­வேறு தக­வல்­க­ளோடு விவா­தத்தை எடுத்­து­வைத்­த­னர்.

பண்­டி­கை­கள் கொண்­டா­டு­வதால் பண்­பாடு வளர்­கி­றதோ இல்­லையோ சேமிப்­பு தேய்­கிறது என தங்­கள் தரப்பு எதிர்­வா­தத்­தை­யும் அக்­க­றை­யை­யும் திரு­மதி மஹ்­ஜ­பீன் தலை­மை­யி­லான அணிப் பேச்­சா­ளர்­கள் குமாரி சேவாள், திரு புக­ழேந்தி ஆகி­யோர் எடுத்­து­ரைத்­த­னர்.

தமி­ழர் பண்­பாட்­டில் நல்­லொ­ழுக்­கம், ஈகை, தொண்­டூ­ழி­யம், உதவி, வீரம், அன்பு என பல்­வேறு கூறு­கள் உள்­ள­தை­யும், அவை பண்டிகைக் காலங்­களில் எவ்­வாறு வளர்­கின்றன என்­ப­தை­யும் அதோடு பண்­டி­கை­க­ளால் அதி­கப்­ப­டி­யான வீண்­செ­ல­வு­கள் ஏற்படுவதை­யும் இரு அணி­க­ளின் வாத, எதிர்வாதங் களில் இருந்து எடுத்­துக்­கூறி, கொண்­டாட்­டங்­களைச் சிக்­க­ன­மாகச் செய்து பண்­பாட்டை வளர்க்க பண்டி­கை­கள் பெரி­தும் உத­வு­கின்றன என கருத்­தும் கல­க­லப்­பும் கலந்த சிறப்­பான தீர்ப்பை நடு­வர் வழங்­கி­னார்.

நேர­டி­யாக அரங்­கத்­தி­லும் ஃபேஸ்புக் நேர­லை­யி­லும் ஏறக்­குறைய 250 பேர் இந்­நி­கழ்­வில் பங்­கேற்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!